ஜீரோ டிகிரி என்பது என்ன?
ஒன்றையொன்று ஒரு முனையில் தொட்டுக்
கொண்டிருக்கும் இரு கோடுகளுக்கு இடையே
உள்ள கோணத்தின் அளவு டிகிரி எனக் குறிக்கப் படுகிறது.
இரு கோடுகளும் ஒன்றின் மேல் ஒன்றாக
ஒரே கோடாகி விட்டால், அவைகளுக்கு இடையே உள்ள கோணம் ஜீரோ டிகிரி.இங்கு இருப்பது ஒரே
கோடுதான்.எனவே இடைப்பட்ட கோணம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
இதே கோடுகள் ஒன்றையொன்று ஒரு முனையில்
தொட்டுக்கொண்டு எதிரும் புதிருமாக இருந்தால் கோணம் 180 டிகிரி.
முதலில் சொன்ன ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்த கோடுகளின் இடையே உள்ள கோணம் ஜீரோ டிகிரி என்றால்,அதையே
மறு புறமாகப் பார்க்கையில் கோணம் 360 டிகிரி ஆகி விடுகிறது.
இதுவே ஜீரோ டிகிரி,180 டிகிரி,360 டிகிரியின்
தத்துவம்!
இந்த மாதத்தில்
நாம் வேறு ஒரு டிகிரி பற்றி மிகவும் கவலைப் படுவோம் அதுவே வெப்ப நிலை அளவு.நாளை முதல் கத்திரி வெயில்; வெப்பம்
எப்படி யிருக்கப் போகிறதோ என்றே அனைவருக்கும் கவலை.
என் அண்டை வீட்டுக்காரர் ஒருவர்
இருக்கிறார்.தினம் காலையில் செய்தித்தாளில் வரும் வெப்ப அளவைப் பார்த்து “நேற்று
39 டிகிரி.அதான் நான் நேற்றே நினைத்தேன் என்னடா இப்படிச் சுடுகிறதே” என்பது போன்ற
பேச்சுகள் வாடிக்கை.
நமக்கெல்லாம் ஃபாரன்ஹீட் அளவே பழகி
விட்டபடியால்,செல்சியஸ் அளவுகளை அவ்வளவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.40 டிகிரி
என்பதை விட 104 டிகிரி என்று சொன்னால் வெப்பம் அதிகமாகத் தோன்றுகிறது.
வடமாநிலங்களில் இருக்கும்போது
குளிர்காலத்திலும் வெப்ப நிலை பற்றிக் கவலைப்படத்தான் வேண்டியிருக்கிறது.நான்
அலகாபாதில் இருந்த போது,ஒரு முறை 3 டிகிரி வரை குறைந்து போயிற்று வெப்பம்.அதுவே
தாங்க முடியவில்லை.ஜீரோ டிகிரியை எப்படித் தாங்குவது.இன்னும் மைனஸ் போனால் தாங்கவே
முடியாது .ஆயினும் நான் எப்போதும் கன்வெக்டர் உபயோகித்ததில்லை.
பள்ளி நாட்களில் என்றைக்காவது
பள்ளிக்குப் போகப் பிடிக்காவிட்டால் போர்த்திகொண்டு படுத்துக் கொண்டு விட
வேண்டியது.அம்மா வந்து கேட்கும்போது காய்ச்சல் என்று சொன்னால் தொட்டுப்
பார்ப்பார்கள்.சூடே இல்லையே என்று சொன்னால் உள்ளே காய்ச்சல்;தெர்மாமீட்டர்
வைத்துப் பார்த்தால் 100 டிகிரிக்கு மேல்
இருக்கும் என்று சொல்ல வேண்டியது. பொதுவாக இந்த மனநிலை
திங்கட்கிழமைகளில் அதிகமாகும். அதுவே
“Monday syndrome”இது அலுவலக நாட்களிலும் ஏற்படுவதுண்டு.
காப்பிப் பிரியர்களுக்குத் தெரிந்த
ஒன்று டிகிரி காபி.அதுவும் கும்பகோணம் டிகிரிக் காப்பி என்றுதான்
சொல்வார்கள்.ஆனால் காப்பி பல ஊர்களில் நன்றாகவே
இருக்கிறது.மதுரையின் நினைவூட்டும் காபியை மறக்க முடியுமா? நான் மதுரையில் இருந்த
காலத்தில் கோரிப்பாளையத்தில் ஓரிடத்தில் மாலை நேரத்தில்ல் காபி கிடைக்கும்,அது
காபிக்கடை;காபி மட்டும்தான்.கூட்டம் அலை மோதும் காபி ருசி சிறக்க வேண்டுமெனில் காபி
சூடாக இருத்தல் அவசியம்.ஹாஸ்டலில் இருக்கும் போது நான் சூடாகக் காபி குடிப்பதால் நண்பர்கள்
என்னை நெருப்புக்கோழி என்றே அழைத்தார்கள்!
