ஒரு
சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்
“என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்று” பார்த்தீங்களா?”
“என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை!வசூலே இல்லை போல”
படம்
எப்படி இருந்தது”
ஏதோ
இருக்கு!என்ன
சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ் டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்?
“இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்”
“ஏன் இல்ல?ஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே!
“எப்படி”
மாதவன்
மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல்
குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டு!ரெண்டு பேரும் நீச்சல் உடையில!லவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.
புது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட
மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.
இதில
குத்துச் சண்டை
,பயிற்சி அதெல்லாம் வரல்லையே”
காட்டாம
விடுவமா?இப்போ
சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானே!நடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்
சரி,காமெடி?
பயிற்சிக்கு
வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்!இது போதாதா?
சண்டைக்
காட்சி?
மாதவனை
அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்!
கடைசியில
மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற
மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்!
இதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே!
படம்
பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது?
எனக்கு மிகவும் பிடித்திருந்தது
டிஸ்கி:இந்தாளுக்கு இதே வேலை ! படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு
வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு
வந்தீங்களா?
உங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு!
வித்தியாசமான விமர்சனம் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
ஹா.. ஹா... விமர்சனம் அருமை ஐயா...
பதிலளிநீக்குஎனக்கும் படம் ரொம்ப பிடித்திருந்தது.
//இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு வந்தீங்களா?// ஆமாம் ஐயா, ஆமாம்....அவ்வ்!
பதிலளிநீக்குநீங்களே இயக்குனராகி விடலாம் தாத்தா.
பதிலளிநீக்குஅடேடே.. படம் பார்த்து விட்டீர்களா.. நல்ல யோசனைகள்தான்! வழக்கமான மசாலாவுக்கு இதெல்லாம் குறைதான்! உங்கள் கால் எப்படி இருக்கிறது?
பதிலளிநீக்குதம +1
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்து நான் கூட வழக்கம்போல் எங்களை ஏமாற்றுகிறீர்களோ என நினைத்து படித்துப் பின் ஏமாந்தேன்! நாடத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த நீங்கள் திரைப்படத் துறைக்கு சென்றிருந்தால் வணிக இயக்குனர் (Commercial Director) ஆக பிரகாசித்திருப்பீர்கள்!
நல்ல விமர்சனம். ரசித்தேன்.
பதிலளிநீக்குஇறுதிச் சுற்றுக்கு தங்கள் பாணியிலான விமர்சனத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குத ம 6
வணக்கம் ஐயா நலமா கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டீர்களே...
பதிலளிநீக்குவிமர்சனம் தங்களது பாணியில் நன்று ரசித்தேன்
இந்தவாட்டிப் பல்பு வாங்கலையே சார்....முதலில் செபி சார் இப்படித்தான் தலைப்பு வைச்சுட்டு வேறு சொல்லுவார் என்று தெரியும் என்றாலும் இந்தத் தலைப்பு ஏனோ அப்படி எண்ண வைக்கவில்லை....விமர்சனம் அருமை வித்தியாசமாய்..
பதிலளிநீக்குதுளசி பார்த்தாச்சு...நல்ல படம் ...கீதா இனிதான் பார்க்க வேண்டும் நல்ல படம் என்பதால்..அதுவும் செபி சார் சொல்லியாச்சே...
ஹாஹா....
பதிலளிநீக்குவணக்கம்,ஐயா........ நலமா?////இன்றைக்குக் காலையில் தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு,குளியலறை மின்குமிழ் ஒளி இழந்தது,வாங்கி மாற்றி விட்டேன்,உங்கள் கடையில்.........
பதிலளிநீக்கு