தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 24, 2016

திக்குத் தெரியாத காட்டில்



இரயில் நிலையம்.

வழக்கமான பரபரப்பு

இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகும் இரயிலுக்காகக் காத்திருக்கும் கூட்டம்

சிலர் கையில் மினரல் தண்ணீர் பாட்டில்;சிலர் பிளாட்பாரக் குழாயில் தண்ணீர் பிடித்தபடி..

சிலர் கையில் உள்ள பொட்டலத்தில் இருந்து எதையோ கொறித்தபடி.,சிலர் கப்பில் உள்ள காபி/டீயை உறிஞ்சியபடி.,சிலர் மற்றவர்களைப் பார்த்தபடி. ..

என்ன செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான் அந்தச் சிறுவன்.

மூன்று வயதே இருக்கும் அவனைச் சிறுவன் என்பதா,குழந்தை என்பதா?

பிளாட்பாரத்தில் இங்கும் இங்கும் ஓடுகிறான்.ஒரு ஓரத்தில் படுத்திருக்கும் அந்த ஆண்,பெண் அருகே வந்து அமர்ந்து கொள்கிறான்.

ஒரு கிழிந்த பொம்மையுடன் விளையாடுகிறான்.

அந்தப் பெண்ணின் அருகில் படுக்கிறான்.

எழுகிறான்

மீண்டும் ஓடுகிறான்.

ஓரிருவர் அவனை நிறுத்தி விசாரிக்க, படுத்திருப்பவர்கள் அவன் பெற்றோர் எனவும் அவர்கள் அருகில் உள்ள ஓர் ஊர்க்கோவிலுக்குப் போவதாகவும், அவர்கள் தூங்கி எழுந்தவுடன் போகப்போவதாகவும் மழலையில் சொல்கிறான்.

சிலர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படுத்திருக்கும் தம்பதியிடம் எந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை

அருகில் சென்று பார்க்கையில் தெரிய வருகிறது –அவர்கள் உயிருடன் இல்லை என்பது.

சிறுவன்/குழந்தை ஏதும் அறியாமல் அம்மாவின் புடவைத்தலைப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.............

நில்லுங்கள்.

என்னால் மேலே எழுத முடியவில்லை.எழுதியதைப் படிக்க முடியவில்லை

கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்து ஓடுகிறது.

ஏதோ ஒரு ஊரில் ஒரு இரயில் நிலையத்தில் மூன்று வயது குழந்தை, நிர்க் கதியாக, அனாதையாக............

இறைவா!இது என்ன நீதி? அக்குழந்தை என்ன பாவம் செய்தது?

ஏன் இப்படிச் செய்தாய்?

இருவரும் சேர்ந்தே இறந்திருக்கிறார்கள் என்றால்,அது தற்கொலையா?காரணம் என்ன?

காரணம் எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அவர்கள்?

இனி அக்குழந்தையின் நிலை என்ன?

கேள்விகள் ,கேள்விகள்,கேள்விகள்......விடை தெரியாத......

(டைம்ஸ் இந்தியா,சென்னை,23-08-2016,செய்தியின் அடிப்படையில்)



ரு

10 கருத்துகள்:

  1. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ?
    மறக்க முடியாத சோக நிகழ்வு :(

    பதிலளிநீக்கு
  2. வலி தரும் செய்தி!கேட்கவே வேதனையாக இருக்கிறது! பார்த்தவர்கள் நிலையை எண்ணிப்பார்க்கமுடியவில்லை! அந்த குழந்தையை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது!

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சியாக இருக்கிறது, பல நேரங்களில் இறைவனும் கண்டுங்காணாமல் கண்களை மூடிக் கொண்டிப்பருப்பதாகத் தோன்றுகிறது.

    இது இரு வலியான பதிவு, வாசிக்கும்போதே தொண்டை அடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வேதனை.... அக்குழந்தையின் நிலை நினைத்தாலே பரிதாபம்.....

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் போதெ மனசு கனத்துவிட்டது ஐயா...
    பாவம் அக்குழந்தை... வேதனை...

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் சார்! நிர்கதி! விடை தெரியவில்லைதான் நமக்கு. ஆஅனால் இதற்கு பலரும் சொல்லுவது பூர்வ ஜென்ம கர்மா....என்று சொல்லுவார்களே..

    பதிலளிநீக்கு
  7. வேதனை அக்குழந்தையின் நிலைமை
    இப்படிப்பட்டக் குழந்தைகள் பாதை தவறிப் போகும் நிலைமை எந்தக் கயவர்களும் எடுத்துக் கொண்டு போகும் நிலைமை....பிச்சை எடுக்க வைக்கும் நிலைமை...கூன் குருடு ஆக்கும் நிலைமை...வேதனை....இது பூர்வ ஜென்மா கர்மா...அப்படி என்றால் ...தண்டனை???? புரியவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கடவுளே... ஒரு கணம் தன் குழந்தையைப் பற்றி அந்தப் பெற்றோர் எண்ணிப்பார்க்கவில்லையா? எந்த இரவுக்கும் ஒரு விடியல் உண்டு என்று அவர்களுக்குத் தோன்றவில்லையா?

    பதிலளிநீக்கு