பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் அவர்களின் பிறந்த
நாள் இன்று.என்ன விழிக்கிறீர்கள்? பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!மறக்க முடியாத, காதில் ஒலித்துக்கொண்டே
இருக்கும் ஒரு குரல். சரிகைத் தலைப்பாகை அணிந்து வெளியிடங்களில் காணப்பட்ட அந்த மனிதர் இன்று இல்லை;ஆனால்
அவர் குரல் சிரஞ்சீவி!
அவரைப் பற்றி நண்பர் பார்த்தசாரதி ,இன்று
வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை யுடன் எழுதி அனுப்பிய ,கட்டுரை கீழே!
//”கனியோ,பாகோ,கற்கண்டோ”—பி பி எஸ் இன் குரலின்
இனிமையை அவர் “கற்புக்கரசி” படத்தில் எம்
எல் வி அவர்களுடன் பாடிய டூயட்டின் முதல் வரி மென்மையாக எடுத்து ரைக்கிறது!அவர் பாடிய பாடல்கள் எல்லாமே தேனமுதுதான்.நன்றாக இல்லை
என அவர் பாடிய எந்தப்பாடலையும் ஒதுக்கிவிட இயலாது.
அறுபதுகளில் ஜெமினியின் குரலாக இருந்தவர்
ஏ எம் ராஜா.அவர் இசையமைப்பாளர் ஆனபின்
இசையமைத்த கல்யாணபரிசு,தேன்நிலவு,விடிவெள்ளி
படங்களில் எல்லா பாடல்களும் ஹிட்!அதனால்தானோ என்னவோ ராஜா
மற்ற இசையமைப்பார்களின் ஆதரவை இழந்தார்.இந்தச்
சூழல் பிபிஎஸ்ஸின் கலைவாழ்க்கையில்
வசந்தகாலம் பிறக்க வழி வகுத்தது.
ஜெமினி கழுத்தில் மஃப்ளரை மாலையாகப் போட்டுக்
கொண்டுசாத்தனுர் அணையின் பின்னணியில் ”காலங்களில்
அவள் வசந்தம்”என்று பாடிய பாடல் ஒரு மிகப் பெரியை அலையை உருவாக்கியது.PBS,கண்ணதாசன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி
கூட்டணி கொடிகட்டிப் பறந்தது.பூ வரையும் பூங்கொடிக்குப் பூமாலை சூட்டி வாலியும் ’இதயத்தில்
நீ” ஆனார்.பிபிஎஸ் காதல் மன்னனின் நிரந்தரக் குரல் ஆனார்.youthful-melodious ஆக
இருந்தஅவரது குரல்,பெண்கள் காதலனிடம் எதிர்பார்க்கும் எல்லா
உணர்ச்சிகளையும் அள்ளி வழங்கியது. அவர் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் ,பிரேமபாசம் படத்தில் ”அவன் அல்லால் புவி மேலே
ஒரு அணுவும் அசையாது” என்ற பாடலே.
இனிமையான காதல்தான் அவரது சிறப்பு
எனினும்,அவர் பாடிய சில தத்துவப் பாடல்கள் என்றும் அழியாதவை.’மயக்கமா,கலக்கமா’
’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ ’மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ ஆகியவற்றைச்
சொல்லலாம்.
எம் ஜி ஆருக்காகப் பாடிய “என்னருகே நீ
இருந்தால்(திருடாதே),”பால் வண்ணம்”(பாசம் சிறப்பானவை.
ஜெமினிக்கு அடுத்தபடியாக,பாலாஜிக்கு
நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் என எண்ணு கிறேன் . விடிவெள்ளி,அன்புக்கரங்கள்,நாகநந்தினி,அண்ணாவின்
ஆசை, போலீஸ்காரன் மகள்,பலே பாண்டியா,படித்தால் மட்டும்போதுமா, என பல படங்கள்.எஸ்
எஸ் ஆர்,நாகேஷ், முத்துராமன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,கல்யாண்குமார்,ஏவிஎம் ராஜன்,
ஸ்ரீகாந்த், ஆனந்தன், அசோகன் என பலருக்குப் பாடியுள்ளார் .
டி எம் எஸ்,பி பி எஸ் இருவரும் சேர்ந்து
பாடிய,படித்தால் மட்டும் போதுமா படப்பாடல் “பொன்னொன்று கண்டேன்”இன்றும் மெல்லிசை மேடைகளில்
பாடப்படும் பாடல்.
தமிழ்த் திரை இசை உள்ளவரை,அவரது குரல் காற்றலைகளில்
மிதந்து கொண்டே இருக்கும்.கேட்கும் காதுகள் கொடுத்து வைத்தவை!
(அவர் எழுதிய அனுப்பியது இன்னும் பல தகவல்கள்
அடங்கியது.இன்றைக்கு இது போதும் என நிறுத்திக் கொண்டு விட்டேன்;பிறிதொரு சமயம் பார்க்கலாம்)
திரு. பிபிஎஸ் அவர்களைப் பற்றி அருமையான பகிர்வு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
என்ன அருமையான குரல். "நிலவே என்னிடம் நெருங்காதே" எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஅவரைபற்றிய பகிர்விற்கு நன்றி ஐயா.
நானும் பி.பி எஸ் அவர்களின் பரம ரசிகன்
பதிலளிநீக்குஅவருடைய பிறந்த நாள் சிறப்புப் பதிவாக
அவர் குறித்த தங்கள் பகிர்வைப் படிக்க
மகிழ்ச்சியாக இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
கட்டுரை அருமை...
பதிலளிநீக்குPBS மறக்கமுடியாதவரே!
பதிலளிநீக்குபழைய பாடல் ரசிகர்களுக்கு “மலரும் நினைவுகள்” உங்கள் கட்டுரை. பி பி ஸ்ரீனிவாஸ் என்றாலே ஜெமினி கணேசன் நடித்த பாடல்கள்தான் ஞாபகத்திற்கு வரும்.
பதிலளிநீக்குதிரு P.B ஸ்ரீநிவாஸ் வர்கள் பன் மொழி வித்தகர் என்பதையும், நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால் பதித்த நிகழ்வை ஆங்கிலத்தில் கவிதையாக எழுதி அதை பாடி அந்த ஒலி நாடாவை அமெரிக்க அதிபருக்கு அனுப்பி பாராட்டு பெற்றதையும், Drive in Woodlands இல் தினம் சென்று ஒரு மூலையில் அமர்ந்து பாட்டுக்கள் எழுதிக்கொண்டு இருந்ததையும் சொல்லப்போனால், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! அவருடைய பிறந்த நாளான இன்று அவரையும், அவரது தேன் மதுர குரலோசையும் நினைக்க வைத்தமைக்கு உங்களுக்கும் உங்கள் நண்பர் திரு பார்த்தசாரதி அவர்கட்கும் நன்றி! பாடும் குரல்களில் அவர் ஒரு வசந்தம்.
பதிலளிநீக்குமறக்க முடியாத, என்றும் இனிக்கும் குரல் பி.பி.எஸ். உடையது. இன்று உங்கள் மூலம் நினைவு கூர முடிந்தது மகிழ்ச்்சி.
பதிலளிநீக்குபேத்தாஸ் பாடல்கள் என்றால் சீனிவாசனைக் கூப்பிடுங்கள் என்று திரையுலகினர் சொன்ன காலம் அது. எப்படி நடிகர் திலகத்துக்கு TMS பாடுவாரோ அதுபோல் ஜெமினிகனேசன் நாயகன் என்றால் சீனிவாசந்தான் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை அருமையாய் ஒத்துப்போகும் அவருடைய குரல். அவரை மீண்டும் நினைவுபடுத்திய உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇரண்டு வாரங்களாக பதிவேதும் எழுதவில்லையே என்று நினைத்தேன். உடல் நலம்தானே?
அருமையான நினைவுகள் மீட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இந்தக் குரல் வளம் தெய்வம் தந்தது. இன்னும் மயக்கமா கலக்கமா 'கேட்டால் மனம் அழும் . பிறகு தெளியும்.
பதிலளிநீக்குஎப்படித்தான் ஜெமினிக்கு இவர் குரல் பொருந்தியது!!!!
மிக மிக நன்றி இந்தப் பகிர்வுக்கு.
அருமையான நினைவுப்பகிர்வு.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் அனைவரும் PBS ரசிகர்கள் :)
பதிலளிநீக்குபி.பி.சீனிவாஸ்! மறக்க முடியாத மயக்கும் இசைப்பாடகர்! தகவல்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பாடகர் மறக்க இலாத இனிய குரல்!
பதிலளிநீக்குநண்பர்கள் இடும் எந்த கருத்துக்குமே நீங்கள் பதிலளிக்கவில்லையே..... வெறுமையை விரட்டியடிக்க இதையும் செய்யலாமே:)
பதிலளிநீக்கு