தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

குருப்பெயர்ச்சியும்,இராசியும்


அவர் எங்கள் குடும்ப நண்பர்.

சிறு வயது முதல் என்ன அறிந்தவர்.

சிறிது சோதிடமும் அறிந்தவர்.

அன்று என்னிடம் வந்தார்.

ஏதோ கவலையாக இருப்பது போல் காணப்பட்டார்.

”ஏன் ஐயா ,ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?”கேட்டேன்.

”தம்பி!உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லவே வந்தேன்.எட்டாம் வீட்டுக்குக் குரு வந்து விட்டான்;இது ராசிக்கு நல்லதல்ல.ஏதாவது கேடு நேரலாம், உனக்குத் தெரியாததல்ல. அவனால் பல சங்கடங்கள் வந்து சேரும்.எச்சரிக்கையாக இருப்பது நல்லது” 
அவர் சொன்னர்.

நான் யோசிக்கலானேன்.குருவின் இந்தப் பெயர்ச்சி நிச்சயமாகராசிக்கு நல்லதல்ல. இதற்கு என்ன செய்வது?

நண்பன் மணியைக் கலந்து ஆலோசிக்கலாம் என அவன் வீட்டுக்குப் போனேன்

மணி கோவிலுக்குப் போயிருப்பதாக வன் அம்மா சொன்னார்கள்

அவன்தான் தவறாமல் வெள்ளியன்று கோவில் செல்பவனாயிற்றே!

நானும் சென்றேன்

வணங்கி முடித்து வெளிச் சுற்றில் அமர்ந்தோம்.

அவனிடம் செய்தியைச் சொன்னேன்.

அவனும் அதிர்ந்தான்

இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்,

மேலோட்டமா எந்த் தீர்வும்  பலன் தராது.

வீட்டுச் சொந்தக்கார் ரவியினால் ஏதாவது தீர்வு இருக்குமா?

நிச்சயம் தெரியாது

சிக்கலின் அடி வேருக்குப் போய்த்தான் அதை அறுக்க வேண்டும்.

அங்கிருந்து புறப்பட்டோம்

அந்த வீட்டை அடைந்தோம்”ஐயா!”

அவர் வெளியே வந்தார்-ராகவேந்திரன்

”வாங்க.பார்த்து பல நாட்களாகி விட்டன!””

ஒரு முக்கிய செய்தி.உங்களிடம் தெரிவித்து விட்டால் நலம் எனத் தோன்றியது. அதனால்தான் வந்தோம்

தகவலைச் சொன்னோம்.

அவ்வளவுதானே..நான் பார்த்துக் கொள்கிறேன்.கவலைப்படவேண்டாம் என அவர்களுக்கும் சொல்லி விடுங்கள்.”

மனதின் சுமை இறங்கியதாக உணர்ந்தேன்.

இனி குருவைப் பற்றிக் கவலை இல்லை!

சில விளக்கங்கள்

இராசி….எங்கள் தெருவில் ஒன்றாம் இலக்க வீட்டில் வசிக்கும் கல்லூரி தேவதை.

குரு…..ஒரு பொறுக்கி.சில மாதங்கள் முன் இராசியிடம் தவறாக நடந்து கொண்டு  அவள் புகாரின் காரணமாகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டவன்.இப்போது அந்த் தெருவில் எட்டாம் இலக்க வீட்டுக்குக் குடி வந்திருக்கிறான்/எதற்கும் துணிந்தவன்

இராகவேந்திரன்…...காவல் துறை ஆய்வாளர் எங்கள் நலம் விரும்பி.நேர்மை தவறாதவர் 

(மீள் பதிவு)

9 கருத்துகள்:

 1. ஆஹா சுவாதி மேட்டர் மாதிரி கொண்டு போயிட்டீங்களே... ஐயா ஸூப்பர்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அடடா, சுவாரசியமான பதிவு. நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா... ஆரம்பத்திலேயே இது பெயர்களாக இருக்குமோ என்று சந்தேகத்தோடு படித்தேன்... அது உண்மையே...
  ரசித்தேன்... ரசித்துப் படித்தேன்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல வேளை
  சனி இத்துடன் விட்டது என
  விட்டு விடுங்கள்
  மிகவும் இரசித்தப் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. போன குருபெயர்ச்சியில் பதிவிட்டீர்களோ? சுவாரஸ்யம் குறையவில்லை இப்போதும்!

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பாணியில் ஒரு பகிர்வு. சுவாரஸ்யம் - மீள் பதிவாக இருந்தாலும்!

  பதிலளிநீக்கு
 7. அருமை அய்யா. அப்புறம்...குருவை அங்கிருந்து பெயர்த்தீர்களா இல்லையா? பாவம் ராசி! படுபாவம் ராசிபலன் பார்க்கும் (அப்)பாவிகள்! நான் மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. இது முன்பே பதிவிட்டதாக இருக்கிறதே என்று வாசித்துக் கொண்டு வந்தால் மீள்பதிவு என்றாலும் சுவாரஸ்யம்தான்..

  பதிலளிநீக்கு