ஓடிப்
போனவளே நான் ஒன்னைத்
தேடித்
தேடி அலுத்துப்போனேன்!
பாக்காத
நேரத்தில் பாவி மக
பரிதவிக்க
விட்டுப் போனாயே!
என்ன
கொறை வச்சேன் ஒனக்கு
என்னை
ஏன் விட்டுப் போனேடி?
சோசியமும்
பாத்தாச்சு,ஆத்தா
அருள்
வாக்கும் கேட்டாச்சு
எதுவுமே
பலிக்கலியே இன்னும் நீ
இருக்கும்
எடமும் தெரியலியே
வேலைக்கும்
போகலியே
வீட்டில்
எல்லாம் குவிஞ்சிடுச்சே
சுணக்கம்
இல்லாம வா,துணியெல்லாம்
சுமக்க வேறென்ன செய்வேன்?!
(ஒரு
கிராமத்து சலவைத் தொழிலாளி காணாமல் போன கழுதையை எண்ணிப் புலம்புகிறார்)
ஹாஹாஹாஹா நான் வேற மா3 நினைச்சுட்டேன் ஐயா
பதிலளிநீக்குஎந்த இழப்பும் சோகம்தானே ஜீ!
நீக்குமின்னல் வருகைக்கு நன்றி
சலவைத் தொழிலாளிக்கு ஓடிப்போன பெண் (கழுதை) மேல் உள்ள பாசம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. :) பகிர்வுக்கு நன்றிகள், சார்.
பதிலளிநீக்குகதையின் நீதி:
நீக்குகட்டியவளோ, கழுதையோ நம்முடன் கூடவே இருக்கும் வரை அவளின் அருமையும், பெருமையும், உபயோகமும் நமக்குத் தெரியவே தெரியாது என்பதாக இருக்குமோ?
அதே அதே!ஆகா! வைகோ சாருக்கு ஒரு பெரிய நன்றி;நான் நீதியின்றிக் கதை எழுதுவதில்லை என்பதை உணர்த்தியதற்கு!
நீக்குஉண்மை அதுதானே வைகோ சார்!
இதுக்கே இப்படின்னா ,பெண்டாட்டி போனா இன்னும் எப்படி புலம்புவாரோ :)
பதிலளிநீக்குசந்தேகம்தான்!
நீக்குநன்றி பகவான் ஜி
மிகவும் அவசியமான நேரத்தில் இழந்த பொருளின் அருமை தெரியும் என்பதனை யதார்த்தமாய் வண்ணானின் குரலாய் ஒலித்திருக்கின்றீர்கள்! அழகிய எளிய நடையில்.... அருமை! அருமை அய்யா!
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு விளக்கமா!சூப்பர்
நீக்குநன்றி கிருஷ்ணரவி
கொஞ்ச நேரத்தில் அதிர வைத்து விட்டீர்களே,,,
பதிலளிநீக்குநல்ல வேளை அது கழுதையானது
இருந்தாலும் பாவம் தொழிலாளி,,,
சிறப்பூ!!!
நன்றி செந்தழல் சேதுபதி
நீக்கு(முன்பு செந்தழல் ரவி என்ரு ஒரு பிரபல பதிவர் இருந்தார்.இப்போதேல்லாம் எழுதக் காணோம்)
எப்படியோ நன்றாக “பல்பு” வியாபாரம் செய்வதில் சமர்த்தர் ஆகிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஎன்னைப் போன்றவர்கள்தான் பல்பு பல்பாக வாங்கி எங்கே வைப்பதெனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஹ ஹ ஹா
வித்தியாசமான பார்வை ஐயா.
( தங்கள் பதிவிற்கு வந்தாலும் கருத்திட்டு போகாமல் இருந்திருக்கிறேன். மன்னியுங்கள் )
இனி வருகையைப் பதிவு செய்து போகவேனும் முயல்வேன்.
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி.
நானும் பல நாட்கள் பல பதிவுகளை விட்டு விடுகிறேன்!
நீக்குநன்றி ஐயா
புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்
ஓடிப்போனவளை படித்து ஏமாந்தேன்.
பதிலளிநீக்குத ம 5
:)) நன்றி செந்தில்குமார்
நீக்குஹா... ஹா... ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குசலவைத்தொழிலாளியின் புலம்பலை தங்கள் நடையில் இரசித்தேன். கவிதையின் இறுதியில் அது ஒரு சலவைத் தொழிலாளி ஓடிப்போன அவரது கழுதையை எண்ணி புலம்பியது என சொல்லாமல் விட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குசொல்லாமல் விட்டால் சுவையின்றிப் போயிருக்கும்!
நீக்குநன்றி சார்
ஹாஹா..... ஓடிப்போனது கழுதையா! :)
பதிலளிநீக்குரசித்தேன்!
நன்றி வெங்கட்
நீக்குகஷ்டம்தான்!
பதிலளிநீக்குவைகோ ஸார் சொல்லி இருக்கும் நீதியையும் ரசித்தேன்.
ஆமாம்.நன்றாகவே சொன்னார்!
நீக்குநன்றி ஸ்ரீராம்
இதற்குத்தான் கால்கட்டுப்போடணும் என்பது...!
பதிலளிநீக்கு//இதற்குத்தான் கால்கட்டுப்போடணும் என்பது...!//
நீக்குஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது சூப்பர் பஞ்ச் !! :)
வைகோ சார் சொன்னதுக்குப் பின் நான் என்ன சொல்ல!
நீக்குசூப்பர்
நன்றிம்மா
அடா! அடா! அடா! இதைவிட வேறு எப்படியும் பாட்டு பாட முடியாது அந்த சலவைத்தொழிலாளியாலே! அசத்திட்டீங்க! நிறைய பேருக்கு பல்பு கொடுத்து!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஹஹஹஹஹ ...அந்தக் கடைசி வரிகளின் முன் துணியெல்லாம் சுமக்க என்று வந்ததும்...ட்ராக் மாறுதே கழுதையோ என்று நினைத்து வந்தால் அதே....செம ரொமப் ரசித்தோம் சார்..
பதிலளிநீக்குநீங்க எப்பவும் உஷார்!
நீக்குநன்றிங்க
அருமை ஐயா
பதிலளிநீக்குதலைப்பை வச்சு கொஞ்ச நேரம் யோசிச்சி பார்த்தேன் என்னவோ இருக்கும்னு. கண்டு பிடிக்க முடியல.படிச்சதும் தான் புரிந்து. ஐயா!சுவாரசியத் தலைப்பு கொடுப்பதில் உங்களை மிஞ்ச முடியாது
நன்றி முரளி
நீக்குஹா...ஹா...உதைக்காமல் ஓடிப்போனாளே என சந்தோசப்பட வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க!
நீக்குரொம்ப நாளாக் காணோமே?நலந்தானே?
நன்றி