தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 29, 2012

சும்மாவா இருக்கிறீர்கள்?!


ட்ரிங்.ட்ரிங்………
தொலைபேசி.
எடுக்கிறோம்.
மச்சி!என்ன பண்ணிட்டிருக்கே?”நண்பன்
சும்மாதான் இருக்கேன்

நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சொல்-சும்மா

எங்க இந்தப் பக்கம்?”
சும்மா,பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்

என்ன பொருளில் இந்தச் சொல்லை பயன்படுத்துகிறோம்.?

வேலை ஒன்றும் இல்லாமல் ,எதுவும் செய்யாமல் இருப்பது.

ஆனால் சும்மா இருப்பது என்பது அதுவா?

அருணகிரிநாதர் சொல்கிறார்-

”செம்மான் மகளைத் திருடும் திருடன்
 பெம்மான் முருக பிறவான் இறவான்
 சும்மா இரு சொல் அற என்றலுமே
 அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே”

அவருக்கே பொருள் விளங்கவில்லையாம்!

கந்தரனுபூதி பாடியவருக்கே அனுபூதி நிலை என்னவென்று தெரியாதாம்!

சும்மா இரு என்பது அனுபூதிநிலை.

சும்மா என்பது மெய்யுணர்வில் வரும் மௌனம்.

சும்மா என்பது இதயம் பேசுகிற மௌன மொழி.

இறைவனுடன் இரண்டறக் கலக்கும்போது வாய்க்கும் நிலை சும்மா இருத்தல்.

சிவவாக்கியர் சொல்கிறார்-

”செய்ய தெங்கிலே இளநீர்சேர்ந்த காரணங்கள் போல்
 ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டனன்
 ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோவில் கொண்டபின்
 வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்பதில்லையே”

சும்மா என்பது பேச்சற்ற பேரின்பத்தின்குறியீடு.
சும்மா என்பது இதயம் பேசுகிற மௌனமொழி.

திருமூலர் சொல்கிறார்
”பெம்மான்,பெருநந்தி, பேச்சு அற்ற பேரின்பத்து
 அம்மான் அடி தந்து,அருட்கடல் ஆடினோம்
 எம்மாயமும் விடுத்து,என்னைக் கரந்திட்டுச்
 சும்மாதிருந்து இடம்சோதனை ஆகுமே.”

--பெருமையுடைய சிவபெருமான் உரையற்று விளங்கும் நிலையில் அப் பெரியோனடி ஞானத்தாலருட்கடலில் மூழ்கினோம்.எல்லாவிதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.

சும்மா இருத்தல் என்பது மிகக் கடினமான ஒரு செயல்.

எனவே சும்மா இருக்கிறேன் என்று சொன்னால் நாம் வேறு நிலைக்குப் போனவர்கள் ஆகிறோம்.

நாம் சொல்லும் சும்மா என்பது பொருளற்ற சும்மா

வேலையின்றி அமர்ந்திருந்தாலும் மனம் ஊர் மேயப் போகிறது.

அவ்வாறன்றி,

உண்மையில் சும்மா இருத்தல் நிலைக்கு முயல்வோமா இனி?

டிஸ்கி:பதிவு மாறிப்போச்சோ?!சொக்கா!


26 கருத்துகள்:

  1. வேகமா வந்து கமெண்ட்ஸ் போட்டவுடனே நான் சும்மா இருக்கிறதா நினைச்சுக்க போறீங்க.., சத்தியமா நான் சும்மா இல்லை சாமீ :D

    பதிலளிநீக்கு
  2. ”சும்மா” சொல்லக்கூடாது.

    ”சும்மா”வை ”சும்மா” வெளுத்து வாங்கி விளக்கி விட்டீங்க சார்.

    ”சும்மா” வா பின்னே! ;)

    “சும்மா” என்றே ஒரு வலைப்பதிவு உள்ளது தெரியுமோ?

    அவங்களும் உங்களை மாதிரியே “சும்மா” பிச்சு உதறுகிறார்கள், அதுவும் அடிக்கடி.

    பதிலளிநீக்கு
  3. சும்மா பதிவை படிச்சு சும்மா ஒரு கமண்ட் போடலாமுனு நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு வந்தேன்

    எப்படி பாஸ் சுகம்?

    பதிலளிநீக்கு
  4. தல சும்மா இந்தபக்கம் வந்தேன் சும்மா இல்லாம போறேன்.

    பதிலளிநீக்கு
  5. சும்மா இருத்தல் என்பது கடினமான ஒன்றுதான். மேயப் போகும் மனக் குரங்கை அடக்கியாளுதல் எளிதா என்ன...? சும்மா இருப்பதற்கான வல்லமையை அந்த சொக்கன்தான் தர வேண்டும் எனக்கு.

    பதிலளிநீக்கு
  6. சும்மா இருப்பதால் வந்த வினைதானோ இந்த பதிவு..? சும்மாச் சொன்னேன் சார்..!!

    பதிலளிநீக்கு
  7. "சும்மா" வை வைத்து
    சும்மா பின்னீட்டீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  8. @வரலாற்று சுவடுகள்
    சும்மாச் சொல்லாதீங்க!
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. @K.s.s.Rajh
    சும்மா இருத்தலே சுகம்தானே!
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. @MANO நாஞ்சில் மனோ
    சும்மா வாங்க! நீங்க வருவது சும்மாவாங்க?
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. சும்மா இருந்தால் பதிவே இல்லையே!
    நன்றி சுப்புடு

    பதிலளிநீக்கு
  12. சும்மா இருப்பதே சுகமென்று நானிருக்க
    அம்மா பெரிதென்று அகத்தோடு தானிருக்க
    உம்மால் நானறிய உரைத்தீரே தேனிருக்க
    சும்மாவா!? அத்தனையும சித்தரே நீரிக்க!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. சும்மா பத்தி எழுதியிருந்தால
    சும்மா ஒரு நன்றி சொல்ல வந்தேன்...
    ஐயா இப்ப சும்மா இருக்கீகளா?

    பதிலளிநீக்கு
  14. சும்மா இருக்க முடியவில்லை உங்க எல்லாரையும் பாக்காம அதனால சும்மா தான் வந்தேன் இந்தப் பக்கம் இனி நான் சும்மா இருந்தாலும் நீங்க என்ன சும்மா விடப் போறதில்லை இனி எல்லாம் அவன் செயல் வாழ்த்துக்கள் ஐயா அருமையான படைப்பிற்கு மிக்க நன்றி.......

    பதிலளிநீக்கு
  15. ‘சும்மா இருப்பதே சுகம்’ என்று சொல்லுவார்கள். நீங்கள் எழுதியதைப் படித்ததும் சும்மா இருப்பது நம் போன்ற சாதாரண மனிதர்களால் முடியாது என்றே தெரிகிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. "சும்மா"(விலையில்லா) கொடுத்தா தமிழ்நாட்டில கூட்டம் கூடிடும்-னு

    சும்மா-வா சொன்னாங்க!

    உங்க சும்மா -வுககும்

    கூட்டம் அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
  17. "ச‌ற்றே சும்மா இரும் பிள்ளாய்" என இறைவ‌ன், அடியாருக்கு முக்திக்கு வ‌ழி காட்டிய‌தாய் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்‌க‌ள் ப‌திவை ப‌டித்த‌ பின் 'சும்மா' இருக்க‌ முடிய‌வில்லை பித்த‌ரே.

    பதிலளிநீக்கு