தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 02, 2013

பதிவர் திருவிழாக்கள்--உரத்த சிந்தனை!பதிவர் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.புலவர் ஐயாவுடன் என்னையும் மேடையில் ஏற்றி,முன்னிலை வகித்தல் என்ற ஒரு பணியை அளித்து,சால்வை அணிவித்துப் பெருமைப் படுத்திவிட்டார்கள். 

அதனால்தான் எனக்குள் ஒரு குற்ற உணர்வு,நாள் முழுவதும் அங்கு இருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணி .

ஆனால் என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் எனக்கு இருக்கும் சில கடமைகள்; அவற்றுக்கு எப்போது முன்னுரிமை அளிக்கவே நான் விரும்புகிறேன்.  

இருப்பினும்,அனைத்துப் பதிவர்களுடன் நாள் முழுதும் கலந்துரையாட முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

திருவிழா மிகச் சிறப்பாக நடை பெற்றது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. 

கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடனும் முழுத் திருதிப்யுடனுமே வீடு திரும்பியிருப்பர்

பொதுவாகப் பதிவர் திருவிழாக்கள் குறித்து என் சில எண்ணங்கள்

விழாவில் விருந்தினர் சிறப்புரை என்பது அவசியமா?

விழாவின்  முக்கிய நோக்கம் பதிவின் மூலம் மட்டுமே பழகி நட்பை வளர்த்துக் கொண்ட பதிவர்களுக்கு நேரில் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்புக் கொடுப்பதே.

மேடையில் ஏறி ,சிறு அறிமுகம் செய்து கொண்டு இறங்கி விட்டால் அது நிச்சயம் போதாது.

பதிவர்கள் வெறும் பார்வையாளர்களாகி விடாமல்,பங்கேற்பவர்களாகவும் இருக்கும் படி நிகழ்ச்சிகள் அமைதல் நலம்.


எனவே பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடலுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.  

என்ன மாதிரி நிகழ்ச்சியாக அமைக்கலாம் என்பதை யோசித்துத் தீர்மானிக்கலாம். இண்டிப்ளாக்கர் சந்திப்பில் சில நிகழ்ச்சிகள் அமைத்திருப்பார்கள்.அது போல் ஏதாவது செய்யலாம்.பதிவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு இடம் தரலாம்.

பதிவர்களுக்கு எழும் பதிவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ‘பிளாக்கர் நண்பன்’ பாசித் போன்றவர்கள் விளக்கமளிக்கலாம்;ஏற்கனவே விளக்கம் அவர்கள் பதிவில் இருந்தால் அதற்கான சுட்டி அளிக்கலாம்

புத்தக வெளியீடு என்பது , தவிர்க்க இயலாத நிகழ்ச்சியாகி விட்டது.ஏனெனில் பதிவர் களுக்கு தங்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு இதை விட சிறந்த களம் ஒன்று இருக்க முடியாது.

எனவே இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சியே!

இவை எனது சில கருத்துக்களே; இவற்றிலும் குற்றம் குறைகள் இருக்கலாம்.

ஆனால் புதிய சிந்தனைகள் பிறப்பதற்கு இதை ஒரு தொடக்கமாக அளிக்கிறேன்.

மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது  உழைத்துத் திருவிழாவை இமாலய வெற்றி பெறச் செய்த குழுவினருக்கு,இந்த வெற்றியேதான் பரிசு!

வாழ்த்துகள்!

37 கருத்துகள்:

 1. தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் ஆலோசனைகள் ஏற்கத்தக்கவை.

  பதிவுகளில் இடம்பெறும் குறை நிறைகள் பற்றியும் யார் மனமும் புண்படாத வகையில் விவாதிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்டு இருக்கலாம்...

  இருந்தாலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் : dindiguldhanabalan@yahoo.com

  சுட்டியை தருகிறேன்....

  பதிலளிநீக்கு
 4. //பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடலுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.....
  பதிவர்களுக்கு எழும் பதிவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ‘பிளாக்கர் நண்பன்’ பாசித் போன்றவர்கள் விளக்கமளிக்கலாம்;ஏற்கனவே விளக்கம் அவர்கள் பதிவில் இருந்தால் அதற்கான சுட்டி அளிக்கலாம்.//

  ஆக்கப்பூர்வ ஆலோசனைகள். அடுத்த பதிவர் சந்திப்பில் இதை செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 5. கலந்துரையடல்கள் பதிவர்களே ஏற்படுத்தி கொண்டனர். ஆம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். அரங்கில் கூட்டம் குறைவு

  பதிலளிநீக்கு
 6. பதிவர் சந்திப்பில் பதிவர்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஓரிரு வார்த்தைகளிலேயே முடித்துக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதுபோல் நானும் உணர்ந்தேன். சிறப்பு பேச்சாளர்களுடைய பேச்சின் தரமும் அந்த அளவுக்கு உயர்ந்திருக்கவில்லை என்பதும் என்னுடைய கருத்து.

  பதிவர்கள் ஒருவர் ஒருவரை நன்கு அறிந்துக்கொள்ள ஒரு கலந்துரையாடல் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். மேலும் இது ஒரு மனமகிழ் மன்றத்தின் மாநாடு என்பதுபோல்தான் இருந்தது என்பதும் என்னுடைய கருத்து. கருத்துள்ள பதிவுகளுக்கு தகுந்த வரவேற்பு இல்லை என்பதுபோல் ஒரு பதிவர் பேச முற்பட்டபோது நிகழ்ச்சியை நடத்தியவர் அவரை சட்டென்று போதும் என்பதுபோல் பேசியது சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியது.

  இது பதிவர்கள் சந்திப்பு. அவர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய் கருத்து.

  அன்று மாலை ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டியிருந்ததால் நானும் மதிய நிகழ்ச்சிகளில் பங்குபெற முடியாமல் போய்விட்டது. இரவு பகல் பாராமல் உழைத்து விழாவை சிறப்பாக நடத்த உறுதுணையாய் இருந்தவர்கள் பல இளம் பதிவாளர்கள். அவர்களைக் கூட அடையாளம் கண்டு பாராட்ட முடியாமல் போய்விட்டதில் வருத்தம்தான்.

  விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். அவர்களை முன் நின்று வழிநடத்திய உங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவம்தானே ஒரு ஆசானாகிறது!
   கருத்துக்கு நன்றி ஜோசப் சார்

   நீக்கு
 7. ஆமாங்க நிறைய பதிவர்கள் வந்திருந்தும் பார்த்து பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 8. அனுபவங்கள்தானே அடுத்த அடியை எடுத்துக் கொடுக்கின்றன...! நிச்சயம் புதிய சிந்தனைகள் உதயமாகும்.

  பதிலளிநீக்கு
 9. பதிவர் விழாப் பத்திப் பதிவேதும் காணோமேனு பார்த்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாரும் போட்டுத் தாக்கிட்டிருக்காங்க !
   நன்றி அப்பாதுரை

   நீக்கு
 10. விழாவில் நீங்கள் எல்லோரையும் உற்சாகப் படுத்தியது பெருமைக்குரிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கருத்துக்கள்தான் ஐயா!
  அடுத்த முறை இன்னும் பல புதிய சிந்தனைகளுடன் மிகவும் அறுமையாக விழா நடக்கும் என்ற மனத்திருப்தி இந்த திருவிழாவில் காணப்பெற்றதற்கான காரணம் நீங்கள் மற்றும் புலவர் ஐயாவின் வழிநடத்தலும் இளஞ்சிங்கங்களின் வேர்வைத் தியாகங்களுமே!

  பதிலளிநீக்கு
 12. தங்களிடம் நேரில் தொடர்பு கொண்டு எனது பதிலை சொல்லிவிட்டாலும்
  ஒன்று பின்னூட்டத்தின் மூலம் சொல்லவேண்டும்.

  நூற்றுக்கு இரு நூறு சரி. நீங்கள் சொல்லிய யாவையுமே.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் தொலை பேசியதில் எனக்கு மிக மகிழ்ச்சி.உற்சாகமாக உணர்கிறேன்
   நன்றி ஐயா

   நீக்கு
 13. உங்கள் ஆலோசனைகள் சிறப்பானவை! அடுத்தவிழாவில் குழுவினர் நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்! நன்றி! மதியம் வந்ததால் தங்களை சந்திக்கமுடியவில்லை!

  பதிலளிநீக்கு
 14. உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன ஆலோசனைகள் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் பதிவர்கள் சந்திப்பின்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எங்கள் வங்கியில் ஊழியர்களுக்கான பயிற்சியின்போது ” குழு உரையாடல் (GROUP DISCUSSION) “ நடத்துவார்கள். அதைப்போல ஒரு நிகழ்ச்சியை பதிவர்கள் சந்திப்பின்போது நடத்தலாம்.


  பதிலளிநீக்கு
 15. Same blood. பூனைக்கு மணி கட்டியாகிவிட்டது...எங்களை போன்றவர்கள் சொல்ல தயங்கிய கருத்து. தங்கள் மூலம் வெளிவந்ததற்க்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 16. தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தே
  என் கருத்தும்
  சந்திப்பு குறித்த நடுநிலையான
  விமர்சனப் பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 17. தங்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி..என்ன போட்டோ தான் எடுத்துக்க முடியல...

  பதிலளிநீக்கு
 18. சென்னை பித்தன் அய்யா,

  இப்போ தான் உங்க பதிவை பார்க்கிறேன்,நேர்பட சொல்லி இருக்கீங்க.மேலும் சிறப்பா சந்திப்பை நடத்த தலைமை ஏற்று வழி நடத்தி இருக்கீங்க,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  என்னய்யா இது நீங்க தான் தலிவர், நீங்க எதுக்கு பதிவு போட்டு இப்படி நடந்திருக்கலாம்னு சொல்லிக்கிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மெயில் செய்திருக்கலாம் போன் போட்டு பேசியிருக்கலாம்,ஆனால் பொது வெளியில் பதிவு போட்டு சொல்லலாமா , நிர்வாக்குழு கோவப்படுமே .இனிமே உங்க பாடு கஷ்டம் தான் கெரகாட்ட கோஷ்டி கட்டம் கட்டி கலாய்ப்போம்னு மிரட்டும், பட் யு டோன்ட் ஒர்ரி , ஐ'ம் வித் யு, ஐ சப்போர்ட் ஃபீரிடம் ஆஃப் எக்ஸ்பிரஷன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வவ்வால் அவர்களே!என் பதிவு நடந்து முடிந்த திருவிழா பற்றிய விமரிசனம் அல்ல.இனி வரும் சந்திப்புகளில் என்ன செய்யலாம் என்ற உரத்த சிந்தனை. இந்த சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் நானும் உடன்பட்டவன்தான்;விழாவின் வெற்றி பற்றி நான் அழுத்தமாகவே சொல்லி விட்டேன் அந்த வெற்றிக்கும் அதன் நிறைகளுக்கும் அய்யா தலைமையில் அயராது உழைத்த இளைஞர் படையே காரணம்.ஏதாவது குறைகள் இருக்குமானால் அதற்கு நானும் ஒரு முக்கியகாரணம்.எனவே யாரும் என்னைத் தவறகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
   நன்றி

   நீக்கு