தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்!--ஞாயிறு ஸ்பெசல்-மிளகு குழம்பு



சில ஆண்டுகளாகவே கேடரர்(caterer) ஒருவரிடமிருந்துதான் சாப்பாடு வாங்கி வருகிறோம். இது வரை மூன்று அல்லது நான்கு பேர் மாறிவிட்டார்கள்.ஆனால் மெனு ஒன்றே.தினம்,கறி கூட்டு, ரசம், வாரத்தில் ஐந்துநாட்கள் சாம்பார்,ஒரு நாள் வற்றல்குழம்பு.ஒரு நாள் மோர்க் குழம்பு. 

மாறுதலே கிடையாது.

சாதம் மட்டும் குக்கரில் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி மாறுதலுக்காக வாரத்தில் ஒரு நாள்,ஞாயிறன்று வேறு ஏதாவது,மிளகு குழம்பு, வெந்தயக் குழம்பு,துவையல் வகைகள்,பொரித்த குழம்பு,பிட்லை போன்றவை செய்து கொள்வதென ஒரு தீர்மானம்!

எத்தனை நாள் நடக்கிறதோ பார்க்கலாம்.

அந்த வரிசையில் இன்று,மிளகு குழம்பு,பருப்புத்துவையல்,வறுத்த வடாம்!

திருப்தியாக இருந்தது!


                                                              மிளகு குழம்பு

                                                       பருப்புத் துவையல்

                                                               வடாம்


செய்முறை:
.....................
...................
..........................

எத்தனையோ புத்தகங்கள்,எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன சமையல் பற்றி!

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

35 கருத்துகள்:

  1. குறும்புக்கார ஐயா :)))))) எல்லாப் படத்தையும் அழகாய் போட்டுக் காட்டிவிட்டு
    செய்முறையைச் சொல்வார் என்று பார்த்தால் நாம் எங்கெங்கோ எல்லாம்
    தேடிப்பிடித்து வாசித்துத் தெரிந்து கொள்ள வேணுமாம் ! இது எப்படி இருக்கிறது ?:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
      நன்றிஅம்பாளடியாள்

      நீக்கு
  2. வடாம் சூப்பர். மிளகு குழம்பு இன்னும் திக்காக நல்ல கருப்பு நிறமாக காரசாரமாக இருக்கணும். ஏதோ செய்தவரை சாப்பிட்டவரை OK. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் பாராவில் முதுமையின் இயலாமை வெளிப்பட்டாலும் சமாளித்து சமைத்து போட்டோ வும் பிடித்து கலக்கலாக பதிவாக இட்டது அருமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் இருவரே.நானும் என் அன்னையும்(95).வேறென்ன செய்ய?
      நன்றி

      நீக்கு
    2. புரிகிறது. கஷ்டம்தான் .என் அப்பாவும் 91 வயது வரை
      சமாளித்தார்கள் .கடைசி இரண்டு வருடம் உணவு கிடைத்தது ஆனாலும் நல்ல தன் ருசிக்கேற்ற உணவு கிடைக்காமல் கஷ்ட்டப்பட்டார்கள்

      நீக்கு
  4. மதுரை பக்கம் இன்னமும் அந்த மாதிரி
    வசதிகள் வரவில்லை
    ஆகையால் நளபாகம் சுயம்தான்
    படம் பார்க்க ஸூப்பராக சமையல்
    அமைந்த மாதிரித்தான் படுது
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    பதிவும் அருமை படங்களும் அருமை வாழத்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் மிளகு குழம்பும் சுட்ட அப்பளம் என்றால் உயிர். நான் வெளியூரில் தனியாக தங்கி இருந்த காலங்களில் சாம்பாருக்கு அடுத்தபடியாக வைப்பது இதைத்தான். அம்பிகா அப்பளக் கட்டும் எப்போதும் இருக்கும். சில சமயங்களில் பொட்டுக்கடலை துவையல். நேரம் கிடைத்தால் கருப்பு மூக்குக்கடலையில் அவித்து மிளகுக் குழம்புடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிடுவேன்... சூப்பராக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிகர் ஐயா நீங்கள்!
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
    2. சுவாரசியம் ஜோசப். பொட்டுக்கடலை துவையல் செய்து பார்த்துவிட வேண்டியது தான். செய்முறை.. வேணாம், கேட்க மாட்டேன்.

      நீக்கு
  7. நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள் படத்தை போட்டு! வீட்டம்மாவிடம் இப்போதே ஆர்டர் சொல்ல வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  8. நானும் சாப்பாடு ஸ்பெஷல் எழுத முடிவு பண்ணி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  9. மிளகுக் குழம்பு - சுட்ட அப்பளம் - செம காம்பினேஷன்.....

    கடையில் வைத்த குறும்பு - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. அனைத்தும் படங்களில் காட்டி நாவில் எச்சிலூறச் செய்து விட்டு செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பது உங்கள் குறும்பு மற்றும் எதார்த்தம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா...

    பதிலளிநீக்கு
  11. 8 ஆண்டுகள் ஹோட்டலில் சாப்பிட்டதால் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. எனவே எது இருந்தாலும் எனக்கு சம்மதமே!

    பதிலளிநீக்கு
  12. ;))) ஆஹா! நல்லா ஏமாந்தேன். அழகா படம் போட்டு ஆசையை வர வைச்சு செய்முறை மட்டும் கிடையாதா!
    சரி, தேடிப் பிடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஆ! செய்முறை இவ்ளோ சிம்பிளா இருக்குதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைவிட சிம்பிளா ஆக்க முடியலே!அதான்!
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  14. செய்முறை:
    .....................
    ...................
    ..........................

    எத்தனையோ புத்தகங்கள்,எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன சமையல் பற்றி!

    படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!//

    பித்தம் தெளிந்து விட்டது பித்தரே! குறும்பு! இனிக்கும் கரும்பு!

    பதிலளிநீக்கு