தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 14, 2012

சகுனி -ஒரு பார்வை-பரல்கள்


சகுனி பற்றிச் சில சுவாரஸ்யமான செய்திகள் அறிவோமா?

சகுனி என்பவன் காந்தார நாட்டு இளவரசன்.காந்தாரியின் உடன்பிறப்பு.திருதிராஷ்டிரனின் மைத்துனன்.அவன் பயன் படுத்திய பகடைகள் அவன் தந்தையின் தொடை எலும்பி லிருந்து செய்யப்பட்டதாகவும்,அவன் சொல்லும் எண்ணையே காட்டும் என்று சொல்வார்கள்.

சகுனி காந்தார நாட்டு அரசன் சுலபாவின் கடைசி மகன். சகுனியின் சகோதரி, காந்தார இளவரசி காந்தாரியின் முதல் கணவன் இறந்து விடுவான், இரண்டாவது கணவன் உயிர் வாழ்வான் என ஒரு சோதிடர் சொல்லவும்,காந்தாரிக்கும் ஒரு ஆட்டுக்கும் மணம் செய்து வைத்து அந்த ஆட்டைப் பலி கொடுத்து விடுகிறார்கள்.எனவே,நடைமுறையில் காந்தாரி ஒரு கைம்பெண்ணாகவும்திருதிராட்டிரன் அவளது இரண்டாவது கணவனாகவும் ஆகிறார்கள்.

ஒரு நாள் பீமன் துரியோதனனை விதவையின் மகன் என்று கிண்டல் செய்ய.கோபம் கொண்ட சுயோதனன்,உண்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு,காந்தார மன்னனையும், அவன் புதல்வர்களையும் கைது செய்து சிறையில்  அடைத்து ,தினம் பிடியளவு உணவே அளிக்க,அது அனைவருக்கும் போதாது என்பதால்,கடைசி மகன் சகுனிக்கு அதை அளித்து அவனை வாழச் செய்து விட்டு மற்றவர்கள்  இறக்கிறார்கள். அதன் பின் காந்தாரியின் வேண்டு கோளின்படி சகுனி விடுதலை செய்யப் படுகிறான்.தன் தந்தையின் தொடை எலும்பில் பகடைகள் செய்த சகுனி,கௌரவர்களைப் பழி வாங்கச் சபதம் செய்து தன் சூழ்ச்சியினால் அந்த வம்சத்தையே அழிக்கிறான்.

இது பிற்காலத்தில் எழுந்த ,மகாபாரதத்தில் இல்லாத கதை!


**********************************************

சகுனி படம் பற்றி---
அதில் கதாநாயகன் பெயர் கமல்;காமெடியன் பெயர் ரஜினி. என்ரு அறிகிறேன்.ஏன் ரஜினியைக் காமெடியனாக்கி விட்டார்கள்?அதுவும் கமல் கதாநாயகனாக இருக்கும்போது? ரஜினி ரசிகர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை?(நான் படம் பார்க்கவில்லை;கேள்விப்பட்ட செய்திதான்) 

**********************************************

திருமணமான ஆண்களுக்கு இரு அறிவுரைகள்------
1)உங்கள் மனைவி விரும்பித் தேர்வு செய்யம் விஷயங்களைப் பற்றிக் கேலி செய்யாதீர்கள். நீங்களும் அவைகளில் ஒன்றுதான்!

2)நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விஷயங்கள் பற்றிப் பெருமைப் படாதீர்கள். உங்கள் மனைவியும் அவற்றில் ஒன்று.



நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது!


46 கருத்துகள்:

  1. //திருமணமான ஆண்களுக்கு இரு அறிவுரைகள்------
    1)உங்கள் மனைவி விரும்பித் தேர்வு செய்யம் விஷயங்களைப் பற்றிக் கேலி செய்யாதீர்கள். நீங்களும் அவைகளில் ஒன்றுதான்!

    2)நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விஷயங்கள் பற்றிப் பெருமைப் படாதீர்கள். உங்கள் மனைவியும் அவற்றில் ஒன்று.//

    அருமை ஐயா.... அருமை.

