புலவர்
இராமானுசம் ஐயா அவர்கள் தொலைபேசியில் கூறியது போல் மின்னல் வரிகள் கணேஷையும் அழைத்துக்
கொண்டு மகிழ்வுந்தில் என் வீட்டுக்கு மாலை 4.15 மணி அளவில் வந்து சேர்ந்தார்.மூவரும்
அடையாரி லிருந்து புறப்பட்டு 5 மணிக்கு முன்னதாகவே கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸை அடைந்தோம்.பல
பதிவர்கள் வந்திருந்தனர்.(உண்மையாகவே எல்லோரும் யூத்தான்!) அனைவரையும் சந்தித்து அறிமுகப்
படலத்தை முடித்தேன்.
”வீடு
” சுரேஸ்குமாரும் ’நாய் நக்ஸ்’ நக்கீரனும் யார் எனத் தெரிகிறதா என்று கேட்ட போது விழித்தேன்.பின்
அவர்களே அறிமுகம் செய்து கொண்டார்கள்.வலை மூலம்
எழுத்தில் மட்டுமே பார்த்துப் பழகிய பல நண்பர் களை நேரில் பார்த்துப் பேச மிக மகிழ்ச்சியாக
இருந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிவகுமார் மற்றும் நண்பர் களுக்கு நன்றி.
ஒரு’ யூத் ’பதிவரின் சுய அறிமுகம்
சந்திப்பின் முக்கியமான நிகழ்வுகள் முன்பே குறிப்பிட்டது போல் விசாலினிக்கும், யோகநாதனுக்கும் பாராட்டு. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒருவருக்கு!
பேருந்து
நடத்துனராக இருந்து ’ ரீல்’ ஹீரோவானவரை நாடறியும்.
பேருந்து
நடத்துனராக இருந்து கொண்டே ’ரியல் ஹீரோ’ ஆனவர்
திரு.யோகநாதன்.
மரங்களைக்
காக்க,மரக் கொள்ளையர்களைத் தடுக்க, அவர் செய்த சாகசங்கள் அனைத்தும் திரில்லர் கதை
போன்றவை.மரம் வளர்க்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் பிரமிக்க வைத்தன.இவை
பற்றியெல்லாம் சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார்.நறுக்கென்று சில குட்டிக்கவிதைகளும்
சொன்னார்.
சந்திப்பில்
அவருக்குப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.
இனிய அதிர்ச்சி அடைந்தவர் பதிவர் ’கோகுல் மனதில்’ கோகுல் அவர்கள்.
2011 ஆம் ஆண்டின் யூத் பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
கோகுல்
கோகுல் பகிர்ந்து கொண்ட ஒரு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த மாதம் அவருக்குத் திருமணம்.நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.ராசிபுரத்தில் திருமணம்.புதுச்சேரியில் வரவேற்பு.பதிவர்கள் ஃபுல்லாப் போகப்போவதாக யாரோ சொன்னார்கள்.ஃபுல்லாப் போவீங்களோ,போயிட்டு ஃபுல்லா வருவீங்களோ, நல்லாருந்தாச் சரி!
மேலும் சில புகைப்படங்கள்
கேபிளாரோடு சண்டை போடப் போகிறாரா?
சந்திப்பில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்ப தெல்லாம் முழுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டி ருந்தார் தமிழ் நாட்டைத் தன் பெயரின் தலைப்பெழுத்துக் களாகக் கொண்ட பதிவர்!முழு வர்ணனைஅவர் பதிவில் விரைவில் எதிர்பார்க்கலாம்!
கண்டிப்பா நாளையும் வாங்க!
.
சந்தோசமாக இருக்கிறது...புகைப்படங்களை மட்டும் பார்த்து இவ்வளவு நாளும் பழகிய உள்ளங்களை நேரடியாக சந்திக்கும் போது..மிக சந்தோசமாக இருக்கும்.
பதிலளிநீக்குஅதில் எல்லோருமாக சேர்ந்து திருமணம் என்ற ஒரு முக்கியமான நிகழ்வுக்கு போவதென்பது...இப்பதிவர்கள் சந்திப்பை விட மிக சுவரஷ்யமாக இருக்கும்.
வாழ்த்துக்கள் இது போன்று மேலும் பல சேவைகள் செய்ய
அன்பின் ரியல் யூத் நண்பருக்கு..
பதிலளிநீக்குசென்னையில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
அதிலும் எதிர்பார்த்ததை விட விழா சிறப்பாய் நடந்து முடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி
நன்றி
சம்பத்குமார்
சந்திப்பில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்ப தெல்லாம் முழுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டி ருந்தார் தமிழ் நாட்டைத் தன் பெயரின் தலைப்பெழுத்துக் களாகக் கொண்ட பதிவர்!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்!
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்
பதிலளிநீக்குTha.ma 4
பதிலளிநீக்குமரங்களை பற்றி ஒரு குட்டிக் கவிதை ஒன்றை அவசரமாக எழுதி யோகநாதன் அவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் நினைத்து கிறுக்கிக்கிட்டுருந்தேன். அதுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. பதிவா போட்டுக்கலாம்னு விட்டுட்டேன்.அதையும் அய்யா கவனிச்சிட்டார்.
பதிலளிநீக்குநிகழ்ச்சியை இணையத்தில் பார்த்து மகிழ்ந்தேன். ஆனா, உங்கள் உரையை பார்க்கலை. அந்த குறை புகைப்படங்கள் பார்த்ததும் போய்டுச்சு.
பதிலளிநீக்குவரமுடியாத இந்நாள் மற்றும் முன்னாள் ‘யூத்’ பதிவர்களுக்கு காட்சிப் படங்களையும் வர்ணனையையும் தந்து நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்கியதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅதிலும் ‘அந்த’ யூத் பதிவரின் சுய அறிமுக புகைப்படம் அருமை!
கண்டிப்பாக நாளையும் வருவேன்!
அண்ணே தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநீங்க யூத் பதிவர் என்பதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை...
பதிலளிநீக்குசெம்ம ஸ்டைலா இருக்கீங்க பாஸ்! :-)
awaited fr next post....sir ....ur luk good as youngster .......
பதிலளிநீக்கும்ம்ம்ம் நானும் வந்துட்டேன் தல....!!!
பதிலளிநீக்குபடங்கள் அருமையாக வந்துள்ளன!
பதிலளிநீக்குஅம்மா எப்படி உள்ளார்கள் கேட்டதாகச சொல்லவும்
சா இராமாநுசம்
நன்றி சிட்டுக்குருவி
பதிலளிநீக்குமகிழ்ச்சி எனதும் சம்பத்குமார்
பதிலளிநீக்குநன்றி
நன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்குக் காத்திருக்கிறேன் முரளிதரன்
பதிலளிநீக்குநன்றி
நன்றி ராஜி
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
பதிலளிநீக்குநன்றி Asiya Omar
பதிலளிநீக்குநன்றி ஜீ :-D
பதிலளிநீக்குthank u bala ganesan
பதிலளிநீக்குநன்றி மனோ
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.அம்மா நலமே.
பதிலளிநீக்குthank u chicha.in
பதிலளிநீக்கு