தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

வெறுமை!



எதிலும் மனம் லயிக்கவில்லை

சிறிது நேரம் செய்தித்தாள்

சிறிது நேரம் முகநூல்

சிறிது நேரம் கூகிள்+

சிறிது நேரம் மின்னஞ்சல்

சிறிது நேரம் வலைப்பூ

சிறிது நேரம் டி.வி

சிறிது நேரம் சும்மா

வெறுமையான பார்வை

எதிலும் மனம் லயிக்கவில்லை

சிறிது நேரம் செய்தித்தாள்

……………….
..............

மீண்டும் மீண்டும்

சுற்றிச் சுற்றி

எதுவும் பிடிக்காமல்

பற்றற்று.

ஆனால் வெறுமையிலும்

மனம் அமைதியற்று!

என்று மாறும் இந்நிலை?!


18 கருத்துகள்:

  1. தெருவோரம் பூ மற்றும் காய்கறிகளை சின்ன சின்ன கூராகக் கட்டி வைத்து விற்கும் கிழவிகளின் வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெறுமை காணாமல் எங்கோ ஓடிவிடும்

    பதிலளிநீக்கு
  2. தெருவோரம் பூ மற்றும் காய்கறிகளை சின்ன சின்ன கூராகக் கட்டி வைத்து விற்கும் கிழவிகளின் வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெறுமை காணாமல் எங்கோ ஓடிவிடும்

    பதிலளிநீக்கு
  3. சில நாளில்.. சில கணங்களில்
    இந்த வெறுமையைத் தவிர்க்க
    இயலவில்லைதான்.
    வெறுமை தந்த கவிதை
    வெகு வெகு அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உலகில் இது மட்டும்தானா?ஜன்னலோரம் வரும் சூரியகதிர்களின் அழகு,வானத்தில் ஜாலம் போட்டு சித்திரமிடும் மேகம்,டெலிபோன் கம்பியில் ஊஞ்சலாடும் காகம்,வானத்தில் கோலமிட்டு பறக்கும் பறவைக்கூட்டம்,தூரத்தே சப்தமில்லாமல் பறக்கும் விமானம்,காற்றில் தலை சாய்த்து நாட்டியமாடும் மரக்கிளைகள் இப்படி எத்தனை எத்தனையோ!என்று மாறும் இந்நிலை?!//கண்டிப்பாக மாறும் இந்நிலை:)

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வெறுமையை வலைப்பூ போக்கி விட்டதே

    பதிலளிநீக்கு
  6. நல்ல இசை, நல்ல புத்தகங்கள், மாற்று இடம் ஒன்றுக்கு ஒரு விசிட்.....

    பதிலளிநீக்கு
  7. பேசாம ஒரு பெட்டிக்கடை வச்சிட்டா என்ன தல ? நேரமும் போகும் ஜாலியாகவும் இருக்கும் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  8. அடுத்த பதிவர் சந்திப்பு வேலைய ஆரம்பிசிருவோமா... :-)

    பதிலளிநீக்கு
  9. நண்பர்களைசந்தியுங்கள்மாறும்

    பதிலளிநீக்கு
  10. பல சமயங்கள்ல எனக்கும் இத்தகைய மனநிலை ஏற்பட்டுள்ளது. பணியில் உள்ளபோது மிகவும் ஆக்டிவாக இருந்துவிட்டு திடீர் என்று முழுநாளும் ஓய்வு என்கிறபோது என்ன செய்வது எப்படி நேரத்தை செலவிடுவது என்கிற குழப்பம் ஏற்படுவது மிக, மிக சகஜம். இதற்கு ஒரு மாற்று மருந்துதான் பதிவுலகில் வலம் வருவது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் எதையாவது எழுதுவது, கிறுக்குவது என்றும் சொல்லலாம். ஒரு சில தினங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய பதிவுலகில் இருந்து மனநிறைவோடு விலகுகிறேன் என்ற பதிவை இன்றுதான் படித்தேன். அது தேவையில்ல என்பது என் கருத்து. இதில் உங்களுக்கு மனநிறைவு ஏற்படும் என்றால் அதை உடலிலும் மனதிலும் தெம்பு உள்ளவரை தொடரலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்று வரலாம். இன்னும் எவ்வளவோ இருக்கிறது வெறுமையை போக்க.... மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள்.... உங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கு இதை சொல்ல வேண்டுமா என்ன? வெறுமையிலிருந்து விரைவிலேயே மீள வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அபயா அருணாவின் கருத்து.. மை குட்னெஸ்.

    பதிலளிநீக்கு
  12. எல்லோருக்கும் ஏதாவது ஒரு நாள் இந்த மூட் வருவது உண்மையே. வெறுமையை நிரப்ப வழி செய்யுங்கள். மாறுவதே உலகம்.

    பதிலளிநீக்கு