    அருமையான அறிவுரைகள். ;))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரட்டிகளில் இணைத்து முடிக்குமுன் உங்கள் பின்னூட்டம்!மின்னல் வேகம்.
      நன்றி வைகோ சார்

      நீக்கு
  2. //நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது!//

    ஆஹா! இது அதைவிட அருமை.

    உண்மையை உண்மையாகப் புட்டுப்புட்டு வைக்க ஓர் தைர்யம் வேண்டும். அது உங்களிடம் நிறையவே உள்ளது. அதனால் அசராமல் எழுதுங்கள், ஐயா.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...அரிய தகவல் அப்புறம் அந்த அறிவுரை சூப்பர் ஐயா...தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது!

    -அவ்வ்வ்வ்வ்! ஸேம் பிளட! மிஸ்டர் சகுனி காந்தார நாட்டு இளவரசன், காந்தாரியின் சகோதரன் போன்ற விவரங்கள் தெரியுமெனினும் நீங்கள் சொல்லியிருப்பது மெத்தவும் புதுசு. மகாபாரதத்தில் தான் எத்தனை கிளைக் கதைகள்..! பரல்களை மிக ரசித்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. சகுனி என்ற தலைப்பைப் பார்த்ததுமே இந்த தடவை நான் ஏமாறவில்லை. நீங்கள் நிச்சயம் மகாபாரத சகுனியைப்பற்றிதான் எழுதியிருப்பீர்கள் என நினைத்தேன். சகுனியைப் பற்றி அறியாத தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    மணமான ஆண்களுக்கான அறிவுரைகள் ‘சூப்பர்.’

    பதிவின் முடிவில் எழுதி இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன். எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை எப்படி நினைக்கிறீர்கள்? உங்களுக்கு என்றோ அங்கீகாரம் கிடைத்துவிட்டது. தொடரட்டும் உங்கள் பணி!

    பதிலளிநீக்கு
  6. மகாபாரத சகுனி பற்றிய தகவல் உங்கள் மூலமாகத்

    தான் தெளிவாக அறிந்து கொண்டேன்.

    இதுவரை அரசல் புரசலாகத் தான் தெரிந்திருந்தது.

    தேர்வுத் தத்துவம் சிரிப்பும் திகைப்பும் தந்தன.

    மிக்க நன்றி cp சார்.

    தளராமல் தொடரவும். [ இந்த addiction - னுக்குத் தான் நானும்

    பயப்படுகிறேன் ]... என் செய்வது ?

    பதிலளிநீக்கு
  7. சகுனி தகவல் புதியது.
    திருமணமான ஆண்களுக்கு அறிவுரை சூப்பர்! எங்கிருந்துதான் புடிக்கிறீங்களோ?

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் பதிவிடும் வேகத்திற்கு என்னைப் போன்றவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  9. மகாபாரதச் சகுனி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.கணேஷ் சொல்வது போல முதல் விவரம் தெரியும் என்றாலும் தொடரும் விவரங்கள் புதிது. இது போன்ற மகாபாரதக் கிளைக் கதைகளை அவ்வப்போது பதிவிடலாம்.
    திருமணமான ஆண்களுக்கான முதல் அறிவுரை அருமை! இரண்டாவது புன்னகை!

    பதிலளிநீக்கு
  10. ஆக்கம் நன்றாக இருந்தது மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி இல்லையே !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காமராஜ்
      (2010இல் பதிவெழுதத்தொடங்கி அந்த ஆண்டே நிறுத்தி விட்டீர்களே?இப்போது தொடரலாமே?)

      நீக்கு
  11. <<< நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது >>>

    சத்தியமான உண்மை ஐயா! பலமுறை எனக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டதுண்டு..! (TM 5)

    பதிலளிநீக்கு
  12. பரல்கள் அருமை. சகுனி - என்னமா ட்விஸ்ட் வைச்சுருக்கீங்க! எல்லாரும் சகுனி திரைப்படம்னு நினைச்சு வந்தா இங்கே மஹாபாரத சகுனி! போனா போகுதுன்னு திரைப்படம் பற்றியும் குட்டியா ஒரு பரல்... :)

    ரசித்தேன். த.ம. 6

    பதிலளிநீக்கு
  13. சகுனியைப் பற்றியும் அவன் வைத்து இருந்த பகடைகளைப் பற்றியும் சுவையான செய்திகள். நான் அறிந்திடாதவை.

