தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2013

கலைஞரும்,மணிமேகலையும்,பூம்புகாரும்!



மணிமேகலை என்பவள் யார்?

ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை, சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம், ணிமேகலை, வளையாபதி,குண்டலகேசி என்பவை ஆகும்

சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்றழைக்கப்படுபவை

சிலப்பதிகாரத்தின் பின் வரும் கதையே மணிமேகலை.

சிலப்பதிகாரம் இல்லறத்தையும்,மணிமேகலை துறவறத்தையும் வலியுறுத்துகிறது.

மணிமேகலை என்பவள்,காப்பிய நாயகி,யார்?

மாதவிக்குக் கோவலனிடமாகப் பிறந்த மகள்.

துறவறத்தில் நாட்டம் கொண்டவள்.

அவள் மீது மோகம் கொண்ட உதயகுமாரனை உதறித்தள்ளி,புத்தத்துறவியாகி,மக்களின் பசியைத் தீர்ப்பதையே தன் கடமையெனக் கொண்டு வாழ்ந்த ஒரு மாதர் குல மாணிக்கம்.

தனக்குக் கிடைத்த அமுதசுரபியை மக்களின் பசிப்பிணி தீர்க்க  மட்டுமே பயன்படுத்தியவள் !

காதலன் இறந்தபின் துறவு பூண்டாள் அவள் தாய் மாதவி.

மணவாழ்வில் ஈடுபடாமலே துறவு பூண்டாள் மனிமேகலை.

இவர்களை நினைக்கும்போது எனக்குக் கே.பி.சுந்தராம்பாளை நினைக்காமல் இருக்க 
முடியவில்லை.

1926 ஆம் ஆண்டு அவருக்கும் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கும் திருமணம் நடந்தது.

1933இல் கிட்டப்பா  33 வயதில்காலமானர்.அப்போது கே.பி.எஸ்ஸின் வயது 25.

அந்த வயதிலிருந்தே வெள்ளைப் புடவை கட்டித் திருநீறணிந்து ஒரு துறவி போல் வாழ்ந்தவர் அவர்.

அவரை மணிமேகலைக்கு ஒப்பிடுங்கள்! நியாயம்!

கே பி எஸ் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல்

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தில் கேபிஎஸ் நடிக்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினாராம்;

ஆனால் சுந்தராம்பாள் அவர்களோ,அவர் பகுத்தறிவுவாதி ,நான் தெய்வ பக்தை எனவே நடிக்க முடியாது என்று மறுத்தாராம்.

பின்,தமிழுக்காக நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் ஒப்புக் கொண்டாராம். பின்னரும் பிரச்சினை!

கவுந்தி அடிகள் சமணத் துறவி.கேபிஎஸ்ஸோ நெற்றியில் திருநீற்றுப்பட்டை அணியாமல் இருக்க மாட்டார்.ஒரு சமணத் துறவி திருநீறு அணிவாரா? மிகுந்த சர்ச்சைக்குப் பின் ஒரு கீற்றாகத் திரு நீறு அணிந்து நடிக்கச் சம்மதித்தாராம்..

அதோடு நிற்கவில்லையாம்.

”அன்று கொண்ட அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது ”
என்று கடவுளைக் கிண்டல் செய்வது போல் அமைந்த பாடல் வரிகளைப் பாட மறுத்து விட்டாராம்.பின் “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது ”என்று மாற்றப்பட்டதாம் அந்த மணிமேகலைக்காக!

இது சமீபத்தில் நான் படித்த தகவல்.

கொள்கையிலிருந்து வழுவாத அவரை எப்படிப் போற்றுவது?!

 

23 கருத்துகள்:

  1. நல்ல தகவல் அய்யா, மணிமேகலையை யார் யாருடன் ஒம்பிட வோண்டும் என்ற வரைமுறை இல்லாமல் போய் விட்டது...

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில்
    சரியான அரிதான தகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அவர்தம் கொள்கைப் பற்று கண்டு வியந்தேன்.
    கொள்கைவாதிகளை பலர் கர்வியாக
    சிந்திப்பது வருந்தத் தக்கது.

    பதிலளிநீக்கு
  4. மணிமேகலை அட்சய பாத்திரத்திலிருந்து உணவு படைத்ததாக சொல்வார்கள். திருமதி சோனியா காந்தி தலைமையில் உள்ள அரசு உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததால் எல்லோருக்கும் உணவு கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதால் அந்த வகையில் திருமதி சோனியா காந்தியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு இருக்கலாம். மணிமேகலை திருமணமே செய்து கொள்ளாதவர் என்பதால் திருமதி கே.பி சுந்தராம்பாளை கூட அவருடன் ஒப்பிடக்கூடாது. இந்த மாதிரி எடுத்துக்காட்டுக்கள் உயர்வு நவிற்சி அணியைச் சேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

    பூம்புகார் திரைப்படத்தில் திருமதி கே.பி சுந்தராம்பாளை நடிக்க கலைஞர் கேட்டுக்கொண்ட போது அவர் தயங்கினாராம். அப்போது கலைஞர் சொன்னாராம். ‘நீங்கள் வணங்கும் மு.க (முருகக் கடவுள்) விடம் சொல்லுங்கள் இந்த மு.க (மு.கருணாநிதி) படத்தில் நடிக்க அனுமதி கொடுப்பார்.’ என்று. கலைஞரை அரசியல் ரீதியாக எதிர்ப்போர் கூட அவரது சிலேடைப் பேச்சை இரசிக்காமல் இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடகத் துறை நடிகைஒருவர்,25 வயதில் கணவனை இழந்தபின்,வெள்ளைப்புடவைதரித்து,நெற்றியில் திருநீற்றுடன் துறவு வாழ்க்கை மேற்கொண்டார் என்றால்,அந்த வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு மனிமேகலைக்கு இவரை ஒப்பிடுவதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.நீங்கள் சொல்லும் மற்ற செய்தி பற்றி நான் அறியேன்!
      நன்றி

      நீக்கு
  5. கொள்கை மாறாத பெண்மணியை படித்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. கோவலனின் காதலி மாதவி என்பது ஒருபுறம் இருந்தாலும் கோவலனை அவனுடைய மனைவியிடமிருந்து பிரித்தவள் என்பதுதான் என்னுடைய மனதில் ஆழமான பதிந்துள்ள உண்மை. ஆகவேதான் என்னுடைய சொந்த செலவி சூன்யம் என்ற கதையில் கூட கொலையுண்ட கதாபாத்திரத்திற்கு மாதவி என்று பெயரிட்டேன்....

    பைபிளை அறிந்திருக்கும் அளவுக்கு இதிகாசங்களை தெரியவில்லை.... மன்னித்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா...

    தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
    நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..


    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

    நன்றி...

    நேசத்துடன்
    சே.குமார்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அய்யா, மணிமேகலை-கே.பி.எஸ் ஒப்பீடு என்பது அவர்கள் கொண்ட கொள்கை அளவில் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில் தங்களது ஒப்பிடு மிகச்சரியே. கருத்துக்களில் ஒருவருக்கொருவர் மாறுபடுவதில் தவறில்லை. தொடரட்டும் தங்கள் பணி. அரிய செய்திகளை பகிந்தமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  9. இப்படியும் தன் கொள்கையில் இருந்து வழுவாத ஒரு பெண்மணி

    பதிலளிநீக்கு