தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 02, 2012

கால் கட்டுப் போட்டாச்சு!!


மாலை
ஐந்து மணிக்கு வெளியே போய்
ஆறு மணிக்கு வீடு திரும்பும்
பழக்கம் இல்லை சில நாட்களுக்கு
கடை கண்ணிக்குப் போய்
காய் பழம்,மளிகை வாங்கும்
வேலை இல்லை மூன்று வாரம்.
ஓய்வு,ஓய்வு,ஓய்வுதான்!
கடவுள் செய்த முடிவு
கட்டுப் பட்டு(கட்டுப்போட்டு)த்தானே
ஆக வேண்டும்!

நேற்று மாலை நண்பர் மூவருடன் இரவு உணவருந்தி விட்டுக் கார் பார்க்கில் காத்திருந்த நேரம்,பின்னோக்கி வந்த காரொன்று என் இடது காலில் ஏறியது.

இன்று எக்ஸ்ரே எடுத்த பின் சுண்டு விரலிலும்,அடுத்த விரலிலும் மயிரிழை விரிசல் தெரிய வந்து.மருத்துவர் கட்டுப்போட்டு,காலைத்தூக்கி வைக்கவும் நடக்காமல் இருக்கவும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமா?

வலிக்கொன்று, வீக்கத்துக்கொன்று, வலி மாத்திரையின் பக்க விளைவுகளைச் சமாளிக்கவொன்று,கால்சியம் ஒன்று வைட்டமின் டி ஒன்று எனப் பல மாத்திரைகள் தந்து ஏழு நாட்கள் ’உணவுக்குப் பின்’ சாப்பிடச் சொல்லி விட்டார்.

நான் கேட்டேன்”இதுவே ஒரு உணவு போலிருக்கிறதே?”

மருத்துவர் ரசிக்கவில்லை!

இன்று முதல் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்ட ஓய்வு தொடக்கம்!

48 கருத்துகள்:

  1. விரைவில் குணமடைந்து திரும்ப இறைவனை வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பிரார்த்தனைக்கு பயன் கிடைக்கும்!நன்றி

      நீக்கு
  3. Hairline fracture...? RICE helps...Hopefully you have a cast...Take care...n Get well soon..Piththare...

    பதிலளிநீக்கு
  4. niraya padhivugal ezhudha vaaippu ena ennik kollungal [ valiyum veekamum

    kuraintha piragu ]. konjam kavanama irunga ini. ethavathu 'gandha' ayurvedic

    tailam pola [KAPL in elliots beach ].. nambikkai irunthaal supportive aaga

    irukka ubayogitthu paarkkavum.viraivil kaalkattai thagarthu erinthu koondai

    vittu veli vara en vaazhthukkalum , prartthanaigalum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sravaani!

      nalamaa!

      ungalathu bloggeril nulaiya mudiyavillaiye!

      நீக்கு
    2. தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஸ்ரவாணிஆலோசனைக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  5. அடடா! ஜாக்கிரதை சார். விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் இதையும் ஜாலியாகச் சொல்லிப் போனது
    எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் தங்கள்
    குணத்தைக் காட்டிப்போனாலும்
    எங்களால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை
    விரைவில் குணமடைய எல்லாம் வல்லவனை
    வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வேண்டுதல் விரைவில் குணம் பெற உதவும்.நன்றி ரமணி

      நீக்கு
    2. உங்கள் வேண்டுதல் நான் விரைவில் நலம் பெற்த் துணை புரியும் நன்றி ரமணி

      நீக்கு
  7. பதிவு கண்டு பதட்டமடைந்தேன விரைவில் குணமடைய வேங்கடவனை வேண்டுகிறேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வேண்டுதல் எனக்கு ஒரு கூடுதல் மருத்துவம்1
      நன்ரி புலவர் ஐயா

      நீக்கு
  8. உங்களுக்கு ஓய்வு தேவை தான் என்றாலும், இவ்வகையான ஓய்வு வேண்டியதில்லைதான். எனினும் ‘நடக்க’ வேண்டியது நடந்தே தீரும் என்பதால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த கட்டாய் ஓய்வு மேலும் பல புதிய எண்ணங்களை எழுதத்தூண்டும் என நம்புகிறேன். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மொழிகளுக்கும் வேண்டுதலுக்கும் நன்றி சபாபதி சார்

      நீக்கு
  9. அடடா சார் ஜாக்கிரதையாக இருங்க. விரைவில் முழு நலன் பெற விழைகிறேன்

    பதிலளிநீக்கு
  10. தோழி ஸ்ரவாணி சொல்லியிருப்பது மிகச்சரி. இந்த ஓய்வானது நிறையப் படிக்கவும் எழுதவும் கிடைத்த வாய்ப்பாகக் கொண்டு விரைவில் நலம் பெற்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பு எனக்குத் துணை நிற்கும்.
      நன்றி கணேஷ்

      நீக்கு
  11. நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?

    பதிலளிநீக்கு
  12. விரைவில் குணம்பெற்று திரும்ப வாழ்த்துக்கள் சார். இந்த வயசுல உங்களுக்கு கால் கட்டு போட்ட டாக்டரை பாராட்டாமல் விட்டு விட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டரை நீங்கள் பாராட்டி விடுங்களேன்
      அன்புக்கு நன்றி பாலா

      நீக்கு
  13. மனம் கனத்தது
    கண்களும் பனித்தன.
    விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்து போனேன்.
      நன்றி அஜீஸ்

      நீக்கு
  14. விரைவில் குணமடைவீர்கள்...எனது முழு நம்பிக்கையும் ஓய்வின் பின் உங்களால் வெளியிடப்படும் பதிவுகளில் தான் இருக்கிறது...

    நல்ல படைப்புகளை வலையுலகம் சில நாட்களில் காணப்போகிறது என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையைக் காப்பாற்ரும் கூடுதல் பொறுப்பு வேறு!
      அன்புக்கு நன்றி சிட்டுக் குருவி

      நீக்கு
  15. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு விசாரணைக்கு நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  17. கவலை வேண்டாம் அங்கிள் நலம் விரைவில் வரும்....

    பதிலளிநீக்கு
  18. விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  19. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
    விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  20. சீனி சார் , பித்தன் சார் , கணேஷ் சார் வணக்கம் & நன்றி !
    சீனி சார் , நலமே ! நீங்கள் ?
    மன்னிக்கவும் . நான் மீண்டும் கவிதை எழுதத் துவங்கும் போது
    blog i அனைவர் பார்வைக்கும் திறந்து வைப்பேன்.
    தற்போது அது ' பிரைவேட்' ஆக ஆக்கப்பட்டுள்ளது.
    சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அடடா... நல்ல குணமாகும் வரை ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்... விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு