அநேகமாக இந்தக் கிழங்கு வகைகள்—உருளை,சேனை,சேம்பு-
வேக வைத்துத் தோல் உரித்துப் பின் வதக்கும்போது ஒன்றோடொன்று சேர்ந்து உருத்தெரியாமல்
மொத்தையாகி விடும் அபாயம் உண்டு.குறிப்பாக சேப்பங்கிழங்கில் இந்த அபாயம் அதிகம்!
நான் விவேகானந்தா கல்லூரி விடுதியில்
இருந்த காலத்தில் வாராவாரம் இம்மூன்று கிழங்கு வகைகளும் சமையலில் இடம்
பெறும்.எப்போதுமே உருத்தெரியாத கோலம்தான்;ஆனல் சுவையில் குறைவிருக்காது.
சேப்பங்கிழங்கை ஒன்றோடொன்று சேர்ந்து கலவையாகி
விடாமல் இருக்குமாறு கறி(ரோஸ்ட் ) செய்வதெப்படி?
முதல்நாளே கிழங்கை வேகவைத்துத் தோல்
உரித்து,கொஞ்சம் புளி,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் இவை கலந்த கலவையில் பிரட்டி
எடுத்து,மறுநாள் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கிழங்கைப்
போட்டு வதக்கத் தொடங்குங்கள்.எண்ணெய் அதிகமாக விட்டால்தான் கிழங்கு நன்கு ரோஸ்ட்
ஆகும்!
இது என் பெண் சொல்லித் தந்த செய்முறை!
இன்று செய்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
கிழே..............
................
...............
75% வெற்றி;டேஸ்ட் சூப்பர்!
டிஸ்கி: இப்போதெல்லாம் வலைப்பூப் பக்கம்
வருவதேயில்லை!காரணம் இருக்கிறது. கவனிக்காமல் விட்டு விட்ட சில துறைகளில் என்
கவனம் மீண்டும் திரும்பியிருக்கிறது. முக்கியமாக,வேத பாராயணம் மற்றும் சோதிடம்! வலைப்பூப்
பக்கம் வராவிட்டாலும் + இல் எதையாவது கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்!இனி
தமிழ்மணத்தில் அதிக ஓட்டுக் கிடைக்காத ஞாயிறுகளில் மட்டுமாவது ஏதாவது எழுதலாம் என எண்ணியிருக்கிறேன்!
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நன்றாக இருக்கிறது ஐயா...
பதிலளிநீக்குடிஸ்கி : நீங்களுமா... (இந்த முடிவு...?!!!!!)
அதிக ஓட்டுக் கிடைக்காத ஞாயிறுகளில் மட்டுமாவது ஏதாவது எழுதலாம் என எண்ணியிருக்கிறேன்!//
பதிலளிநீக்குஏன் சார்? ஓட்டுன்னால பயம் வந்துருச்சா.... அவனவன் எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லிக்கிட்டு நாடு முழுசும் அலையறப்போ.....:))
பயனுள்ள சமயல் டெக்னிக்
பதிலளிநீக்குகற்றுக் கொள்வதில் கொஞ்சம்
பதிவிலும் கசிய விடுங்கள்
கொஞ்சம் தேறிக் கொள்கிறோம்
tha.ma 3
பதிலளிநீக்குஅதிக ஓட்டுக் கிடைக்காத ஞாயிறுகளில் மட்டுமாவது ஏதாவது எழுதலாம் என எண்ணியிருக்கிறேன்!//
பதிலளிநீக்குஏன் இந்த முடிவு... அடுத்த முறை சமைக்கும் போது முயற்சி செய்யனும்...
தலைப்பு கண்டு ஏற்பட்டது மலைப்பு! செய்தி விளங்கியது! ஞாயிறு என்றாலும் நான்
பதிலளிநீக்குஓட்டுப் போட்டேன்! அது மட்டுமல்ல! பதிவு எதுவானாலும் நான் பார்தால், படித்தால் யாருக்கும் ஓட்டும் , மறு மொழியும் போடாமல் இருந்த தில்லை! அது, ஊக்கப் படுத்த தானே!
ரைட்டு...
பதிலளிநீக்குகலக்குங்க தலைவரே...
எனக்கென்னவோ சேப்பங்கிழங்கு வறுவலுக்கும் சேப்பங்கிழங்கு மோர் குழம்புக்கும் வேறு எதுவும் ஈடு ஆகாது என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇடைவெளிக்குப் பின் நன்று.சேப்பக்கிழங்கு............ம்..ம்...!
பதிலளிநீக்குசேப்பக்கிழங்கு பொறியல் இதே முறையைத்தான் நான் பின்பற்றுவேன்...
பதிலளிநீக்குஅடிக்கடி எழுதுங்க ஐயா...
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பார்க்கவே சூப்பர். உங்க கேர்ள் ஃப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும். செஞ்சு பார்சல் பண்ணி அனுப்புங்க.
பதிலளிநீக்குசுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்.....எங்கள் வீட்டில் எல்லோருக்குமே மிகவும் பிடித்தது.
பதிலளிநீக்குடிஸ்கியில் இருக்கும் நியாயத்தை உணர்கிறேன். நல்ல விஷயம், தொடருங்கள்.
பதிலளிநீக்குமுடிந்தபோது நிச்சயம் எழுதுங்கள் ஐயா!
பதிலளிநீக்கு