    பதிலளிநீக்கு
  14. நலதொரு பகிர்வு ஐயா.. உங்க அனுபவ கட்டுரைகள் நீடித்த ஆயுள் உள்ளவை.. அதிகம் வாசித்து இருந்தாலும் உங்கள் போன்ற மூத்தவர்களுக்கு கமென்ட் பண்ண வயது தடுக்கும்.. ஆகவே இது தான் எனது முதல் கமென்ட்..

    சந்தானம் காமடியனாக இருந்தாலும்.. அனேக விமர்சகர்கள் படத்தில் நாயகன் சந்தானம் தான் என்று கூறியிருக்கிறார்கள்.. ஒரு வேளை ரஜினி என்ற பெயர் இணைந்து விட்டதால் என்னவோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என் வயதைப் பற்றிக்கவலைப்படுவதில்லை.நீங்களும் தயங்க வேண்டாம்!
      நன்றி ஹாரி பாட்டர்

      நீக்கு
  15. புதிய அரிய தகவல்
    ஆண்டவன் எனத் தெரிந்தும் அச்சமின்றி போராடும்
    சகுனி ரொம்பப் பிடிக்கும்
    இந்தக் கதையில் ஆளுபவன் எனத் தெரிந்தும்
    ஒருவன் போராடுகிறான் என்பதைத் தவிர
    அந்த சகுனிக்கும் இந்தச் சகுனிக்கும்
    எந்த சம்பந்தமும் இல்லை
    எதையும் ரசிக்கத் தக்க பதிவாக்கிவிடும்
    தங்கள் திறன் ஆச்சரியப்படுத்துகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. சகுனி பற்றிய தகவல்கள் நான் அறிந்தது இருந்தும் தெளிவாக அறிந்து கொண்டேன்

    // ரஜினி ரசிகர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? // இந்த சகுனி படிரிய தகவல் பற்ற வைத்து விட்டது போல் தோன்றுகிறதே,

    //ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் // உங்கள் மனமும் அப்படித் தான் நினைக்கிறதா ?

    பதிலளிநீக்கு
  17. தொடையில ஏது சார் எலும்பு!அது மூட்டிலிருந்து செய்யப் பட்டதென நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //The femur (pl. femurs or femora), or thigh bone, is the most proximal (closest to the center of the body) bone of the leg . The femur is the largest bone in the human body. the femur is one of the strongest bones in the body.//

      கதையில் இருப்பதைச் சொன்னேன்.அதற்காக என்னை விக்கிப்பீடியாவில் தேட வைத்து விட்டீர்களே!
      நன்றி ரவிக்குமார்

      நீக்கு
  18. புதிய பல தகவல்கள்...வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா...தொடருங்கள்.சந்திப்போம்:)
    ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    பதிலளிநீக்கு
  19. //நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது!//

    உண்மையை உள்ளபடியே சொல்ல உங்களால் மட்டுமே முடிகிறது. பெருமைக்குரிய விஷயம் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. என்னடா நம்ம சென்னைபித்தன் ஐயாலாம் கூட சினிமா விமர்சனம் எழுதுறாரேன்னு நினைச்சு பயந்து போய் வந்தேனுங்க. ஆனா, மகாபாரத சகுனி பற்றி தெரியாத பல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. சென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா? கால் வலி எப்படி உள்ளது. உடனுக்குடன் அடுத்த பதிவைத் தந்து விடுவீர்கள். இந்த பதிவு போட்டு ஒருவாரம் ஆயிற்று. அதனால்தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஒரு பதிவு போட்டு விட்டேன்.கால் சிறிது சிறிதாகச் சரியாகிவருகிறது.
      அன்புக்கு நன்றி இளங்கோ

      நீக்கு
  22. கார்த்தியின் சகுனி என மேலோட்டமாக பார்த்தேன் இல்லை இது நம்ம சகுனி.....

    நல்லா இருந்துது அங்கிள்.....

    பதிலளிநீக்கு