காபியை ஜீரோ டிகிரியில் குடித்து
என்ன பயன்!
.
எல்லாம் சரிதான் ஐயா மனித மனங்களும் எண்ணங்களும் ஸீரோ டிகிரிக்கும் கீழே போய் பனிக்கட்டியாக உறைந்து போய் அல்லவா இருக்கிறது . கணக்குகள் சரி தான் ஆனால் வாழக்கை கணக்கு மட்டும் தவறாய் இதை திருத்த எந்த டிகிரி என்று தெரிந்தால் சொல்லுங்க .
பதிலளிநீக்குஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்போதுள்ள திருச்சி சென்னை சில்க்ஸ் அருகே, ரஸிக ரஞ்சன ஸபா கட்டிடத்தில், பத்மா லாட்ஜ் என்று இருந்தது. இதில் மாலை வேளையில் நின்றவாறே காஃபி சாப்பிட ஒரு 500 பேர்களாவது எப்போதும் கூடியிருப்பார்கள்.
பதிலளிநீக்குகாஃபின்னு அது காஃபி. நான் பலமுறை சாப்பிட்டுள்ளேன். நாக்கைச் சுழட்டும் நல்ல ருசியாக இருக்கும். அந்த டிகாக்ஷன் இறங்கும் ஃபில்டரில் சிறிதளவு அபீன் என்ற போதைப்பொருளை, வைத்திருப்பது தான் தொழில் இரகசியம் என, பொது மக்களில் சிலர் சொல்லியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த இனிமையான ருசியான காஃபி சாப்பிட்ட நாட்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். ;)))))
ஜீரோ டிகிரி காப்பிக்கு ஐஸ் காபி என்று பெயர். ஐஸ் ஆகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குcoffee!
பதிலளிநீக்குpatriya ungal anupavathai-
pakirnthamaikku vaazhthukkal!
குளிர்காலத்தில வேர்கடலைய அவிச்சு வச்சுட்டு சைட்டிஸ்ஸா சூடா தண்ணி கலக்காத பால்ல போட்டு காபி போட்டு குடித்த எங்க கிராமத்துக் காப்பி இப்ப கிடைப்பதில்லை.....................
பதிலளிநீக்குகணிதத்தில் ஆரம்பித்து காப்பியில் முடித்துவிட்டீர்கள்.மறந்துபோனவைகளை நினைவூட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசென்னை அருகே டிகிரி காஃபி கிடைக்கும் இடம் பற்றி ஒரு புதிய தகவல். சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் கருங்குழி அருகே இடதுபுறம் உள்ள High Way In என்ற உணவகத்திற்கு எதிரே கும்பகோணம் டிகிரி காஃபி என்ற பலகை தாங்கி ஒரு காஃபி Bar உள்ளது. அங்கே உண்மையில் டிகிரி காஃபி கிடைக்கிறது. அடுத்ததடவை நீங்கள் அந்த பக்கம் சென்றால் சுவைக்கலாம்.
நானும் காபி பிரியன் தான் என்ன செய்ய
பதிலளிநீக்குமருத்துவர் தடை உத்தரவு!
சா இராமாநுசம்
டிகிரி காபிய நினைவு படுத்திட்டீங்களேன்னே...எங்கே போவேன்...!
பதிலளிநீக்கு/////நான் மதுரையில் இருந்த காலத்தில் கோரிப்பாளையத்தில் ஓரிடத்தில் மாலை நேரத்தில்ல் காபி கிடைக்கும்/////
பதிலளிநீக்குகாபி கடையின் பெயரை குறிப்பிட்டால் விளம்பரம் ஆகிவிடும், அங்கே நானும் பலதடவை காபியை ரசித்து , ருசித்திருக்கிறேன் ..!
ஆன்மீக டிகிரிதான்!
பதிலளிநீக்குநன்றி சசிகலா
அப்ப இது சாருவின் ஜீரோ டிகிரி இல்லையா...? :-)
பதிலளிநீக்குபட்டப்படிப்பு முடிச்சவங்களுக்கும் "டிகிரி" முடிச்சவன் என்று துணைப் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம்,
பதிலளிநீக்குபதிவு முழுவதும் அனுபவப்பாடம், காபி சுவையுடன் "டிகிரி" (பற்றி) படிக்க வைத்து விட்டீர்கள்.
ஸீரோ டிகிரி...அவரை துவைச்சு காயப்போடப் போறீங்கன்னு ஓடி வந்தேன்...புஸ்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் #1 பித்தரே...
அண்ணே நானும் சாருவின் ஜிரொ டிகிரி ன்னுதான் படிச்சேன் சரி டிகிரி காபி யாவது கிடைக்குமா ?
