தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 13, 2016

மரண அழைப்பு!



அன்பு நண்பரே/நண்பியே,

என் மிக நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் என்பதால் இந்த அழைப்பு உங்களுக்கு அனுப்பப் படுகிறது.

இந்த வார இறுதியை நான் உங்களுடன் கழிக்க விரும்புகிறேன்.எனது பண்ணை வீட்டில் வரும் சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்,.முப்பது நண்பர்களை அழைத்திருக்கிறேன் .இரண்டு நாட்களும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வார இறுதி விழாவுக்கு எந்த உடைக்கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான,வசதியான எந்த உடையும் அணியலாம்.பாட விரும்புபவர்கள் பாடலாம்.ஆட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள் ஆடலாம்.. நடிக்கத்தெரிந்தவர்கள்நடிக்கலாம்..ஆம்,ஒரே நோக்கம், கவலைகள் மறந்து அனைவரும்,நானும்தான், மகிழ்ச்சியாக இவ்விரு நாட்களைக் கழிக்க வேண்டும் என்பதுதான். .சுதந்திரமான சந்திப்பு.எந்த விதமான கட்டுப் பாடுகளும்,விதிகளும் இல்லை.ஓ,மறந்து விட்டேன்.மிக முக்கியமான விதி ஒன்று உண்டு.,யாரும் கண்ணீர் சிந்தக்கூடாது,எந்த சமயத்திலும்.

வாருங்கள்.ஒரு மகிழ்வான வார இறுதியைக் கழிக்க உதவுங்கள்

அன்புடன்
பெட்ஸி.

................................................................................
அழைப்புக் கிடைத்த அனைவரும் வார இறுதியில் குழுமினர்.சிலர் வயலின்,சிலர் கிடார்,என வாத்தியங்கள்.ஒரு வெண்ட்ரிலாக்கிஸ்ட் அவரது பொம்மையுடன். .அனைவரையும் ராதா வரவேற்றாள்.கைகுலுக்கினர்,கட்டித் தழுவினர்,கையில், கன்னத்தில் முத்தமிட்டனர்.

மகிழ்ச்சியான வார இறுதி தொடங்கிற்று.,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம். ராதாவுக்கு மிகவும் பிடித்த உணவு சிலர் கொண்டு வந்திருந்தனர்.அவளுக்குப் பிடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மது வகைகள்,வித விதமான உணவு எல்லாம் பரிமாறப்பட்டன.

இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்தன.குறிப்பிட்ட நேரம் வந்தது.ஆம் நேரமும் முன் கூட்டியே அவளால் திட்டமிடப்பட்டு விட்டது.

“நண்பர்களே!என் அழைப்பை ஏற்று என்னை வழியனுப்ப வந்த நீங்கள் 
 அனைவரும்  மிகவும்தைரியசாலிகள்.என் மகிழ்ச்சியே முக்கியம் என நினைப் பவர்கள்.உங்களுக்கு என் நன்றி.இப்போதுவிடை பெறும் நேரம் வந்து விட்டது ”  என்றாள் ராதா.

ஒவ்வொருவராக வந்து அவளிடம் விடை பெற்றுச் சென்றனர்.
 


அறையில் ராதாவும்,அவளது செவிலியும் மட்டும்.

செவிலி  சக்கர நாற்காலியை அந்த அறைக்கு தள்ளிச் சென்றாள்.

சட்ட பூர்வமான அனுமதியுடன்,மருத்துவர் கொடுத்த மருந்துகளை, ராதாவுக்குக் கொடுத்தாள்.அவற்றை மலர்ந்த முகத்துடன் சாப்பிட்ட ராதா செவிலியின் கையைக் குலுக்கினாள்.செவிலி பொங்கி வந்த கண்னீரை அடக்கிக்கொண்டாள், பெரும் முயற்சியுடன்.

ராதா துயிலில் ஆழ்ந்தாள்.

குணமாக்க முடியாத நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இனித் துன்பம் இல்லை.

ஆம்!மீளாத்துயில்

(கதையல்ல நிஜம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-08-2016)

24 கருத்துகள்:

  1. கருணைக் கொலை!? ஒரு வகையில் நோயாளிகளுக்கு நன்மை என்றாலும் மனசை என்னவோ செய்கின்றது!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வெளிநாடுகளில் இந்தச் சட்டம் இருக்கிறது ஸ்ரீராம்...ஆனால் இங்கு அந்தச் சட்டம் இல்லை என்றாலும் அதற்காக ஒரு நிரூபர் ஒரு பெண்மணிக்காகப் போராடியது பற்றி அறிந்திருப்பீர்கள்

      கீதா

      நீக்கு
  3. இறுதியில் கருணைக்கொலை நிறைவேற்றப்பட்டது அறிந்ததும் மனதில் ஏதோ ஒரு சொல்லமுடியாத உணர்வு.

