கவிதை
எப்படிப் பிறக்கிறது?
கவிஞன்
ரூம் போட்டு உக்காந்து யோசித்து எழுதுவானா?
இல்லை
பல நாட்கள் சிந்தனையில் ஒரு கவிதை பிறக்குமா?
கவிதைக்கு
ஏதாவது உந்துதல் தேவையா?
இப்படிப்
பல விதமான எண்ணங்கள் தோன்றலாம்.
கவிதை
எப்படியும் பிறக்கலாம்
பலநாட்கள்
கர்ப்பத்தில் இருந்தும் பிரசவமாகலாம்!
அல்லது
ரிஷி கர்ப்பம் போல் உடனேயும் பிறக்கலாம்!
ஏதாவது
ஒரு சிறு நிகழ்வு அவனைத் தூண்டி ஒரு கவிதைப் பிரசவம் நிகழலாம்.
உதாரணம்...
இரவு
நேரம்
எங்கும்
இருள்
கவிஞன்
தூக்கமின்றி நின்று கொண்டிருக்கிறான்
அப்போது
தென்னை மரத்திலிருந்து நெற்று ஒன்று விழுகிறது
ஓசை
கேட்டு அவசரமாக வெளியே வந்த வீட்டுச் சொந்தக்காரர் அதைப் பொறுக்கி எடுத்தவாறு
அவனைப் பார்த்துக் கேட்கிறார்”இன்னும் தூக்கம்வரலியா?”
உடனே
கவிதை பிறக்கிறது
ஆண்டு
1972
அந்த
எழுத்தாளரும் நானும் ராயப்பேட்டையில் என் மாமனார் வீட்டு வாசலில் நின்று பேசிக்
கொண்டிருக்கிறோம்
அப்போது
அவர் முதல்நாள் இரவில் நடந்த இந்த நிகழ்வைச் சொல்லி விட்டு உடனே பிறந்த கவிதையையும்
சொன்னார்
நினைவிலிருந்து
எழுதுகிறேன்
தவறுகள்
இருக்கலாம்- விடுபாடுகளும்,சேர்க்கைகளும்!
ஆனால்
இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் தங்கியிருக்கிறது என்றால் அது அந்த
நேரத்தில் என்னை எவ்வளவு பாதித்தது என்பதை உணரலாம்
//முற்றிப் பழுத்த தென்னை நெற்றொன்று
கழன்று
விழுந்தது சொத்தென்று
இருளில்நெற்றைத்
தேடிப்
பொறுக்கிப்
போன ஐயங்கார்
நிமிர்ந்துகேட்டார் மெதுவாக
“இன்னும்
தூக்கம் வரலியோ?”
நெற்றுக்
கழன்றதற்கே தூக்கம் வரலியே
நெஞ்சே
கழன்று கிடக்கே தூக்கம் வருமோ?//
கவிதை பிறந்து விட்டதல்லவா சட்டென்று!
கவிதை அருமை ஐயா பெரும்பாலும் நிகழ்வுகளே கவிதை பிறக்க காரணமாகிறது என்பது எனது கருத்து
பதிலளிநீக்குஉண்மை
நீக்குநன்றி கில்லர்ஜி
அதானே...? எப்படி தூக்கம் வரும்...?
பதிலளிநீக்குஅதானே
நீக்குநன்றி டிடி
கவிதை அருமை. சில வரிகள் நினைவில் இப்படித் தங்கி விடுகின்றன. பள்ளிப் பருவத்தில் என் நண்பர் புகழேந்தி ஒருநாள் தான் எழுதிய கவிதையாய் ஒன்றைக் காட்டினான். அந்த வரி இன்னும் என் நினைவில் இது போன்றே நினைவில் இருக்கிறது. அது அவன் எழுதியதா, எங்காவது பார்த்து எழுதியதா என்று தெரியாது! அந்த வரி :
பதிலளிநீக்கு"பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா..."
இன்று என்னவோ தமிழ்மணம் வாக்களிக்க நிறைய நேரம் எடுத்துக் கொண்டது.
நீங்கள் எழுதியதைப் படித்தது ஒரு நாட்டுப்பாடல் நினைவுக்கு வருகிறது.ஒரு கிராமத்து ஆள் நிலவைப் பற்ரிச் சொல்கிறான்”சோளப் பொரி நடுவே சுட்டு வச்ச தோசையைப் போல்” வாவ்!
