தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

தேவனின் துப்பறியும் சாம்புதேவனுக்கு எரிச்சலாக இருந்தது.

தினமும் இது நடந்து கொண்டே இருக்கிறது.அவனும் ஓரிரு நாட்களில் நின்று விடும்,அவசரத்துக்கு எவரேனும் செய்திருக்கலாம் என நினைத்தான்.

ஆனால் அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

அவனுக்குக் கோபமெல்லாம் செய்பவர் யாராயினும் அவனிடம் சொல்லி விட்டுச் செய்திருக்கலாமே என்பதுதான்.

இதை இப்படியே விட்டு விடக் கூடாது,இன்று யார் என்று கண்டு பிடித்து விட வேண்டும்.

ஒரு முடிவுக்கு வந்தான்.

அறையில் அவனையும் சேர்த்து நான்கு பேர்.

தினம் முதலில் குளிப்பது அவன்தான் .

வழக்கம்போல் குளித்து விட்டு வந்தான். டாம்கோ தலை முடித் தைலத்தைத் தடவித் தலை வாரிக் கொண்டான்.

சில ஏற்பாடுகளைச் செய்தான்.

அறைக்கு வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டான்,அறை வாசலைப் பார்க்க ஆரம்பித்தான்.

வெங்கி குளிக்கப் போனான். குளித்து விட்டுத் திரும்பி அறைக்குள் போனான்

சங்கர் ---------------------------do--------------------------------------------------------------- 

கடைசியாக ரவி குளித்து விட்டுத் திரும்பி வந்து அறைக்குள் போனான்.இரு நிமிடங்களில் தலையைத் துண்டால் மூடிக் கொண்டு மீண்டும் குளியல் அறைப் பக்கம் ஓடினான்.

மாட்டிக் கொண்டான்.திட்டம் பலித்து விட்டது

தினம் அவனது தலைமுடித் தைலத்தைத் தடவிக் கொண்டது யாரென்று தெரிந்து விட்டது

டாம்கோ தைலத்தை எடுத்து விட்டு அதே இடத்தில் அதேபோல் இருக்கும் டாம்கோ சாம்பு சீசாவை வைத்துப் பல நாள் திருடனைக் கண்டு பிடித்தாயிற்று

சாதாரண சாம்பு இல்லை அது.

துப்பறியும் சா(ஷா)ம்பு!

5 கருத்துகள்:

  1. உங்கள் குறும்பு உங்களை விட்டுப் போகவில்லை. தலைப்பைப் பார்த்ததும் தேவனின் துப்பறியும் சாம்பு நூல் விமர்சனம் என்றே நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹாஹ்ஹ்...தேவனின் துப்பறியும் சா/ஷாம்பு ரசித்தோம்..

    தேவன் கதைகள் மிகவும் ஹாஸ்யமாக இருக்கும். ரசித்து வாசித்ததுண்டு..

    பதிலளிநீக்கு