தொடரும் தோழர்கள்

புதன், மே 23, 2012

மணவாழ்வின் இன்பங்கள்!


என்னடி காலங்கார்த்தால ஒரு ஓரமா நின்னுண்டிருக்கே?”

”மூணு நாள் எனக்கு ரெஸ்ட்டுன்னா.சமையலறை உங்க ராஜ்யம்தான்”

“ஏண்டி எனக்கு ஒரு எழவும் தெரியாதேடி.தோ பாரு.நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டு,உனக்கும் ஏதாவது வாங்கிக் குடுத்துடறேன்.”

”வேண்டான்னா.வயத்துக்கும் ஒத்துக்காது.பர்ஸுக்கும் ஒத்துக்காது”

“அப்போ நீயே சமையல் பண்ணிடு பரவாயில்ல.”

“ஐயோ!மகா பாவம்னா.எங்காத்துலெல்லாம் அந்த வழக்கமே கிடையாது. பாருங்கோ!நான் சொல்லித்தரேன் .நீங்களே பண்ணிடுங்கோ.போய் மொதல்ல பல் தேய்ச்சிட்டு வாங்கோ.””

“எனக்கு அடுப்பே பத்த வைக்கத் தெரியாதேடி!”

”ஆமா!என்ன பெரிய வெறகடுப்பா இல்லை கரியடுப்பா? கேஸ் அடுப்புதானே. குமிழைத்திருகினா தானே வேற பத்திக்கும்”

”சரி நான் ரெடி.என்ன செய்யணும் சொல்லு.”

ஒரு வழியாக இன்ஸ்டண்ட் காஃபி தயாரித்து குடித்து முடிக்கிறார்கள்.

“ சிரமப்பட வேண்டாம்னா.குக்கர்ல சாதம் மட்டும்  பண்ணிடுங்கோ.பருப்புப் பொடி இருக்கு. தயிர் இருக்கு நன்னாச் சாப்பிடலாம்”

”சரி சொல்லு”

”அந்தச் சின்ன டம்ளர்ல 2 டம்ளர் அரிசி எடுத்துப் பாத்திரத்தில போட்டுக் களைஞ்சுடுங்கோ."

”சரி’

”அடுப்பில குக்கர வைச்சு,அரிசில ஒண்ணுக்கு மூணு தண்ணி விட்டு குக்கர்ல வச்சு மூடில கேஸ்கட்டைப் போட்டு மூடிடுங்கோ”

”ஆச்சு”

"இப்போ நீராவி நன்னா வெளியே வந்தப்பறம் வெயிட்டைப் போடுங்கோ”

...........

“என்னடி!பத்து நிமிஷமாச்சு,ஸ்டீமே வரல்லையே.”

” அடக் கடவுளே!குக்கர்ல தண்ணி விட்டேளா ?”

“நீ சொல்லவே இல்லையே!”

திறந்து காய்ந்து போன குக்கரில் சுர்ரென்று தண்ணீர் விட்டு மூடிஒரு வழியாய் விசில் சப்தக் கணக்குக்குப் பின்,அடுப்பு அணைக்கப் படுகிறது.

“போய் வேற வேலையைப் பாருங்கோ.இருபது நிமிஷம் கழிச்சுத் திறக்கலாம்”

திறந்து பார்க்கும்போது அதிர்ச்சி.

“என்னடி ?சாதம் இப்படி இருக்கு?!”

”ஐயய்யோ!எவ்வளவு தண்ணி விட்டேள்?”

”நீதான் சொன்னயே,மூணு டம்ளர்”

”கஷ்டம்!ஒண்ணுக்கு மூணு சொன்னேன்.ரெண்டு டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்னி விடணும்.மறுபடியும் தண்னி விட்டு குக்கர்ல வையுங்கோ.எப்படி வரதோ சாப்பிட்டுக்கலாம்.”

சாதம் ஒரு மாதிரித் தயாராகி.அவனும் சாப்பிட்டு அவளுக்கும் வைத்து விட்டு அலுவலகம் புறப்படுகிறான்.


“ஏன்னா!வரும்போது ஒரு பாக்கெட் தாயார் இட்லி மாவு வாங்கிண்டு வந்துடுங்கோ.ராத்திரி இட்லி வார்த்துடலாம் .ரொம்ப ஈசி.”

இது வேறயா! (மனசுக்குள்)

மாலை!

மணி அடிக்க அவள் வந்து கதவைத் திறக்கும்போதே கேட்கிறாள்”தாயாரோடு வந்தேளா?’

வெளியே பார்க்கிறாள்.அவனுக்குப் பின் அவள் அம்மா நிற்கிறாள்!

“நீ சொன்ன படியே தாயாரோடு வந்துட்டேன்.ஃபோன் பண்ணினேன்.30 கி.மீதானே வந்துட்டா!இனிமே எங்கம்மா  தில்லிலேருந்து வர வரைக்கும் ஒவ்வொரு மாசமும் உங்கம்மா வர வேண்டியதுதான்”

வெட்கப்பட்டபடியே அவள் அம்மா சொல்கிறாள்”அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளே!”

25 கருத்துகள்:

  1. அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளை... -சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
  2. மாமியார் சொன்ன ஒரு வாக்கு...
    பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி
    ஸெம நச் போங்க

    பதிலளிநீக்கு
  3. "அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளே” - இதிலிருந்து தாங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ஹி ஹி ஹி ..!

    பதிலளிநீக்கு
  4. சப்பா............இப்ப இப்பிடி வேறயா,,,,:)

    பதிலளிநீக்கு
  5. பதிவின் உள்ளடக்கம் எனக்குப் புரிகிறது!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதில். எவ்வளவு ஆழம். கடைசி வரிகளை மட்டும் ஆறுமுறை படித்தேன்... மனைவி இன்னொரு அன்னை என்று முன் பாகம் சொல்கிறது :)

    பதிலளிநீக்கு
  7. பதிவின் உள்குத்து
    செங்குத்தாய் நெஞ்சில் பதிந்தது...

    பதிலளிநீக்கு
  8. சமைக்க ஆண்கள் படும்பாட்டை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனாலும் சமையல் செய்தவதில் ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது ‘நளபாகம்’ என்ற சொல்லாடலில் இருந்தே புரிந்துகொள்ளலாம்... நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  9. NAAI-NAKKS சொன்னது…

    :))))))))))))))

    :-)))))))))))))))))))))))))))
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //
    வெட்கப்பட்டபடியே அவள் அம்மா சொல்கிறாள்”அதுக்கு அவசியமே இல்லாமப் பண்ணிடுங்கோ மாப்பிள்ளே!”
    //
    எதிர்பாராத திருப்பம்.
    இரசித்தேன்

    பதிலளிநீக்கு