அழகியும் துறவியும்-நிறைவு
துறவியின் உள்
உணர்வுகளை அறிய இயலாதவள் அழகி. சக்தியின் மாயப் படைப்பான அவள், துறவிக்கு அள்ளி அள்ளித்தரவே படைக்கப்பட்டவள்.
அவரது அந்தரங்க உணர்வுகளை மட்டுமன்றி, மற்ற சாதாரண
உணர்வுகளைக் கூட அறிய இயலாதவள்.
துறவி அவள் தந்த
இன்பத்தை ஆறு மாதத்திலேயே கரை கண்டுவிட்டார. வாழ்க்கையின் மற்ற உணர்வுகள் அவரை
துரத்த ஆரம்பித்தன. குறிப்பாக தூக்கமின்மை அவரை துக்கத்தில் ஆழ்த்தியது. அழகியை
ஒரு தொல்லையாக எண்ண ஆரம்பித்தார். அவரது வாழ்க்கையில் ஆசை, மோகம் இரண்டுமே ஆறு மாதங்களில் முற்றுப்
பெற்றன. இப்போது சோகராகங்கள் தான் பாடுகிறார்.
என்ன ஆனாலும்
பரவாயில்லை, தூங்கும் போது அழகியைத் தீண்டி
மூளை வெடித்துச் சிதறி சாகலாம் என்று கூட துணிந்தார். ஆனால் ஞானிக்குக்
கொடுத்த வாக்கை எண்ணி கட்டுப்பட்டார். அழகியின் தூக்கம் அதிகரித்தது. 22 மணி நேரம் தூங்க ஆரம்பித்தாள். அவளை விட்டு ஓடி விடலாம் என்றுகூட முயற்சி
செய்தார். 20 மணி நேரம் ஆனவுடன் அவளைக் காண விரைந்தோடி
வருவார்.
கொஞ்சம் கொஞ்சமாக
தூக்கம் அதிகமாகி 24 மணி நேரமும் தூங்கும் அழகியானாள்.
“தூங்கும் அழகி, தூங்காத துறவி”
துறவி தன்
பொறுமையை இழந்தார். ஞான குருவை நினைத்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கினார். காமம்
மறைந்தது. பல உயரிய எண்ணங்கள் மேலோங்கின.
உடன் தூங்கி உடன்
எழுவது தான் தாம்பத்யம். பின் தூங்கி முன் எழுவது தான் மங்கையர்க்கு அழகு
என்பதெல்லாம் தெளிவாகியாது. அவன் உணர்வுகளை அவளும் அறிந்து அவைகளை பரிமாறிக்
கொள்ளுவதே உண்மையான, சிறப்பான இல்லறம் என்பதை பரிபூரணமாக
உணர்ந்தார் இல்லறத்தில் பெண்கள் பங்கு ஒப்புயர்வற்றது என நன்கு அறிந்தார்.
மாலையுடன் வந்த
அழகியை அணைத்து காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதில் உள்ள வெறுமையை முழுவதுமாக
வெறுத்தார். காலங் “கடந்த மெய் உணர்தல்” இருப்பினும் சஞ்சலத்திலிருந்து மீண்டு அமைதி அடைந்தார்.
மெய்யறிந்து
அமைதியான சில நாட்களுக்குப் பிறகு, தெளிவு பெற்ற துறவியின், முன் ஞான நட்சத்திரமாக
ஒளிரும் அவரது குரு தோன்றினார்.
“தூக்கத்தை இச்சைக்காகத் துறந்த
அஞ்ஞான அற்பப் பதரே! அஞ்ஞானத்தை முற்றிலும் துற. ரீதியான இல்லற வாழ்க்கை வாழ
முற்படு. காமம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். அதற்கு அளிக்க வேண்டிய அந்தஸ்தை
அளித்து மேற்கொள்ளும் அன்யோன்யமான இல்லறமே இங்கிதம். இவைகளை மனத்திற்கொண்டு
வேண்டும் வரம் கேள்” என்றார்.
“சுகதுக்கங்கள் அடங்கிய எளிமையான,
அமைதியான இல்வாழ்க்கையை ப்ராப்தித்து எங்களை ஆசி புரியுங்கள்”
என்று மன்றாடினார் சிஷ்யர்.
“ததாஸ்து” என்றருளி
மறைந்தார் ஞானகுரு.
அழகி துயில்
நீக்கம் பெற்றாள். படைப்பில் இருந்த மாயம் நீங்கி மானுடப் பெண் ஆனாள். துறவியின்
துயிலும் மீண்டது.
துறவியும் அவரது
இல்லத்தரசியும் குருவை நமஸ்கரித்து ஆசி பெற்றனர்.
அவர்கள்
படைக்கப்போகும் இல்லற இலக்கணம் ஒரு தொல்காப்பியம்.
-பார்த்தசாரதி
-பார்த்தசாரதி
அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபிரமாதம்.
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குஅருமையான பதிவு அய்யா!
பதிலளிநீக்குத ம 3
“தூங்கும் அழகி, தூங்காத துறவி”
பதிலளிநீக்குஇதைப்படித்த எத்தனை பேருக்கு இன்று உறக்கம் போச்சோ ! :)
அருமையான கருத்தோடு கூடிய முடிவு. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குசுபம்! அருமை!!
பதிலளிநீக்குசிறப்பான கவிதையான கதை!
பதிலளிநீக்குஅருமை!