வாடா,மாங்கா
மண்டையா!என்ன,கையிலே உடுக்கையோட வாரே?
அதுல
ஒரு விசயம் இருக்குண்ணே.
அது
என்னடா விசயம்?
நீங்க
என்னோட நன்பர்தானேண்ணே?
ஆமாண்டா,போன
சன்மத்துல நான் செஞ்ச பாவம்!
இந்த
உடுக்கை காணாமப்போனா என்னோட கையாயிருந்து நீங்க உதவுவீங்கதானே?
எவண்டா
சொன்னான் அப்படி?
திருக்குறள்ள
சொல்லிருக்கண்ணே!,உடுக்கை இழந்தவன். அப்படின்னு!
அடேஆட்டு
மூளை மண்டையா!அதுக்கு அர்த்தம் வேறடா.இப்ப நீ நாலு போண்ணுக இருக்குற இடத்துல நிக்கறேன்னு
வச்சுக்க.
ஆகா!கேக்கவே
கிளு கிளுன்னு இருக்குண்ண!
உனக்கு
அப்படி.அவங்களுக்கு?இப்போ ஒன் வேட்டி அவுருதுன்னு வச்சுக்க.
அய்யய்யோ!என்னண்ணே
இது.
அதானே
நீ என்னிக்கு வேட்டி கட்டிருக்க. என்னிக்கும் கோவணம்தானே பேச்சுக்கு வேட்டி கட்டிருக்கன்னு
வச்சுக்க.அது அவுந்தா கை வேகமாப் போயி அதைத் தடுத்து சரியாக் கட்டும் இல்ல!அது மாதிரி
நண்பர்கள் உதவி செய்யணுமாம்!
புரிஞ்சிடுச்சு!அதாவது ஏன் வேட்டி அவுந்தா நீங்க
கட்டி விடணும்னு வள்ளுவர் சொல்லிருக்காரு!இது பெரிய விசயமாண்ணே?
டே.ய்!ஒனக்கு
புரிய வைக்க டாக்டர் மு.வ.வாலெயே முடியாது!ஓடிப்போடா!
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பரிமேலழகர் உரை:
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.).
மு. வரதராசனார் உரை:
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

இணையக்
கோப்பெருஞ்சோழர்களுக்கு இந்தப் பிசிராந்தையின் நட்பு நாள் வாழ்த்துகள்
CN URAI SUPERB
பதிலளிநீக்குஅருமையா உங்க பாணியில் சொல்லி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஹாஹாஹா ரசித்தேன் ஐயா அருமை.
பதிலளிநீக்குஹஹ்ஹஹ மிக மிக ரசித்தோம் சார்
பதிலளிநீக்குரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஆஹா... நட்பு தினத்திற்கு சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் தல!
பதிலளிநீக்கு