தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 02, 2016

பெண்ணிடம் கேட்கலாமா?



இன்றும் கடையில் அந்தப் பெண்தான் இருந்தாள்.

இருபது நாட்களாகவே ,நான் கடைக்கு வரும்போதெல்லாம் அவள்தான் இருக்கிறாள்.

கடை முதலாளி,எனக்குப் பரிச்சயமானவர்;அவரை இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

ஒரு வேளை மற்ற நேரங்களில் இருப்பாரோ என்னவோ?

பெண் அழகாகத்தான் இருக்கிறாள்

முதலாளிக்கு உறவாக இருக்கலாம்

அல்லது வேலைக்கு வந்த பெண்ணாக இருக்கலாம்

ஆனால் அவளைப் பார்த்தால் வேலைக்கு வந்த பெண்ணாகத் தோன்றவில்லை.

பத்து நாட்களாகவே ஒரே யோசனை.

அவளிடம் எப்படிக் கேட்பது?

இந்த வயதில் இவர் ஏன் இப்படி அலைகிறார் என்று எண்ண மாட்டாளா?

அதற்காக விட்டு விட முடியுமா?

இன்று எப்படியும் கேட்டு விட வேண்டியதுதான்.

கடைக்குச் சென்றேன்

இன்னும் ஓரிரு வாடிக்கயாளர் இருந்தனர்.

அவளிடம் தாழ்ந்த குரலில் கேட்டே விட்டேன்!

அவள் என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள்

பின் சிரித்தாள்.

அப்புறம்   வாருங்கள் என்று கிசுகிசுப்பாசக் சொன்னாள்

நான் கொஞ்சம் நடந்து விட்டு அவ்வழியாகத் திரும்பினேன்.

கடையை நெருங்கினேன்.

அவள் இருந்தாள்

வேறு யாரும் இல்லை.

அவள் அருகில் சென்றேன்

“அப்போது வேறு சில புதியவர்கள் இருந்தனர்;அதனால் தர முடியவில்லை இந்தாருங்கள்”

குனிந்தாள் 

கொடுத்தாள்

”பிள்ளையாரா? முருகன் இல்லையா? ”நான்

”இல்லை சார் இந்த ஆண்டு பிள்ளையார் மட்டும்தான்!”



19 கருத்துகள்:

  1. ஹாஹா! பிள்ளையார் காலண்டர் கிடைத்துவிட்டதா? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையார் காலண்டர் கிடைத்து விட்டதா..... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார்,முருகன்,லக்ஷ்மி மூன்றுமே!
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. அட, காலண்டர்! ஹா...ஹா.....ஹா...

    கிட்டத்தட்ட - கிட்டத்தட்டத்தான் - இதே போல 'எங்களி'ல் ஒரு பதிவு! நேரம் கிடைக்கும்போது முடிந்தால் வாசிக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுக்க விட்டுப் போச்சு போல!

      http://engalblog.blogspot.com/2012/06/blog-post_18.html

      நீக்கு
  4. காலண்டர்தானா,காண்டம்னு நினைச்சிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  5. மனதை அலை பாய வைச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு

  6. பதிவின் ஆரம்பத்தில் ஒரு சஸ்பென்ஸ் ஏற்படுத்தி இறுதியில் அதை உடைக்கும் கலையில் வல்லவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. ஹா... ஹா...
    காலண்டர் வாங்கிய கதை.
    எவ்வளவு அழகாய் ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  8. ஆஹா! கலண்டர் கேட்கவா இத்தனையும்.!ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. ஹஹஹஹஹ புதுவருட காலண்டர். இப்படித்தான் நான் கூட அதுவும் தினசரித் தாள் கிழிக்கும் காலண்டர் ஒன்று மாதக் காலண்டர் ஒன்று என்று. தினசரிக் காலண்டரில் என் அப்பாவுக்கும் எனக்கும் கொஞ்சம் தர்க்கம் வரும். அப்பா திருப்பதி என்பார். நான் பழனி என்பேன். அப்பா குருவாயூர் என்பார். நான் குன்றம்/மயிலை என்பேன். ஹிஹி உங்களுக்குப் புரிந்திருக்குமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தும்பிக்கையானை மறந்துவிட்டேன்...அவரும் என் லிஸ்டில் உண்டு!!! மெயின்!

    பதிலளிநீக்கு