தொடரும் தோழர்கள்

வியாழன், மே 24, 2012

பாம்பும் நானும்-ஒரு தேடல்!


என்னுள் ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!
கைக்குழந்தையாய்த்
தாயின் மார் தேடல்
நடக்கும் பருவத்தில்
தாயின் மடி தேடல்
கல்லூரி மாணவனாய்
கலர் தேடல்
படித்து முடித்த பின்
வேலை தேடல்
தொடர்ந்த காலத்தில்
மனைவி தேடல்
வயது ஏறும்போது
பணம் தேடல்
வயதானபின்
அமைதி தேடல்.
இதெல்லாம் வெளித்தேடல்

எனக்குள்ளே ஒரு தேடல்
எப்போதும் நிகழ்கிறது!

கீரிகள் ஐந்தடக்கி
பார்வையை உட்குவித்து
கீழ்நோக்கிப் பார்க்கையிலே
படுத்திருக்கும் பாம்பொன்று
படமெடுத்து எழுகிறது!

பார்வையின் உஷ்ணத்தில்
பாம்பு மேலேறுகையில்
கீரிகள் கட்டவிழ்க்க
பார்வை கலைந்து விட
பாம்பு றங்கப்  போகிறது!

என்று முடியும் என் தேடல்?
என்று பாம்பு ஆறடி கடந்து
தாமரை மலரடையும்?

அன்று முடியுமா என்தேடல்?!

டிஸ்கி:கவிதையின் முதல் பாதி நான் எழுதியது,பின் பாதி “நமக்குத் தொழில் பேச்சு” பதிவின் உரிமையாளர் மதுரை சொக்கன் எழுதியது! ஹி,ஹி!!


37 கருத்துகள்:

  1. மனிதன் தன வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எதையாவது தேடி கொண்டுதான் இருக்கிறான் .. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. "தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்"
    யாரோ ஒரு திரைக் கவிஞன் சொன்னான்.

    பதிலளிநீக்கு
  3. ஆக உங்கள் தேடல் முடிந்தபாடில்லை .
    என்று பாம்பு ஆறடி கடந்து
    தாமரை மலரடையும்?
    அது தான் எண்டு பித்தரே!
    அப்பறம் பதிவு போட முடியாது !!!!!!

    பதிலளிநீக்கு
  4. ஆக உங்கள் தேடல் முடிந்தபாடில்லை .
    என்று பாம்பு ஆறடி கடந்து
    தாமரை மலரடையும்?
    அது தான் எண்டு பித்தரே!
    அப்பறம் பதிவு போட முடியாது !!!!!!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா,
    நலமா?
    தேடல் கொண்ட உளத்து உணர்வுகளை முதற்பாதி சொல்லி நிற்கிறது.

    இரண்டாம் பாகம், கோபம் கொண்ட தேடலின் விளைவினை விளக்குகிறது.
    ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. தேடல்கள் முடிவதில்லை இல்லையா...?

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் பேச நினைத்து பேசமுடியாததை எல்லாம், பேச்சை தொழிலாகாக கொண்டவர் மூலம் பேச வைத்துவிட்டீர்கள் போலும். நல்ல கவிதை!

    பதிலளிநீக்கு
  8. குண்டலினி விழித்து தாமரை மலரை அடைந்து விட்டால் அப்புறம் யானைகுட்டி சொன்ன மாதிரி பதிவு எழுதும் மனோபாவம் போய் பற்றற்ற மனம் வந்துவிடும். மதுரை சொக்கர் பாதியும், செ.பி. பாதியும் அர்த்தநாரீஸ்வரராய் இருப்பதே எங்களுக்கு மகிழ்வு. தொடரட்டம்!

    பதிலளிநீக்கு
  9. நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் தளம் வந்தேன்... நல்ல முன்னேற்றம் வாழ்த்துகள் ஐய்யா... மேலும் வளர்க...!

    பதிலளிநீக்கு
  10. ஒருபாதி பித்தனும் மறு பாதி சொக்கனும்
    சரி பாதி யானதாம் சான்றே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. நான் சொல்ல நினைத்ததை பதிவர்
    கணேஷ் அவர்கள் மிக அழகாகச் சொல்லி இருந்தது
    ரசிக்கத் தக்கதாய் இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. இருவருமாய் எழுதி இருந்த கலவைக்கவிதை ரசிக்கும் படி இருந்தது,வாழ்த்துக்கள்.தேடல்கள் தொடரும் வாழ்க்கை இனித்துக்கிடக்கிறது சில பலசமயங்களில்/

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை...
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா..
    இருவரால் எழுதப்பட்டது என்றே சொல்ல முடியாது
    நடையில் மாற்றம் தெரிந்தாலும் சிந்தனையில் தெரியவில்லை..
    ஒன்றுபட்ட சிந்தனை..
    தேடல் அடங்காத குதிரை போன்றது
    அது இருக்கும் வரை தான் வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
  15. அருமையாகவுள்ளது ஐயா..

    சித்தர் பாடல்போல தேடல் குறித்த தேடல் நன்று.

    பதிலளிநீக்கு
  16. தேடல்............இதுதான் வாழ்க்கை என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. நல்ல கருத்துள்ள பதிவு...நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  18. கல்லூரி மாணவனாய்
    கலர் தேடல் ??.....


    கல்வி தேடல் என்று அல்லவா இருக்க வேன்டும் !! ....காலம் மாறி விட்டதோ??!!

    பதிலளிநீக்கு
  19. @சே.குமார்
    //இருவருக்கும் வாழ்த்துக்கள். //

    இருவருக்கும்?!
    நன்றி

    பதிலளிநீக்கு
  20. மகேந்திரன் சொன்னது…

    //வணக்கம் ஐயா..
    இருவரால் எழுதப்பட்டது என்றே சொல்ல முடியாது
    நடையில் மாற்றம் தெரிந்தாலும் சிந்தனையில் தெரியவில்லை..
    ஒன்றுபட்ட சிந்தனை..
    தேடல் அடங்காத குதிரை போன்றது
    அது இருக்கும் வரை தான் வாழ்க்கை..//
    இருவர் சிந்தனையும் ஒரே அலைவரிசையில்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  21. நன்றி முனைவர் குணசீலன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  22. @K.S. Swaminathan
    வயதுக்கேற்ற தேடல் நியாயம்தானே!கல்வி அடிப்படைத்தேடல்,பள்ளியிலிருந்தே.கலர் உபதேடல் கல்லூரி நாட்களில்!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு