சில நாட்களுக்கு முன் “வலைப்பூ தந்த வருமானம்” என்ற தலைப்பில் ஒரு பதிவில் ,பதிவுலக
நட்பின் பெருமை பற்றி எழுதியிருந்தேன்.அதை
நினைவு கூர மீண்டும் ஒரு தருணம் வந்திருக்கிறது.காலில் கட்டுடன்
முடங்கிப் போய் நான் அமர்ந்திருக்கும் வேளையில்,பின்னூட்ட வாயிலாக
தங்கள் பிரார்த்தனையைத் தெரிவித்தவர் பலர்.இது வரை நேரில் சந்தித்து
அறிமுகமாகாத நிலையிலும் தொலை
பேசி வாயிலாக விசாரித்தவர்கள் சிலர்.
நேற்று இரவு,துபாயிலிருந்து ஒரு பதிவு நண்பர்-அவரை நான் அவரது பின்னூட்டங்கள்
வாயிலாக மட்டுமே அறிவேன்-தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.பின் அவர் “அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்கிறீர்கள்?”
எனக்கேட்டார்.அந்த அன்பு என் கண்களில் கண்ணீர்
வரவழைத்து விட்டது.அவரிடம் உதவிக்கு என் சகோதரி வெளியூரிலிருந்து
வந்திருக்கும் செய்தியைச் சொன்னேன்.
இத்தகைய
முகம் தெரியாத ,வயது வேறுபாடு கடந்த, அன்பு நண்பர்களைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ?
***********************************
***********************************
இசை கேட்டால்?!
-----------------------------
ராமுவின் மனைவி பாட்டுக் கற்றுக்கொள்ளத்
தொடங்கினாள்.தினமும் தவறாமல் அவள்
பெரிதாகப் பாடிச் சாதகம் செய்யலானாள்.அப்போதெல்லாம் ராமு வீட்டுக்கு
வெளியே சென்று அமர்ந்து விடுவான்.அவள் அவனைக் கேட்டாள்
,தான் பாடுவது பிடிக்கவில்லையா என்று.அவன் சொன்னான் ”ரொம்பப் பிடிக்கிறது .ஆனால் அக்கம் பக்கத்திலுள்ளோர்
நான் உன்னை அடிப்பதாகத் தவறாக நினைத்து விடக்கூடாதில்லையா.எனவேதான்
வெளியே சென்று விடுகிறேன்”
***********************
ஒரு கணவன் கூகிளில் ஒரு முறை”மனைவியை
சமாளிப்பது எப்படி” என்பதற்கான பதிலைத் தேடிப் பார்த்தான்.அவனுக்குக் கிடைத்த பதில்” வாருங்கள்
நண்பரே!அதற்கான விடையைத்தான் தேடிக் கொண்டிருக் கிறோம்!”
************************************************
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்;செய்ய முடியாதவன் போதிக்கிறான்—பெர்னார்ட்ஷா
உதவும் கரங்கள்,ஜெபிக்கும் உதடுகளை விடச் சிறந்தது---அன்னை தெரசா
என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்-------யாரோ
மனிதர்கள் தெரிந்தே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துன்பம்—
திருமணம்(ஸ்வாமி பித்தானந்தா)
**************************************************
**************************************************
முகம் தெரியா நண்பர்கள் என்றாலும் நம் உள்ளந் தெரிந்தவர்கள் அங்கிள் கால் எப்படி இப்போது?? சுகம்தானே அங்கிள்.....
பதிலளிநீக்குஉண்மைதான் எஸ்தர்.அதுதான் நெகிழ வைக்கிறது.
நீக்குகுறைந்தது மூன்று வாரத்துக்கு ஹவுஸ் அரெஸ்ட்தான்!
நன்றி.
பரல்கள் ஒவ்வொன்றும் அருமை... தொடர்ந்து மூன்று வாரத்திற்கு எங்களுக்கு பதிவு விருந்து தான்...
பதிலளிநீக்குநன்றாக ஓய்வெடுத்துக்கொண்டு பதிவுகளை வெளியிடுங்கள்....
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால் சிந்தனையும் சிறைப்பட்டு விடுகிறதே!
நீக்குநன்றி வெங்கட்
அருமை ஐயா.
பதிலளிநீக்குகால் வலியோடு இருக்கும் போதும் ரசனையாய் ஒரு பதிவு.
இப்ப கால் வலி எப்படியிருக்கிறது. வலி குறைந்திருக்கிறதா? நடக்க முடிகிறதா?
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.
வலி அதிகம் இல்லை;வீக்கம் இருக்கிறது.காலை ஊன்றக் கூடாது என்பது மருத்துவர் அறிவுரை.எனவே நடை அதிகமில்லை
நீக்குநன்றி குமார்
அரமியாகவுள்ளது ஐயா......வலையுலகம் உண்மையில் நிறைய நட்புகளை கடல்தாண்டியும் சேர்த்து தந்துள்ளது......
பதிலளிநீக்குமன்னிக்கவும் அருமையென வாசிக்கவும்
பதிலளிநீக்குநன்றி விமலன்
நீக்குநன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சார்... எல்லாம் சரியாகி விடும்... (TM 3)
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குமுன்பின் நேரில் நாம் பார்த்து அறியாத ப்லர் எப்போதும் நம் தொடர்பு எல்லைக்குள் இருப்பது தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் தவிர, மின்னஞ்சல், சுட்டி, தொலைபேசி என பல ஊடகங்களில் தொடர்பு கொள்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். ஆலோசனை கேட்கிறார்கள். ஆலோச்னை சொல்லுகிறார்கள்.
நம் நலனில் அக்கறை காட்ட இத்தனை பேர்களா என நினைக்கும் போதே நமக்கு மிகவும் புதிய உற்சாகமும், தெம்பும் கிடைத்து, மனபாரமும் கவலைகளும் மிகவும் லேசாகிப்போனது போல உணரமுடிகிறது
தாங்கள் சொல்வது யாவும் புரிந்து கொள்ள முடிகிறது. கால் பூரண குணமாகும் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், ஐயா. அன்புடன் vgk
நன்றி வைகோ சார்
நீக்குஎழுத்துக்கள் மூலம் சேர்ந்த இந்த சொந்தம் என்றென்றும் நீடித்திருக்க இறைவனை வேண்டுகிறேன்! உடலை நன்றாக பார்த்துக்கொள்ளவும்!
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
நீக்குayya !
பதிலளிநீக்குudampai kavanithu kollungal!
aanaal
thidarnthu ezhuthungal!
appo thaan athilirunthu vidupada mudiyum!
நன்றி சீனி
நீக்கு// இத்தகைய முகம் தெரியாத ,வயது வேறுபாடு கடந்த, அன்பு நண்பர்களைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ? // உண்மையிலும் உண்மை அய்யா உள்ளம் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் உடல் நிலை சீக்கிரம் குணமாகி விடும், உள்ளதை சரி செய்ய நண்பன் ஒருவனே போதும், அதிலும் பலர் இருந்தால் க்டேட்கவே வேண்டாம். சீக்கிரம் குணமடைவீர்கள்
பதிலளிநீக்குபின்னால் தொடர்ந்து வந்த நகை சுவையாய் இருந்தது
// இத்தகைய முகம் தெரியாத ,வயது வேறுபாடு கடந்த, அன்பு நண்பர்களைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ? // உண்மையிலும் உண்மை அய்யா உள்ளம் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் உடல் நிலை சீக்கிரம் குணமாகி விடும், உள்ளதை சரி செய்ய நண்பன் ஒருவனே போதும், அதிலும் பலர் இருந்தால் க்டேட்கவே வேண்டாம். சீக்கிரம் குணமடைவீர்கள்
பதிலளிநீக்குபின்னால் தொடர்ந்து வந்த நகை சுவையாய் இருந்தது
நன்றி சீனு
நீக்குஐயா, இன்று தான் விஷயம் அறிந்தேன்..கால்வலி விரைவில் தீர பிரார்த்திர்க்கின்றேன்..
பதிலளிநீக்குஉள்ளத்தில் உற்சாகம் நிறைந்த நீங்கள் இந்த உடல் வேதனையிலிருந்து விரைவில் மீண்டு வருவீர்கள். என் பிரார்த்தனையும் வாழ்த்தும் உங்களுக்கு. பரல்கள் மிகச் சுவை.
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
நீக்குஉண்மைதான் ஐயா இந்த புது உலக நட்பும் ஷ்பரிசமும் நெகிழ வைப்பது உண்மையே.
பதிலளிநீக்கு//காலில் கட்டுடன் முடங்கிப் போய் நான் அமர்ந்திருக்கும் வேளையில்..//
பதிலளிநீக்குசார் இந்த மாதிரியான எதிர் மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்க ஏக்டிவா இருக்கரீங்க. உங்களுக்கு உற்ற தோழன் புத்தகங்கள் தற்சமயத்தில் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். பல வலைப்பதிவுகளிலும் உங்கள் கருத்துகளை பார்க்கிறேன். இது போன்ற சந்தர்பங்களில் நானும் இது நல்லதுக்கேன்னு நினைப்பேன். உங்களுக்கு தெரியாததில்ல "இதுவும் கடந்து போம்" என்கிற சொற்றொடர்.
ஓய்வில்லா நேரத்திலேயே தினம் ஒரு பதிவு எழுதுபவர்கள் நீங்கள். இப்போது கேட்கவா வேண்டும். பரல்கள் தந்த முத்துக்கள்(மாணிக்கங்கள்?) அனைத்தும் அருமை. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநட்பை மட்டும் அல்ல … நம் அறிவு பசிக்கும் தூண்டில் ,… !
பதிலளிநீக்கு