கட்டிக் கரும்பே கனியமுதே கண்ணம்மா
சுட்டித் தனத்தால் என்னுள்ளம் கவர்ந்தவளே
எட்டிப் பிடிக்க முடியாமல் ஏனோ ஓடுகிறாய்
சட்டென்று கன்னத்தில் தருவாயா ஒரு முத்தம்?
முத்தம் என்றதுமே முகமெல்லாம் சிவக்கின்றாய்
ரத்தமெல்லாம் மொத்தமாய் பாய்ந்து வந்தது போல்!
சத்தமின்றித் தரவேண்டும் முத்துப்பல்
வாய் குவித்து
நித்தம் அந்நினைவினிலே மகிழ்ந்திருப்பேனே
நான்.
நான் செய்த புண்ணியமே நீயாகி வந்ததோ
தேன் மொழி பேசி மனம் இனிக்கச் செய்தவளே
ஊன் உருக்கி என் உள்ளம் நுழைந்தவளே
ஏன் என் மீது இன்னும்இந்தப் பாரா முகம்?
முகம்
என்னும் முழுமதியை மூடி மறைக்காமல்
அகம் குளிர
நான் காண வழிவகை செய்யாயோ
சகம்
முழுதும் சலிப்பின்றி நான் தேடினாலும்
சுகம் வேறு
உண்டோ சொல்லடி என் கண்மணியே
மணி போலச்
சிரிக்கின்றாய்,மயில்
போல் ஆடுகின்றாய்
அணிகலன்கள் ஏதுமின்றி அழகாய் மின்னுகின்றாய்
பணியாளனாய் உன் பக்கத்தில் இருந்து
பிறவிப்
பிணிதீர சேவை செய்ய வரம் ஒன்று தந்தருள்வாய்!
பதிலளிநீக்கு~~ பிணிதீர சேவை செய்ய வரம் ஒன்று தந்தருள்வாய்! ~~
சார் நலமா ? கால் வலி இப்போது எப்படி உள்ளது ?(TM 2)
வலி இருக்கிறது.உங்கள் அன்பு அதை மறக்க வைக்கிறது.
நீக்குநன்றி
குற்றால அருவிதனில் கொட்டுகின்ற நீர்போல
பதிலளிநீக்குபொற்றாமரை குளத்தில் பூத்திட்ட மலர்போல
வற்றாது மரபினிலே வருகின்ற கவிகாணப்
பெற்றேனே பெரும்பேறு பித்தனே தீர்வாழ்க!
சா இராமாநுசம்
அருமையான கவிதையில் பாராட்டு!
நீக்குநன்றி ஐயா
ஆஹா... அந்தாதிக் கவி அருமை ஐயா.
பதிலளிநீக்குஅந்தாதியும் உங்களால் எழுத முடியும் என நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்கு//நான் செய்த புண்ணியமே நீயாகி வந்ததோ
பதிலளிநீக்குதேன் மொழி பேசி மனம் இனிக்கச் செய்தவளே
ஊன் உருக்கி என் உள்ளம் நுழைந்தவளே
ஏன் என் மீது இன்னும் இந்தப் பாரா முகம்?//
அந்தாதி அருமை, ஐயா. பாராட்டுக்கள்.
நன்றி வைகோ சார்
நீக்குஅய்யா கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க.. அருமை..
பதிலளிநீக்குநன்றி கோவி
நீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
பதிலளிநீக்குகவி அருமை...அழகு...பித்தரே..
பதிலளிநீக்குஅருமையான அந்தாதி... கலக்கறீங்க!
பதிலளிநீக்குபணியாளனாய் உன் பக்கத்தில் இருந்து பிறவிப்
பதிலளிநீக்குபிணிதீர சேவை செய்ய வரம் ஒன்று தந்தருள்வாய்!
வரிக்கு வரிக்கு அந்தாதியின் அற்புதம் .
நன்றி சசிகலா
நீக்குeppudi !
பதிலளிநீக்குippadiyellaam ezhuthureenga....
arumai!
//சத்தமின்றித் தரவேண்டும் முத்துப்பல் வாய் குவித்து
பதிலளிநீக்குநித்தம் அந்நினைவினிலே மகிழ்ந்திருப்பேனே நான்.//
நீர் பித்தனா இல்லை காதலான. அருமை. த ம(12)
நன்றி சீனு
பதிலளிநீக்குபாரதியார் கவி படித்தது போன்று உள்ளது ஐயா........
பதிலளிநீக்குவலி குறைய இன்னமும் ரெஸ்ட் எடுங்கள்....