தொடரும் தோழர்கள்
புதன், அக்டோபர் 02, 2013
சாந்தி நிலவ வேண்டும்
வாழ்கநீ எம்மான்,இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்ம!நீ வாழ்க! வாழ்க!
(பாரதியார்)
............................................................................................
சாந்தி நிலவ வேண்டும்.
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்,
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.
காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
கொடுமை செய் தீயோர், மனமது திருந்த
நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் – மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!
திடம் தரும் அகிம்சாயோகி நம்
தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!
(சாந்தி நிலவ வேண்டும்)
எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!
(இயற்றியவர்:சேதுமாதவராவ்)
.............................................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதே பாடலைப் பாடித் தான் நாங்கள் கல்லூரியில் பரிசு
பதிலளிநீக்குபெற்றோம். மீண்டும் ஒரு முறை இங்கு அதைப் பாடி மகிழ்ந்தேன் உங்களால்.
நன்றி.
பரிசு பெற்றுத் தந்த பாடல்!
நீக்குநன்றி ஸ்ரவாணி
வரிகள் அனைத்தும் நடக்க வேண்டும்...
பதிலளிநீக்குசேதுமாதவராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சாந்தி நிலவ வேண்டும் என்று நானும் உங்களோடு சேர்ந்து வேண்டிக்கொள்கிறேன். இன்றாவது தேசத்தந்தையை நினைவுகூர்வோம்!
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குசிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பதிலளிநீக்குஅருமையான கவிதைகளை பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
நீக்குகாந்தி ஜிக்கு ஜே!!
பதிலளிநீக்குஜே!
நீக்குநன்றி ஆவி
பாடல்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா....
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்குசாந்தி நிலவ வேண்டும்....
பதிலளிநீக்குகாந்தி ஜெயந்தி அன்று சரியான பாடல்.... நன்றி ஐயா.
நன்றி வெங்கட்
நீக்குஎங்கும் சாந்தி நிலவே வேண்டும்... பதிவர்களிடமும் :P
பதிலளிநீக்குஅதுவே என் ஆசையும்!
நீக்குநன்றி ஆத்மா
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
பதிலளிநீக்குசாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்...//
இதுதான் இன்றைய உலகின் முக்கிய தேவை.... எந்த காலத்துக்கும் பொருந்தி வர்றதுனாலதான் இத்தகைய கவிதைகள் காலம்வென்றவைன்னு சொல்றாங்க போலருக்கு. பகிர்வுக்கு நன்றி.
நன்றி ஜோசப் சார்
நீக்குகாந்தி ஜெயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு