ஒரு சிற்றூருக்கு ஒரு மகான் வந்தார்.
அவர் தெய்வீக சக்திகள் நிறைந்தவர்.
ஒருவர் விரும்புவதை நிறைவேற்றும் வல்லமை
உள்ளவர்.
ஊர் மக்கள் அவர் முன் வந்து வணங்கினர்.
விரும்பியதைக் கேளுங்கள் என்று
உரைத்தார்.
ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களைக்
கூறினர்.
அனைத்தையும் அவர் கேட்டார்.
கடைசியில் சொன்னார்.”நீங்கள் கேட்டதெல்லாம்
கிடைக்கும்.இன்று இரவு படுக்கப் போகும் முன் உங்கள் மனத்தில் இருக்கும் அழுக்குகளை
நீக்கி விட்டு,உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள்”
அனைவரும் அவர் சொன்னபடி செய்தனர்
அந்த ஊரில் ஒருவன்;அவன்
பெயர்...பாலகுமாரன் என்று வைத்துக் கொள்வோம்
அவன் நீண்ட நாட்களாக ஒரு மாருதி
காரும்,பெரிய வீடும் வேண்டும் என எண்ணியிருந்தான்.
காலை எழுந்து பார்த்தால்,அவன் வீடு
மூன்று படுக்கை அறை கொண்ட வீடாக மாறியி ருந்தது.
வெளியே வந்து பார்த்தான்.
வாசலில் ஒரு புத்தம்புது மாருதி கார்
நின்றிருந்தது.
அவனுக்கு மகிழ்ச்சியில் கூத்தாட
வேண்டும் போல் இருந்தது.
அப்போது அவன் பார்வை அடுத்த வீட்டு
வாசலில் நின்றிருந்த பி.எம்.டபுள்யு காரின் மேல் விழுந்தது.
அப்பா!எவ்வளவு பெரிய அழகிய கார்!
எதிர் வீட்டைப் பார்த்தான்.
சிறிய வீடு இருந்த இடத்தில் ஒரு மாளிகை!
தன் வீட்டையும்,சிறிய காரையும் பார்த்தான்.
அவன் மனம் நகைத்தது”இதற்குத் தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”....(தலைப்பு வந்து விட்டதா!)
அவன் மட்டுமல்ல,அந்த ஊரில் அனைவருக்கும்
அதே நிலை.
அடுத்தவருக்குக் கிடைத்ததைப் பார்த்து
நெஞ்சம் பொருமிற்று!
மீண்டும் மகானிடம்....
மீண்டும் மன வருத்தங்கள்.....
மீண்டும் கோரிக்கைகள்......
இதற்கு முடிவேது?!
எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடையாத
மனம் இருந்தால் வாழ்வில் மகிழ்வேது?
வசதி அதிகமானவரைப்பார்த்துப் பொறமைப்
படாமல் வேறு பலரை விட நான் வசதியாக உள்ளேன் என்று நினைத்தால் திருப்தி, தானே
வரும்!
இருப்பதை விட்டுப் பறப்பதற்கு
ஆசைப்படாதீர்கள்!
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)
மனித மனத்தின் பலவீனங்களை உணர்த்தி
பதிலளிநீக்குநம்மைத் திருந்தச் செய்யும் ஒரு அற்புதக் கதை.
எளிமைக்கு சற்று மேலே ஆடம்பரத்திற்கு
சற்று கீழே என்ற கொள்கையைக் கடைபிடித்தால்
வாழ்வு சிறக்கும்.
அருமையானதொரு பகிர்விற்கு நன்றி.
நன்றி ஸ்ரவாணி
நீக்குவிழாவில் காணவில்லையே?
ஒருமுறை ப்ரெசென்ட்
நீக்குஒரு முறை ஆப்சென்ட் .. என்ற கொள்கைதான் !
வந்திருந்தால் கண்டுகொள்வீர்களா ?
பதிலளிநீக்குதம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று!
என்ற நாலடியார் பாடலும் இதைத்தானே சொல்கிறது.
ஸ்வாமி பித்தானந்தா வின் அரிய கருத்துக்களை அவ்வப்போது வெளியிடலாமே!
ஸ்வாமியிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டேன்.இனி சித்தம் போக்கு,சிவன் போக்கு
பதிலளிநீக்குநன்றி அய்யா
திருப்தி இல்லாத வாழக்கை நரகம் தான் ஐயா...
பதிலளிநீக்குஉண்மை தனபாலன்
நீக்குநன்றி
அவசியமான கருத்தைச் சொல்லிப்போகும்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
சொல்லிப்போனவிதம் வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
நீக்குநல்ல ஆலோசனை
பதிலளிநீக்குநன்றி ராஜி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி சக்கரக்கட்டி
நீக்குவசதி அதிகமானவரைப்பார்த்துப் பொறமைப் படாமல் வேறு பலரை விட நான் வசதியாக உள்ளேன் என்று நினைத்தால் திருப்தி, தானே வரும்!
பதிலளிநீக்குஇருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள்!
வாழ்க்கை தத்துவம் ..!
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குபோதும் என்ற மனம் வேண்டும்
பதிலளிநீக்குநன்றி ரூபக்
நீக்குசுவாமி பித்தானந்தா.. ஓஹோ.
பதிலளிநீக்குஆசீர்வாதம்!
நீக்குநன்றி அப்பாதுரை
//வசதி அதிகமானவரைப்பார்த்துப் பொறமைப் படாமல் வேறு பலரை விட நான் வசதியாக உள்ளேன் என்று நினைத்தால் திருப்தி, தானே வரும்!//
பதிலளிநீக்குமிகச்சரியே
என் பக்கம் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
நன்றி ஜலீலா கமால்
நீக்கு
பதிலளிநீக்குமனம் நிறைவு இருந்தாலே போதும், நிம்மதியாக வாழலாம் !
சூப்பர்ப் தல....
நன்றி மனோ
நீக்குNAMAKKUM KIZHE ULLAVAR KODI
பதிலளிநீக்குNINAITHU PARTHU NIMMADI NADU
நன்றி மோகன்
நீக்குஇருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள்!//
பதிலளிநீக்குஇது மனித இயல்பு. இத்தகைய ஆசை இருந்தால்தான் மனிதன் மேலும் மேலும் உயரமுடியும் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டே. இந்த தத்துவத்தை மிக அழகாக கூறியுள்ளார் சுவாமி பித்தானந்தா (கற்பனைப் பெயர் இல்லையே?).
உங்களால் அதிக நேரம் எழுத முடியவில்லை என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறேன். சுருங்கச் சொன்னாலும் மிக அழகாக சொல்கிறீர்கள். அது போதாதா?
நன்றி ஜோசப்
நீக்குஇருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள்...
பதிலளிநீக்குஅழகான எடுத்துக்காட்டுடன் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி.
நன்றி சசிகலா
நீக்குசித்தம் தெளிய வைத்தது பித்தானந்தாவின் போதனை! அருமையான கதை ஐயா! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்கு