    பதிலளிநீக்கு
  4. காலையில்தான் இந்தச் செய்தியைப் படித்தேன். நீங்கள் அந்த பெண்ணின் பெயரை மாற்றாமல் (பெட்ஸி டேவிஸ்) அப்படியே தந்திருக்கலாம். அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்வை நம் ஊரில் நடந்ததுபோல் மாற்றி எழுதியிருப்பது கொஞ்சம் முரணாகத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. கருணைக் கொலையா?
    தீர்க்க முடியாத வியாதி என்பதால் சந்தோஷம் என்றாலும் தன் முடிவை தானே தேடிக்கொள்வது வருத்தமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துன்பத்தில் வாழ்வதை விட சாவில் இன்பம்!
      நன்ரி குமார்

      நீக்கு
  6. ‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
    காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ என்று சொன்ன பாரதியார் போல் மரணத்தை எல்லோரும் வரவேற்க வேண்டும் என்பதே எனது எண்ணமும் !
    கடந்த எட்டாம் தேதியன்று , என் ' ஜோக்காளி 'தளத்தில் எழுதியது >>>>சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா :)
    ''நெஞ்சு வலியால் யாராவது துடிப்பதைப் பார்த்தால் கஷ்டமாயிருக்கு ...நல்ல வேளை,எனக்கு நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே இல்லை ''
    ''ஏன் ?''
    ''நாட்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நெஞ்சு வலியே தெரியாதாமே !''
    இதை நீங்களும் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் .இது கற்பனை அல்ல ,சொந்த அனுபவம் !
    யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ,நாமும் வலியால் துடிக்காமல் கருணைக் கொலையில் செல்வதே நல்லது என நினைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. சில சமயங்களில் நல்லதென்றே தோன்றுகிறது. நம் நாட்டில் இதற்கு அனுமதி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது நாட்டில் அனுமதிக்கும் முன் மிகவும் யோசிக்க வேண்டும்!
      நன்றி வெங்கட்

      நீக்கு
  9. மனதை தொட்ட பதிவு அய்யா!
    த ம 4

    பதிலளிநீக்கு
  10. கருணைக் கொலையை - என்னால்
    ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  11. மனதை நெகிழவைத்துவிட்டீர்கள். ஒருவிதத்தில் இவ்வாறான பிரிவை ஏற்றுக்கொள்ளலாம் போலுள்ளது. ஏனெனில் அவர்கள் படும் வேதனை அளவிடமுடியாததல்லவா?

    பதிலளிநீக்கு
  12. 'நோயாளியின் வேதனையை வேறு யார் அறிய இயலும்? அதே அமெரிக்காவில்தான், சக்கர நாற்காலியிலேயே, பல உறுப்புகள் செயல் இழந்து காலம் கழிக்கும் விஞ்ஞானியும் வாழ்கிறார். இருந்தாலும், தானே வரவழைத்து இறப்பது மனதுக்கு சீரணிக்க முடியாததாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பித்தரே !

    வாசித்து முடிக்கையில் உயிருள் ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்ததை உணர்கிறேன் இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ...கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது !

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  14. நோயின் கொடுமையும், தனிமையும் உடலை சாப்பிடுவதை விட இதுஎவ்வளவோ மேல்.
    மனம் கனத்து போனது.

    பதிலளிநீக்கு
  15. மரணம் என்றோ ஒரு நாள் வரப்போவதுதான். அதற்குத் தயாரா இருக்க வேண்டும்தான்...என்றாலும் நாமே முடிவு எடுக்கும் இந்த கருணைக் கொளை என்னதான் சட்டம் சரி என்றாலும் மனதும் இது சரிதான் என்று சொன்னாலும் தடுமாறத்தான் செய்கிறது...

    இதைப் போன்ற ஒரு நிகழ்வு ஓரிரு வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரு நிரூபர் ஒரு பெண்மணிக்காகப் போராடியதாக நினைவு எங்கள் தளத்தில் அதைப் பதிவாக எழுதியதாகவும் நினைவு..

    பதிலளிநீக்கு