அன்பு நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களின் ஆணைக்கிணங்க(ஆணையின்றி எதுவும் நடக்குமோ!) தொடர்கிறேன்......
//அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை
விட்டுப் புறப்பட்டது. ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக்
கொண்டுதான்
ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில்
கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி.
ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது. ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டி ருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.
அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத் தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்; அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16), அடுத்த பெண், ரமணி(13), அடுத்தபெண்,ரமா(11), அடுத்த பெண்,மகா(7), கடைக்குட்டி சுந்தர்(5).
அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன் தான்.மற்ற அனைவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத எதிர் காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்./
இது
சில ஆண்டுக்ளுக்கு முன் நான் எழுத்த் தொடங்கிய “ஒரு வரலாறு” என்னும் தொடரின் தொடக்கம்.அந்தக்குட்டிப்பையன்
’சுந்தர்’ தான் நான்.இதுவே என் நினைவில் நிற்கும் முதல் இரயில் பயணம்!
.............
//திருச்சி
இரயில் நிலையத்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டி யில், சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என்
உள்ளத் தைத் தொலைக்கப்போகிறேன் என்று.இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை. என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ “பளிச்” என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம். ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி நீ அணிந்திருந்த மூக்குத்தி .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவிவர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.
நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு ‘பட,பட’ என வேகமாக அடிக்கத் துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன். பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித் தேன்.யோசித்தேன்” என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.
மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டி ருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று. புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.
மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்த’இந்து’ பத்திரிகையைப் பிரித்தேன். படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(”யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் ” இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.
நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்”படிச்சிட்டுக் கொடுக்கலாம்” என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் ”ராதாகிருஷ்ணன்,M.A. ” கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய் “மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-’ராதா ரயில்ல வந்திட்டிருப்பா’ என்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன, மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.
ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு ,சாதனைகள் படைக்க.
சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான். இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .
சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன. மெல்லக் கேட்டேன்”மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என்மனதையும் எடுத்துக்கொண்டு.//
இது எனது “எங்கிருந்தாலும் வாழ்க “என்ற பதிவின் ஒரு பகுதி.இதை விட மகிழ்ச்சியான,மறக்க முடியாத பயணம் இருக்க முடியுமா?
இது ஒரு தொடர் பதிவல்லவா?எனவே நாளையும் தொடரும்!
டிஸ்கி:இரண்டு மூன்று நாட்களுக்கு அறுவை தாங்க முடியாமல் இனிமேல் ஒருவரும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைக்க மாட்டார்கள்! நிம்மதி!!
தொடர் பதிவில் தொடரும்.... :)))
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி வெங்கட்
நீக்குஏற்கனவே இதனைத் தங்களின் பதிவினில் நான் படித்திருப்பினும், இன்று மீண்டும் படித்ததில் மிகவும் மகிழ்ச்சி + கிக் அடைந்தேன்.
பதிலளிநீக்குஇதுவரை நான் வெவ்வேறு பதிவர்களின் பதிவுகளில் படித்த இந்தத்தொடர் பதிவுகளிலேயே, உங்களுடையது மட்டுமே சூப்பரோ சூப்பராக பேரெழுச்சியுடன் உள்ளது. மற்றவையெல்லாம் சுத்த வழுவட்டை மட்டுமே.
(எழுச்சி x வழுவட்டை பற்றி மேலும் அறிய இதோ இந்த பதிவுக்குச் செல்லவும்: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html )
பாராட்டுகள் + வாழ்த்துகள், சார்.
அன்புடன் VGK
நன்றி வைகோ சார்
நீக்கு
பதிலளிநீக்குமீள் பதிவென்றாலும் திரும்பவும் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்கிறேன்.
நன்றி சபாபதி சார்
நீக்குதொடர் பதிவும் தொடருமா.... தொடர்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குமிகவும் விறுவிறுப்பாக இருந்தது. தங்களின் தொடர்பதிவு.
பதிலளிநீக்குத ம 4
நன்றி செந்தில்குமார்
நீக்குசே!! சே!!! என்ன விறுவிறுப்பு!! என்ன நடை!!! ஒரு கேள்விக்கு ஒரு ரசம்!!!! இனி தொடர்பதிவென்றால் முதலில் அழைக்கவேண்டும் என சங்கல்பமே எடுத்துட்டேன். ஒரு Black and white சினிமா பார்த்த Effect!!!! சூப்பர் ஜீ! !!!
பதிலளிநீக்குநன்றி மைதிலிம்மா!
நீக்குவித்தியாசமான பயணங்கள்தான்! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஅடேடே.... இனிமையான காதல் கதையா இருக்கும் போல இருக்கே!
பதிலளிநீக்குதொடர்ர்ர்ர் பதிவு!
நன்றி ஸ்ரீராம்
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
நீக்குஎன்னது அறுவையா??!!! ஹஹஹ் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள்! இவ்வளவு அழகாக சுவாரஸ்யமாக ஒரு காதல் கதையுடன் ஒரு தொடர்பதிவில் தொடரும் வேறு..சரி இந்தக் காதல் கதை தொடருமா இல்லை தொடர்பதிவின் அடுத்த கேள்விகளா..ஹஹஹ் அருமை சார். ரொம்பவே ரசித்தோம். தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது அந்த சுந்தர் நீங்களாகத்தான் இருக்கும் என்று....தொடர்கின்றோம். தொடர்வண்டி இல்லையா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவித்தியாசமான தொடர்பதிவு தான்.ஆரம்பம் மனசை என்னமோ செய்தது
பதிலளிநீக்குதொடருங்கள் .!
நன்றி நிஷா
நீக்குஉங்கள் பாணியில் பயண அனுபவம். அதிகமாக ரசித்தேன்.....
பதிலளிநீக்குநன்றி ஜம்புலிங்கம் சார்
நீக்குஎனது அன்பான அழைப்பிற்கு முக்கியத்துவம் தந்த, மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் சென்னைப் பித்தன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதிவிட்டு “ இனிமேல் ஒருவரும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைக்க மாட்டார்கள்! நிம்மதி!!” என்றால் எப்படி? நாங்கள் இனி உங்களை விடுவதாக இல்லை.
பதிலளிநீக்குஅந்த சுந்தர் சோகம் நெஞ்சில் கனத்தைத் தந்தது. ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற கம்ப காவியத்தின் ஒரு பக்கப் பதிவு மறக்க முடியாத பயணம்தான். இனி V.G.K யும் தொடர்வார் என நம்பலாம்.
நீங்கள் தொடருங்கள்.
மன்னிக்கவும்! மேலே சென்னைப் பித்தன் > சென்னை பித்தன் என்று வாசிக்கவும்.
நீக்குஎனக்கு வாய்ப்பளித்ததற்கும்,வருகைதந்து பாராட்டியதற்கும் நன்றிகள் தமிழ் இளங்கோ!
நீக்கு‘ப்’ இருந்தாலும்தான் என்ன?
தொடருங்கள் அறுவை என்றாலும் அன்போடு வருவோம் தலயின் ஜொல்லு லொல்லுக்காதல் படிக்க.ஹீ
பதிலளிநீக்குநன்றி நேசன்
நீக்குரசித்தேன்... தொடர்ந்து வருவோம்... விட மாட்டோம்...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குஅட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம் தொடருங்கள் சார் !
பதிலளிநீக்குநன்றிம்மா!
நீக்குஅருமையான தொடர் ஐயா..
பதிலளிநீக்கு