சிங்காரச் சென்னை தன் பழைய
அடையாளங்களில் பலவற்றை இழந்து நிற்கிறது.அப்படி
மறைந்துபோன பல அழகிய,இடங்களில் ஒன்று
அந்தக்காலச் சிறிய சாந்தோம் கடற்கரை.
என் நண்பர்களுடன்,கல்லூரி
விடுதியிலிருந்து கச்சேரி சாலை வழி நடந்தே சென்று,
சாந்தோமில் அமர்ந்து,அரட்டையடித்து,சுற்றும்
முற்றும் பார்த்து,கிளிஞ்சல் பொறுக்கி,
திரும்ப எறிந்து ,ரெகுலர்
காதலர்களைப் பார்த்துக் கமெண்ட் அடித்து மகிழ்ந்த காலம்
ஒன்றிருந்தது.அன்று
பார்த்த ஒரு காதலன் இன்று என்ன எழுதுவான்?அதுதான்
இக்கவிதை!...........
”எங்கே போனாய் என் இனிய சாந்தோம்
கடற்கரையே?
சிங்கார மாலைகளில் மங்கையவள் அருகிருக்க
பொங்கும் கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆசி தர
எங்களைச் சுற்றி என்னென்ன நடந்தாலும்
கொஞ்சமும் கவலையின்றி விழியொடு விழி பார்த்து
நெஞ்சங்கள் கலந்து மகிழ்ந்ததற்கு நீ சாட்சி.
அதற்கு மட்டுமல்ல,அன்றொரு நாள்
அழுதபடி வந்து அவள் பிரிகின்ற சேதி சொல்லி
ஆறாத சோகத்தில் என்னை ஆழ்த்தியதற்கும் நீ சாட்சி!
ஆனால் இன்றோ!
அழகான கடற்கரை நீ இல்லாமல் போனதற்கு
பழைய நினைவுகள் சுமக்கும் நானும் ஒரு சாட்சி!”
..................................................................................
அருமை ஐயா....
பதிலளிநீக்குநன்றி டி டி
நீக்குஅழுதபடி வந்து அவள் பிரிகின்ற சேதி சொல்லி
பதிலளிநீக்குஆறாத சோகத்தில் என்னை ஆழ்த்தியதற்கும் நீ சாட்சி!//வருத்தம்தான்
என்ன செய்ய முடியும்?
நீக்குநன்றி கவியாழி
கடற்கரையைப்போன்ற அழகு உங்கள் கவிதையும்...
பதிலளிநீக்குநன்றி தேவா
நீக்குஉங்கள் வருத்தம்
பதிலளிநீக்குதங்கள் கவிதை மூலம் இப்போது
எங்களுக்குள்ளும்...
மனம் தொட்ட பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அந்தப்பக்கம் செல்லும்போதெல்லாம் மனம் வலிக்கிறது!
நீக்குநன்றி ரமணி
tha.ma 6
பதிலளிநீக்குநன்றி
நீக்குகவிதை அழகு !
பதிலளிநீக்குநன்றி ஸ்ரவாணி
நீக்குarumai ..ayyaa..
பதிலளிநீக்குநன்றி சீனி
நீக்குகூவம் கூட நல்லா இருந்ததாமே.. திரைப்படங்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இயற்கையை பாதுகாக்க தவறிய சமூகக் குற்றவாளிகள் நாம்தான்..
பதிலளிநீக்குஉண்மை ஆவி
நீக்குநன்றி
சாந்தோம் பீச் மட்டுமா ஒரு காலத்துல ராயபுரம் பீச், ஹைகோர்ட் பீச்னுல்லாம் இருந்துதே அதெல்லாம் கூடத்தான் காணாம போயிருச்சி.
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்தவரை நினைவுகளில் கலந்த ஒரு சின்னம் அது!
நீக்குநன்றி சார்
அய்யாவிற்கு வணக்கம், கவிதை தன் காதலையும் இயற்கையையும் தொலைத்த சோகத்தை அழகாகக் காட்டுகிறது. இயற்கையைத் தொலைத்து விட்டு இரங்கற்பா பாடப்போகிறோம் என்பதை இயல்பாக தெரிவித்தமைக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குநன்றி பாண்டியன்
நீக்குஅருமையான நினைவுகள்...வாழ்த்துக்கள்! நானும் அந்த இடத்தில போனதுண்டு..மனிதன் ஒரு சுயநல வாதியாக இயற்கையை சீரழிக்கிறான் என்பது உண்மை..
பதிலளிநீக்குhttp://muthaleedu.blogspot.com
நன்றி rama
நீக்குஅந்த பீச் எப்படி ஐயா காணாமல் போனது ??
பதிலளிநீக்குபீச்சைக் காணோம் என்று யாரும் புகார் தரவில்லையா??
அங்கு இப்போது குப்பம் இருக்கிறது
நீக்குநன்றி
சூப்பர் ஐயா,
பதிலளிநீக்குகடற்கரை என்ன முடிந்தால் கடலையே காணாமல் போகச் செய்துவிடுவார்கள் நம்மவர்கள்
ஆம் முரளி
நீக்குநன்றி
எனக்கு தெரிந்ததெல்லாம் மெரீனா மற்றும் பெசன்ட் நகர் கடற்க்கரை தான். முதன் முறை சாந்தோம் கடற்கரை பற்றி அறிகிறேன்
பதிலளிநீக்குஇன்று கூட்டமாக இருக்கும் பெசண்ட் நகர் கடற்கரையே அக்காலத்தில் தனிமையாக இருக்கும்,எலியட்ஸ் பீச் என்ற பெயரில்!
நீக்குநன்றி ரூபக்
சென்னை பித்தனை இன்னும் காதல் பித்தனாக இருக்க வைத்திருக்கும் அந்த காணாமல் போன கடற்கரைக்கு நன்றி. இல்லாவிடில் நமக்கு ஒரு கவிதை கிடைத்திருக்குமா?
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமை. நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி பாலாஜி பாரி
நீக்குஅருமை. நன்றிகள்.
பதிலளிநீக்கு