தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 30, 2013

ஒரு மரணம்!



”அண்ணே!விஷயம் தெரியுமா?”

“வெள்ளக்காளதானே?கேட்டு அதிர்ச்சியாயிட்டேன் தம்பி.நேத்துக் கூடப் பாத்தேனே!இது ஆறுமுகம் குடும்பத்துக்கு மட்டுமில்ல;நம்ம கிராமத்துக்கே பெரிய இழப்புதான்”

“நீங்க சொல்றது சரிதாண்ணே”

”பத்து மணிக்கு எடுத்துடுவாங்க போல,போய்ப்பாத்துட்டு வரணும்.”

“வாங்கண்ணே போலாம்.”

”ஒரு மாலையும் வாங்கிட்டுப் போயிடலாம்;பெரிய சாவில்லையா?”

ஆம்!அந்தக் கிராமம் முழுவதுமே அதிர்ந்துதான் போயிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம் கையில் மாலைகளோடு ஆறுமுகத்தின் வீடு நோக்கிச் செல்கிறது.

ஆறுமுகமும் அவர் சகோதரர்  ராஜாவும் மிகவும் துக்கத்தில் இருப்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது.

விசாரிப்பவரிடமெல்லாம் ஆறுமுகம் சொல்லிக் கொண்டிருந்தார்”இத்தனை வருசத்தில ஒரு நாக்கூட,ஒடம்பு சரியில்லன்னு படுத்ததில்ல.காலைல எந்திருச்சிப் பாக்கேன்,உயிரில்ல.சிவன் கூப்பிட்டுக் கிட்டாரு போல.இதோ இந்த அறையில இருக்கே,கோப்பைகள்,கேடயங்கள் எல்லாம் போட்டிகளில பரிசா வாங்கினவை.எல்லாரும் பாக்கட்டும்னுதான் தெறந்து வச்சிருக்கேன்.  இந்த எழப்ப எங்களால தாங்கவே முடியலை”

பகிர்ந்து கொண்டால் கொஞ்சம் சோகம் குறைய வேண்டும்.மாறாக அதிகமாகிறது.

உடலை எடுக்கும் நேரம் வந்து விட்டது.

உடல் வாசனை நீரில் நீராட்டப்பட்டு,புதுத் துணிகள் அணிவிக்கப்படுகிறது .பாட்டு ,கூத்து , தாரை  தப்பட்டை முழங்க,வேட்டுச் சத்தம் அதிர இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

ஊரெல்லாம் பின் செல்ல , மயானம் அடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு சகாப்தம் முடிந்தது!

……………………………………………….
திருச்சி அருகில் உள்ள சூரியூரில் வெள்ளைக் காளை என்ற ஜல்லிக்கட்டுக் காளை ஞாயிறன்று காலை 8 மணிக்கு மரணம் அடைந்தது!ஜல்லிக்கட்டில்தங்களைக் கலங்க அடித்த காளையின் மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்தினர்.500க்கும் மேலானவர் மாலைகளுடன் வந்து இறுதி மரியாதை செய்தனர்.1997 இல் ரூபாய் 70000/=க்கு வாங்கப்பட்ட காளை அன்று முதல் பல ஜல்லிக் கட்டுகளில் வெற்றி பெற்றுப் பிரபலமானது.அதன் சமாதியில் ஒரு கோவில் கட்ட அக்குடும்பம் தீர்மானித்திருக்கிறது!--(டைம்ஸ் ஆஃப் இந்தியா 30-09-2013)




24 கருத்துகள்:

  1. இது ஏதோ உட்குத்து கதை மாதிரி இருக்கே...அய்யா....அப்படியா?

    பதிலளிநீக்கு
  2. பதிவின் ஆரம்பம் ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. ஆனால் முடிவில் அது சோகமான செய்தி என்ற போது வருத்தப்படாமல் இருக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  3. பதிவு செய்த விதம் அருமை
    வாழ்வாங்கு வாழ்ந்தது அதுவும்தான்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எனக்கு வேற ஏதோ நினைக்கத்தோணுது

    பதிலளிநீக்கு
  5. பாசமாய் வளர்த்த மாட்டின் இழப்பு...
    வருத்தமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. வீரத்திற்கும் மரணம் உண்டு இல்லையா தல ?

    பதிலளிநீக்கு
  7. துவக்கத்துலயே வெள்ளக்களதானே என்ற வார்த்தை மட்டும் வரவில்லையென்றால் இறந்தது ஒரு மனிதர் என்றே அனைவரையும் நினைக்கத் தூண்டும் வகையில் அருமையான ஒரு குட்டி மர்மக் கதை... அதுவும் ஒரு மிகச் சாதாரணமான செய்தி துகளை வைத்து.... அருமை சார்... என்னோட க்ரைம் நாவல படிக்கிறீங்களா?

    பதிலளிநீக்கு
  8. தங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்த காளைக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி நன்றி பாராட்டி விட்டார்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. மாடுகளின் மரணமும் மனிதனின் மரணத்துக்கு சமமாக மதிக்கப்பட்டது நெகிழவைத்தது. செய்தியை நெகிழ்வான கதையாக மாற்றிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு