நமது மன அழுத்தமே பல உடல்
நோய்களுக்குக் காரணமாகிறது.
நம் நண்பனும் நாமே,நம் எதிரியும்
நாமே!
அது அப்படி நடக்காவிட்டால்,என்
நிலைமையே மாறியிருக்கும் என்று மற்றவர் மீதும்,சந்தர்ப்பங்கள் மீதும் பழி போட்டு
நாம் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.
நாமே முக்கியக் காரணம் என்பதை
ஒப்புக்கொள்ள மனமில்லை.
வாழ்க்கையில் மன அழுத்தம் இன்றி வாழ
நாம் என்ன செய்ய வேண்டும்?
நான் சொல்வதெல்லாம் முதலாவதாக, ஆக்க பூர்வமான,நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்பதுதான்.
“ஸ்வாமி!அப்படியென்றால் என்ன ”என்று
கேட்பவர்கள் இருப்பீர்கள்.
நேர் மறையான
சிந்தனையென்றால்,வாழ்க்கையின் எதிர்மறையான பகுதியை அறிய மறுப்பதல்ல.
வாழ்க்கையில் ஒரு கடினமான பகுதியும்
இருக்கவே செய்யும்.
ஆக்கபூர்வமான சிந்தனை
உள்ளவர்,இருண்ட பகுதியிலேயே தன் மனத்தை இருத்தியிருக்க மாட்டார்.மோசமான
சந்தர்ப்பங்களிலிருந்து கூட சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது எப்படி என்று
யோசிப்பார்.
ஒரு வணிக நிறுவனத்தில்
ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் மட்டும் விற்பனை குறைந்தே இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை மேலாளர் அம் மண்டல விற்பனைப்
பிரதிநிதிகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தார்.
அவர்கள் முன் ஒரு பெரிய வெள்ளை அட்டை மாட்டப்பட்டது.
அட்டையின்
நடுவில் ஒரு சிறு கருப்புப் புள்ளி வைக்கப்பட்டிருந்தது.
மேலாளர் அனைவரையும் பார்த்து என்ன
தெரிகிறது எனக் கேட்டார். அனைவரும்,கருப்புப் புள்ளி என்றே பதில் அளித்தனர்.
மேலாளர் அதைத்தவிர என்ன தெரிகிறது
எனக் கேட்டதற்கு அனைவரும் வேறு ஒன்றும் இல்லை என்றே கூறினர்.
மேலாளர் சொன்னார்”உங்கள்
பிரச்சினையே அதுதான்.இவ்வளவு பெரிய வெள்ளை அட்டையில் உள்ள சிறு கருப்புப் புள்ளியை
மட்டுமே பார்ர்க்கிறீர்கள் சுற்றியிருக்கும் வெண்மை கண்ணில் படவில்லை. உங்கள்
பகுதிக்குச் சென்று பணியைச் செய்யும்போது இனி வாய்ப்பு களைத்தேடக் கற்றுக்
கொள்ளுங்கள்.இடர்களை மட்டுமே எதிர் நோக்காதீர்கள்”
நம்மில் பலர் வாழ்க்கையில் கருப்புப்புள்ளியை
மட்டுமே பார்க்கிறோம். சுற்றியிருக்கும் வெண்மையைப் பார்ப்பதில்லை.
அதைச் செய்தால் பிரச்சினைகள் இல்லாது போகும்.
அதைச் செய்தால் பிரச்சினைகள் இல்லாது போகும்.
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து........ !)
(தொடரும்)
நம் நண்பனும் நாமே,நம் எதிரியும் நாமே!///
பதிலளிநீக்குநானும் இதே கருத்தினில்தான் இன்னுமுள்ளேன்...இக்கருத்துக்கு மேலும் உரமிடுகிறேன்
நன்றி விமலன்
நீக்குஐயா என்னை விமலன் என்று நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் போல...
நீக்குஎன்னுடைய பெயரில் விமலனும் எழுதுகிறார் என நினைக்கிறேன்...
கொஞ்சம் குழம்பி விட்டேன்.மன்னிக்கவும்.
நீக்குநன்றி
பித்தானந்தாவின் கருத்துமிக மிக அருமை
பதிலளிநீக்குஅனைவருக்கும் இக்கால சூழலில் அவசியமானதும் கூட
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பித்தானந்தாவின் சார்பில் நன்றி!
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குஎனது நன்றி
நீக்கு//நம்மில் பலர் வாழ்க்கையில் கருப்புப்புள்ளியை மட்டுமே பார்க்கிறோம். சுற்றியிருக்கும் வெண்மையைப் பார்ப்பதில்லை.//
பதிலளிநீக்குசரியாய் சொன்னார் ஸ்வாமி பித்தானந்தா! அவரது முழு உரையும் எங்கு கிடைக்கும் என்ற சொன்னால் நன்றாய் இருக்கும்!!
நல்ல பதிவு.
முழு உரை கிடைக்கக் கொஞ்சம் காலமாகும்!
நீக்குநன்றி சபாபதி சார்
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
நன்றி புலவர் ஐயா
நீக்குநன்றி
பதிலளிநீக்குநாமே முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மனமில்லை.
பதிலளிநீக்குஎல்லா செயலுக்கும் நாமே காரணம் என்பதை விளக்கிச் சொன்ன பதிவு. நன்றி ஐயா.
unmaithaan ayya!
பதிலளிநீக்குsariyaa sonneenga...
நன்றி சீனி
நீக்குநல்லது தலைவரே...
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்
நீக்குஆனந்தான்னு பேர் முடிஞ்சாலே இப்பல்லாம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா இந்தப் பித்தானந்தா சொல்ற கருத்தென்னமோ ரொம்பவே நல்லாத்தான் இருக்கு...
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
நீக்குஏற்கனவே இணைத்து விட்டேன்
பதிலளிநீக்குஸ்வாமி பித்தானந்தா OR ஸ்வாமி சென்னை பித்தன்னந்தா?
பதிலளிநீக்குஅவரே இவர்,இவரே அவர்!
நீக்குநன்றி ரெவெரி
அருமையான கருத்து!
பதிலளிநீக்குநன்றி
நீக்குநல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க
பதிலளிநீக்கு(படிச்சுட்டு்த்தான் கருத்துரை இட்டேன்.)
:) நன்றி எஸ்தர்
நீக்கு