தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 05, 2013

அப்பம் தின்னலாமா?குழி எண்ணலாமா?!



நாம் பல நேரங்களில் கையில் இருக்கும் செய்ய வேண்டிய வேலையை விட்டு விட்டு, வேண்டாதவற்றைச் செய்து நாமும் நொந்து பிறரையும் நோகடித்துக் கொண்டிருக்கிறோம். 

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு-”அப்பம் தின்னால் மதி,குத்தெண்ணண்டா”

அதாவது தின்பதற்கு அப்பம் கொடுத்தால் அதைத் தின்ன வேண்டும்;தின்றபின் அதன் சுவை பற்றிக் கருத்துச் சொன்னால் அது தொடர்புள்ள செயல்;அதை விடுத்துஅப்பத்தைக் கையில் வாங்கி அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டிருப்பது எவ்வளவு பயனற்ற செயல்.

எனவேதான் அந்தப்பழமொழி சொல்கிறது”அப்பம் தந்தால் அதைத் தின்றால் போதும்;அதில் இருக்கும் ஓட்டைகளை எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்!:

மனோன்மணியம் யாத்த சுந்தரனார் அவர்கள் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்.

நாஞ்சில் நாட்டில் கேரளப் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல. தமிழும் மலையாளம் கலந்தே இருக்கும்.

அவர் தனது நூலில் இந்தப் பழமொழியை எடுத்தாள்கிறார்,

மனோன்மணி ஒரு இடத்தில் சொல்கிறாள்”அப்பம் தின்னவோ,அலால் குழி என்னவோ?”. அவளது நிலை பற்றி அவ்வாறு கூறுகிறாள்(நான் பட்டப் படிப்பில் படித்த நூல் மனோன்மணீயம்).

அப்போதெல்லாம் பட்டப்படிப்பில் இரு ஆங்கில நாடகங்கள்-ஷேக்ஸ்பியர்-ஆங்கிலப் பாடத்தில் உண்டு.நான் படித்தவை As you like it மற்றும் Othello.ஒரு இன்பியல் நாடகம்,ஒரு துன்பியல் நாடகம்.பல கல்லூரிகளில் ஷேக்ஸ்பியர் நடத்துவதில் சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரத்தத்திலகம் படத்தில் வரும் ஒதெல்லொ நாடகத்தில் சிவாஜிக்குப் பேசியிருந்தார்.அது போலவே ராஜ பார்ட் ரங்கதுரையின் ஹாம்லெட் டும் .ஒதெல்லோவில் வரும் அந்த “it is the cause,it is the cause my soul” என்ற வசனம் மறக்க முடியாதது. 

கல்வித் திட்டத்தில் தமிழ் நாடகம் என்றால் அது மனோன்மணீயம் மட்டுமே!


நமது பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் நமக்கு போதித்த பல ஆசிரியர்களில், சிலரை நம்மால் மறக்க முடிவதில்லை.என்னைப் பொறுத்தவரை எனக்கு சிவகாசிப் பள்லியில்  ஆங்கிலம் கற்பித்த பசுபதி அவர்களும்,தமிழ் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.என்னுள் மறைந்திருந்த நடிப்பு ,பாட்டு,பேச்சு என்று பல திறமைகளை வெளிக் கொணர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள்.  

உத்தமபாளையம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் சண்முகசுந்தரம் அவர்களும் என் நினைவில் நிற்பவர்.இவர்கள் மட்டுமல்ல;எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே என்றும் வணங்கத்தக்கவர்கள்.  எனக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே !

இறைவனே குருவின் பெருமையை நமக்கு உணர்த்தி விட்டான்!

கற்பவன் இறைவனே ஆயினும்,கற்பிப்பவன் அவன் மகனே ஆயினும்,குருவிடம் சீடன் வணங்கித்தான் கற்க வேண்டும்!

இந்த ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

குருவே சரணம்!

டிஸ்கி:தற்போது விழாக்களில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்பதும் இடம் பெற்ற நூல் எது என்பதும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்!

22 கருத்துகள்:

  1. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

    ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர் தின சிறப்புப் பதிவு அருமை
    உடன் சேர்க்கையாக அரிய தகவல்களையும்
    சொல்லிப்போனது மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான ஆசிரியர் தின பதிவு

    பதிலளிநீக்கு
  5. இந்த ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

    ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியர் நாள் நல் வாழ்த்துக்கள்!மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களை இன்று நினைக்க வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. என்னுள் மறைந்திருந்த நடிப்பு ,பாட்டு,பேச்சு என்று பல திறமைகளை வெளிக் கொணர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள். //

    அட! உங்களுக்குள்ள இதெல்லாம் இருக்கா? பதிவர் கூட்டத்துல தனித்தன்மையை காட்டியிருக்கலாம்... வயசாயிருச்சின்னு நினைச்சிட்டீங்களோ? ஆனா மனசு இன்னும் இளமையாவே இருக்குங்கறதத்தான் உங்களோட பல பதிவுகள்ல பாக்கறமே! ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் என் பழைய இடுகைகளைப் பாருங்கள்!
      http://chennaipithan.blogspot.com/2009/03/1.html
      http://chennaipithan.blogspot.com/2009/03/2.html

      நன்றி

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அய்யா, காலம் பல கடந்து போனாலும் என்றும் மனதில் இடம் பிடிப்பவர்கள் ஆசிரியர்கள்.. அவர்கள் வணங்கி போற்றுவது நமது கடமை. அரிய தகவலுக்கும், பகிர்வுக்கும் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  11. அஸ்க்கு புஸ்க்கு ..உங்க டிஸ்கிக்கு விடைஎனக்கு தெரிந்தாலும் சொல்ல மாட்டேனே !

    பதிலளிநீக்கு
  12. கவிஞர்கள் கலந்து கொள்ளட்டும்!
    நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு