தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 22, 2016

பயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு



என் தனியான பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அமைந்ததில்லை. தில்லி யிலிருந்து சென்னை வரும்போது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரி அமையும். ஒரு முறை சுற்றியிருப்பவர்களுடன் கலகல உரையாடலில் நேரம் கழிப்பேன்;ஒரு முறை யாருடனும் பேசாமல் புத்தகத்தில் மூழ்கி நாளைக் கழிப்பேன். ஒரு முறை சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர வேறெதுவும் நடக்காது. பயண நாளில் என் மன நிலையைப் பொறுத்தது என் விருப்பு வெறுப்புகள்.!என் கல்லூரி நாட்களில் பயணிக்கும்போது கையில் இயான் ஃப்ளெமிங்க் நிச்சயம்!


பயணத்தில்  முன்பெல்லாம் வாக்மேன் இப்போதெல்லாம் ஐபாட் இவற்றில் ஏதோ கேட்டபடிப் பலர் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்”என்னுள் நானே ஓர் இசையை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.நீங்களும் கவனித்திருக்கலாம்,பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டு எங்கிருந்தோ ஒலித்தபடியே உங்களுடன் கூட வருவதை.நான் கூட நினைப் பதுண்டு,வழியில் இருக்கும் இடம் ஒன்றிலிருந்து அப்பாட்டுக் கேட்கிறதோ என்று. ஆனால் அது எவ்வாறு தொடர்ந்து வர முடியும்?  அந்த இசை தவிர நான் வேறு எந்த இசையையும் கேட்பதில்லை.எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.பயணிக்கும்போது சில நேரங்களில்  வாய்க்குள் முணு முணுக்கும் இசை என்றால் அது பெரும்பாலும் ஏதாவது கர்நாடக  சங்கீதமாகவே இருக்கும்; தப்பித் தவறிச் சப்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொள்வேன்;பின் விளைவுகள் பற்றிய பயம்தான்!


பயண நேரம் என்று பார்த்தால்,சிறு பயணமாயின் வசதிப்படும் நேரம்;நீண்ட பயண மாயின் வசதியான வண்டியின் நேரம் அவ்வளவே.வாழ்க்கைப் பயணத் திலேயே சிறந்த துணை நமக்கு நாமே எனும்போது ,இப்பயணங்களில் யார் துணை?


எனக்கு வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ?இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா,அல்லது கனவாய்ப் போகுமா? 

அவன்தான் தீர்மானிப்பான் .

22 கருத்துகள்:

  1. நியாயமான எதார்த்தமான பதில்கள். பாராட்டுகள்.

    சென்ற பதிவுபோல விறுவிறுப்பாகத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் ஏதும் இதில் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊறுகாய்,தயிர்சாதமாகி விடக்கூடாதல்லவா!
      நன்றி வைகோ சார்

      நீக்கு
  2. //எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான். இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.//

    //இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா, அல்லது கனவாய்ப் போகுமா?//

    அவன்தான் தீர்மானிப்பான் என்பது உண்மையே. இருப்பினும் தங்களின் மேற்கண்ட ஆதங்கங்களுக்கு விடை இதோ இந்த என் மிகச் சிறுகதையில் உள்ளன. http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html படித்தால் சற்றே தெளிவு கிடைக்கலாம். :)

    பதிலளிநீக்கு
  3. பின் விளைவுகள் பற்றிய பயம் தான்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு

  4. //எனக்கு வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ?//

    உண்மைதான். இதை அறியாமல் பலர் வெளி நாடு செல்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    ‘பயணங்கள் முடிவதில்லை’ தொடர் பதிவை உண்மையில் தொடர் பதிவாக மாற்றிய பெருமை உங்களுக்கே உண்டு. வாழ்த்துக்கள்!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பயணங்களில் பாடல்கள் கேட்பது கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  6. தொடர் பதிவில் தொடர்ந்த பதிவினையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. இத்தனை ரசனையாய் விவரித்த சென்னை பித்தன் சார்க்கு ஒரு பொக்கே பார்சல்!!

    பதிலளிநீக்கு
  8. எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.

    நிஜம் தான் எனக்கும் பிடிப்பதில்லை,பேருந்துகள் மட்டுமல்ல மக்கள் கூடியிருக்கும் எந்த இடத்திலும்!

    தொடர் பதிவில் தொடரும் பயண அனுபவங்களை தொடர்கின்றென்!

    பதிலளிநீக்கு
  9. தொடர்பதிவுக்குள் ஒரு தொடரும் பதிவு. இதைத் தொடங்கி வைத்தது புதுமைதான். சாதாரணமாக ஒரு பக்கத்திலேயே முடித்து விடுவார்கள். தொடருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா
    தொடர்பதிவினை இரசித்தேன் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. பின் விளைவு பயம் ரசித்தேன் ஐயாவின் குசும்பை. அவன் வழிவிட்டாள் சாத்தியம் எல்லாம்.

    பதிலளிநீக்கு
  12. நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ உண்டு
    உண்மையான வார்த்தை ஐயா

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதில்கள்..அதுவும் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு...உண்மை அதுதான்..இயற்கையின் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன...

    பதிலளிநீக்கு
  14. உண்மை தான் இசையைக் கேட்டு சிலர் பாடகராக பாவித்து பாடத்த தொடங்கிவிடுவார்கள் தன்னிலை மறந்து ஐயா..அருமையான பயணம் ஐயா..

    பதிலளிநீக்கு