நீக்குநன்ரி ஸ்ரீராம்
உண்மை தான் ஐயா..எனக்கும் இது போன்ற கேள்விகள் இருக்கின்றன எப்படி தான் கவிதை எழுதுக்கின்ற என்று..??
பதிலளிநீக்குநன்றி ..
திருச்சிற்றம்பலக்கவிராயர் ஒரு பாட்டில் சொல்வார்”கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே!”
நீக்குநன்றி ஐயா
ஆஹா, அருமையான கவிதை.
பதிலளிநீக்குஇதைப்படித்த எனக்கும் இப்போது தூக்கம் வராமல் போய் விட்டது. (ஏற்கனவே நான் ஒரு தூக்கம் வராத கேஸ்தான்). ஏனென்றால் ஓர் சின்ன சம்பவம் ..... எனக்கும் அன்றொருநாள் நிகழ்ந்தது ..... அதில் ஒருசில வரிகள் மட்டும் அடுக்கடுக்காக என் மனதில் தோன்றின. அவற்றை ஓர் கவிதையாக சமைக்க முடியாமல் நான்.
இருட்டு உள் (ளு) (DARK ROOM)
முரட்டுப் பொண்ணு (A Fat Lady)
சுருட்டுப்பாய் (Folding Mat)
மூன்று வரி மூவாயிரம் கதை சொல்கிறதே!
நீக்குநன்ரி வைகோ சார்
நடக்கும் நிகழ்வுகளோடு வாழ்க்கையை இணைப்பதுதான் கவிதை....
பதிலளிநீக்குகவிதை வீதியே சொல்லி விட்டால் அப்பீல் ஏது?!
நீக்குநன்றி சௌந்தர்
#பொறுக்கிப் போன ஐயங்கார்#
பதிலளிநீக்குஇதை நீங்கள் எழுதியதால் சரியா போச்சு :)
நீங்கள் கீழே எதையாவது போட்டு விட்டால் அதைப் ’பொறுக்கி ’எடுக்க மாட்டீர்களா,பகவானே?!
நீக்குநன்றி
இருள் என்றாலே பல கவிதைகள் பிறக்குமோ...அழகான வரிகள்!
பதிலளிநீக்குஉண்மைதான்;இருளில் பல பிறக்கும்!
நீக்குநன்றி
சூழலை கவிதையை உண்டாக்குகின்றது என்பதற்கு இக்கவிதையும் ஒரு சான்று.
பதிலளிநீக்குஉன்மை ஐயா
நீக்குநன்றி
சில நிகழ்வுகள் நம்மை பாதிக்கும்போதோ அல்லது நம்மை ஈர்க்கும்போதோ உடனே கவிதை பிறப்பதுண்டு. தங்கள் நண்பர் சொன்ன கவிதை அருமை. அதை நியன்வில் இருத்தி பகிர்ந்துகொண்ட உணக்களுக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநிலவை பற்றிய கவிதையை திரு ஸ்ரீராம் அவர்களும் நீங்களும் சொன்னபிறகு நான் சொல்லாமல் இருக்கமுடியுமா?
ஒரு காதலன் தான் காதலியிடம் சொல்கிறான்
நிலவு வருமுன்னே நீ வரவேண்டும்.
நீ வந்த பின்னே நிலவெதெற்கு வேண்டும்?
கவிஞர் வாலி அவர்கள் இயற்றி திருச்சி வானொலி நிலையத்தில் படித்த கவிதை இது என்று படித்திருக்கிறேன். இந்த கவிதையில் பொதிந்து இருக்கும் உட்கருத்தை அறிந்துகொள்ள முடியாதவர்களா நாம்?
நிலவு பற்றிய நல்ல கவிதை சொன்னீர்கள்--”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்” அல்லவா?
நீக்குநன்றி
கடைசி இருவரிகள் மிக அருமை.
பதிலளிநீக்குஆனாலும் இப்போதேல்லாம் தங்கள் பதிவுகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன். :)
தொடர்கிறேன்.
கவிதை நினைச்ச நேரமெல்லாம் எல்லோருக்கும் எப்படித் தான் வருதோ, இன்னமும் எனக்குப் புரியாத ஒன்று.
பதிலளிநீக்குகவிதை பிறந்த கதையும் கவிதையும் சிறப்பாய் அமைந்தன! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு