தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 08, 2012

மு.க.வும் முடங்கிய வங்கிக் கணக்கும்!

மு.க. என்று நண்பர்களால் அழைக்கப்படும் முத்துக் கண்ணன், அன்றைய செய்தித் தாளைக் கையில் எடுத்த படி நாற்காலியில் அமர்ந்தார்.வழக்கம் போல் அன்றைய ராசி பலன் என்ன என்று பார்த்தார்.அவர் ராசிக்கு “திடீர் அதிர்ஷ்டம்,பண வரவு” என்று போட்டிருந்தது. பார்க்கலாம் என்ன அதிர்ஷ்டம் வரப்போகிறது என யோசித்தார்.

கைபேசி அழைத்தது.எடுத்துப்பார்த்தார்.அவர் நண்பர் ராசாராமன்.காலையில் எதற்காக அழைக்கிறான்? ஏதாவது கடன் கேட்பானோ என யோசித்தபடியே”சொல்லு ராசாராம்” என்றார்.”

மறுமுனையிலிருந்து குரல்”மு.க!.உன்னிடம் வாங்கிய ரூ.40000 த்தை இன்று உன் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டேன்.பார்த்துக்கொள்.ரொம்ப நன்றி”

”நன்றி ராசாராம்” என்றூ சொல்லி விட்டு முத்துக்கண்ணன் ராசிபலனில் சொன்னது பலிக்கிறதே என மகிழ்ச்சி யடைந்தார்.

கணியை உயிர்ப்பித்து  இணையத்தின் மூலம் தன் வங்கிக் கணக்கைப் பார்த்தார்.ஒரு நிமிடம் அவருக்கு மூச்சு நின்று போனது!

நண்பர் செலுத்திய 40000 மட்டுமில்லாது வேறு ஒரு தொகையும் வரவு வைக்கப் பட்டிருந்தது.அதுவே அவரது பிரமிப்பின் காரணம்.

அத்தொகை ரூ.965 கோடி.

”திடீர் அதிர்ஷ்டம் ”என்று போட்டிருந்தது இதுதானா?

இது எப்படி நடந்தது?

யார் செலுத்தினார்கள் இப்படி ஒரு தொகையை?

சரி எதற்கும் ஏ.டி.எம் போய்ப் பார்த்து விட்டுத் தன் சகோதரி கேட்ட ரு.20000 த்தை எடுத்து வரலாம் எனப் புறப்பட்டார்.

இரண்டு  பேர் உள்ளே நுழைந்தனர்.அவர்கள் வங்கி அதிகாரிகள் என்று அவருக்குத் தெரியும்.

”வாங்க சார் ”என்று அவர் அழைக்கும் முன்பே ”மிஸ்டர். முத்துக்கண்ணன்.உங்கள் கணக்கில் ஒரு தவறு .எனவே உங்கள் கணக்கை முடக்கியிருக்கிறோம் ” என்று  சொல்லி விட்டு வேகமாகச் சென்று விட்டனர்.

மு.க.திகைத்தார்.நடந்த தவறுக்கு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் கணக்கை முடக்கி விட்டோம் என்று சொல்லி விட்டுச் செல்லும் அவர்களின் நாகரிகமற்ற நடத்தை அவரைக் கோபத்துக்குள்ளாக்கியது.

முடக்கி விட்டார்கள் என்றால் தனக்கு இப்போது தேவையான தன் சொந்தப் பணத் தையும்    எடுக்க முடியாதே என எண்ணும்போது கோபம் அதிகமானது.

வங்கிக்குச் சென்று பார்ப்போம்.தன் பணத்தைக் கொடுக்க மறுத்தால்  வக்கீலைப் பார்க்க வேண்டியதுதான் என எண்ணியவாறு புறப்பட்டார்.

.....................................................................................
இன்றைய செய்தி-----------
ஹரியானா மாநிலத்தில் உள்ள படேஹாபத் என்ற ஊரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுஷில் குமார் என்பவரின் கணக்கில் 964.64 கோடி தவறாக வரவு வைக்கப் பட்டு,தவறு கண்டுபிடிக்கப்பட்டபின் கணக்கு முடக்கப்பட்டது.
                                    --------- டைம்ஸ் ஆஃப் இந்தியா,சென்னை,8-5-2012

21 கருத்துகள்:

  1. இப்படித்தான் அடிக்கடி குழப்படி ஆகுது சார்!

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் அலார்ட் ஆகிட்டேன். சுவாரசியமான பகிர்வு

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல் செய்தியை வைத்து, எங்களை குழம்ப வைத்துள்ளீர்கள்! ஒரு செய்தியைக்கூட சுவாரஸ்யமாகத் தருவதே ஒரு கலைதான். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஐய்யா, தலைப்பு ஒரு கணம் மிரண்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  5. அதெப்படி கணக்கை முடிக்க முடியும்? தவறாக வரவு வைத்தது அவர்கள் பக்கத் தவறுதானே... அந்தத் தொகையை மட்டும் முடக்குவதுதானே நியாயம்...? ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் இப்படி ஒரு தலைப்புத் தந்து மிரள வைப்பதற்கு.

    பதிலளிநீக்கு
  6. 'யார் தவறுக்கு யாருக்கு தண்டணை! வர வர வங்கிகளே மோசம்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. தலைப்பை பார்த்து எதோ அரசியல் பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன்.

    பணத்தை தவறாக வரவு வைத்துவிட்டு கணக்கையும் முடக்கிவிட்டால் என்ன செய்வது? கணேஷ் சொல்லி இருக்கிற மாதிரி அந்த தொகையை மட்டும் முடக்கி வைத்தால் என்ன?

    பதிலளிநீக்கு
  8. ////மு.க.வும் முடங்கிய வங்கிக் கணக்கும்!////

    உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பீங்களா நண்பரே ..!

    பதிலளிநீக்கு
  9. தலைப்பை கண்டு மிரண்டுட்டேன். அரசியல் பதிவு போல எஸ்ஸாகிடலாம்ன்னு நினைச்சேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. சேமிப்பு என்று போய் சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் வந்து விட்டது மக்களிடம் அருமையான பதிவு ஐயா . த.ம .9 .

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான தலைப்பு ...தகவல் ..தலைப்புகளின் தலைவன் என்றே உங்களை அழைக்கலாம் ..மஞ்சள் துண்டு காணோம் ..என்ற தலைப்பில் வந்த ஒரு பதிவும் , இரட்டை இலை
    பற்றிய பதிவும் நினைவிற்கு வந்தன வாசு

    பதிலளிநீக்கு