பதிலளிநீக்குவைகோ சார்,நீங்கள் சொல்லும் பத்மா லாட்ஜ் மெயின் கார்ட் கேட் அருகில்தானே!அங்கு நான் லன்ச் சாப்பிட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநான் சொன்ன மதுரைக்காபி பற்றியும் அதே செய்தி உண்டு(அபின்)
நன்றி
நன்றி பழனி கந்தசாமி ஐயா
பதிலளிநீக்கு//சூடா தண்ணி கலக்காத பால்ல போட்டு காபி போட்டு குடித்த //
பதிலளிநீக்குஆகா!ரசிகர் ஐயா நீங்கள்.
திருப்பூரில் சுவையான காபி கிடைக்கும் இடம் இருக்கிறதோ!நல்ல சாப்பாடு கிடைக்கும் மெஸ்கள் உண்டு,தெரியும்.
நன்றி.
நன்றி சுரேஸ் குமார்.மேலே உள்ள பதில் உங்களுக்கானது!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்ரி சபாபதி அவர்களே!
பதிலளிநீக்குசென்னை பித்தன் சார் தலைப்பை பார்த்ததும் நம்ம சாருவைத்தான் அடித்து துவைத்து இருப்பீர்கள் என்று ஒடிவந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள் தலைப்பு தான் என்னை ஏமாற்றியது ஆனால் உங்கள் பதிவின் உள்ளடக்கம் அல்ல. அது மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅடடா! டிகிரி பத்தி யோசிக்க வச்சுட்டீங்க.
பதிலளிநீக்குஹையா! நானும் ஒரு டிகிரி கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அது ஜீரோ டிகிரி இல்ல. Third degree. கிரிமினல்களை விசாரிக்கறதுக்கு போலீஸ் பயன்படுத்துகிற கடுமையான பனிஷ்மென்ட் முறை.
இன்னமும் மதுரையில் வடக்குச் சித்திரை வீதி - மேலச் சித்திரை வீதி சந்திப்பில் சூப்பர் கவி கிடைக்கும். போலவே வடக்கு - மேல ஆவணிமூல வீதி சந்திப்புக்களிலும் .... வந்தால் சொல்லுங்கள்.. காபி சாப்பிடலாம்
பதிலளிநீக்குஜீரோ டிகிரி பற்றி துவங்கியவுடன் , ஏதோ மகத்தான செய்தி பின் வரும் என்று நினைத்தேன் .... டிகிரி காபி என்று முடிந்ததை கண்டு தங்கள் திறமையை கண்டு வியந்தேன் ...எதற்கும் எதற்கும் முடிச்சு ! தங்களுக்கு கை வந்த கலை ...நிற்க மதுரை கௌரி கங்கா காபி பிரமாதமாக இருக்கும் ..காலை நாலு மணிக்கே கிடைக்கும் .. காபி மட்டுமல்ல மதுரை மல்லிக்கும் , மல்லி இட்லிக்கும் ,சட்னிக்கும் கூட பேர் போனது . ( உங்களக்கு மட்டும் தான் சம்பந்தமில்லாமல் எழுத தெரியுமா என்ன !? ) வாசுதேவன்
பதிலளிநீக்குகோவை அன்னபூர்ணா காபி படு ஸ்ட்ராங் ஆக இருந்தது.
பதிலளிநீக்குஅதற்கு விஷம் என்று பெயர் வைத்திருந்தேன்..
காலையில் வாக்கிங் வருபவர்கள் நமஸ்தத்துக்கு என்று காபி சாப்பிட வந்து டிபனும் முடித்துக்கொள்வதுண்டு..
குளிக்காமல் சாப்பிடுவதால் அது கணக்கில் வராதாம்..
வீட்டுக்குப் போய் குளித்து டிபன் சாப்பிடுவதிலிருந்து தான் கணக்கே ஆரம்பமாம்..
ஆன்ந்தமாக சாப்பிட்டு ,நகைச்சுவையாய் பேசி சிரித்து மகிழும் காலைப்பொழுது உற்சாகமாக இருக்கும் !
உடம்பு குறைய வாக்கிங் வந்து இப்படி தின்றால் எப்படி குறையும் ??!!
.
நன்றி அவர்கள் உண்மைகள்.
பதிலளிநீக்குஆகா இதை விட்டுட்டேனே! நன்றி முரளிதரன்
பதிலளிநீக்குமதுரை வந்தால் நிச்சயம் உங்களுடன் ஒரு கப் காப்பி!
பதிலளிநீக்குநன்றி அக்கப்போர்.
தூள், வாசு!
பதிலளிநீக்குநன்றி.
//உடம்பு குறைய வாக்கிங் வந்து இப்படி தின்றால் எப்படி குறையும் ??!!//
பதிலளிநீக்குசபாஷ்! சரியான கேள்வி!
காபி ஒரு தவிர்க்க முடியாத விஷம்,இராஜராஜேஸ்வரி!
நன்றி.
நல்ல பதிவு ...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib