மாலைக்காட்சி
படம் முடியும்போது இரவு மணி 9.30 ஆகி விட்டது.
“வாங்க
.டிபன் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றனர் நண்பர்கள்
பக்கத்திலேயே
ஒட்டல்.
தோசை.சப்பாத்தி
ஆர்டர் செய்தோம்
சாப்பிடும்போது
பேச்சு படத்தைப் பற்றி எழுந்தது.
”எட்டு
கிலோமீட்டர் சைக்கிள்ள வந்து பாக்கறத்துக்கு ஒர்த் இல்ல படம்” என்றேன்.(புரிஞ்சது அவ்வளவுதான்!)
அவ்வளவு
பயமா இல்லையே என்றான் மகாராசன்
”இப்ப
அப்படித்தான் இருக்கும்.இருட்டில தனியா போகும்போது பயம் தன்னால வரும்.அந்தப் பாட்டு
காதில ஒலிச்சிக்கிட்டே இருக்கும்”இது சுப்பிரமணி
“எதுக்கும்
கொஞ்சம் சூதானமாப் போங்க.வழில இந்த ரெட்டைப் புளிய மரம் வருதில்ல.அங்கன பேய் இருக்குன்னு
பேசிக்கறாங்க.”என்றான் தலைக்கான்.
நான்
சிரித்தேன்.”சும்மா பயமுறுத்தாதீங்க.நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்”
புறப்பட்டேன்
கம்பத்திலிருந்து
உத்தமபாளையம் 8 கிலோமீட்டர்.
சைக்கிளில் வந்திருந்தேன்.
சைக்கிளில் ஏறி உற்சாகமாக மிதிக்க
ஆரம்பித்தேன்.
ஊரெல்லை தாண்டி மக்கள் நடமாட்டமில்லாத சாலை ஆரம்பமாயிற்று.
கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன்.இருட்டில் ரேடியம் 10.30 காட்டியது.
சாலை
நீ...ண்டு கிடந்தது.
விசிலடித்தபடி
வேகமாக மிதித்தேன்
இருட்டு
என்னைக் கவ்வியது
பலமான
காற்று.ஆனால் மழை வரும் அறிகுறிகள் இல்லை
காற்றில்
சாலையோரப் புளியமரங்கள் தலை விரித்தாடின.
பாதி
தூரம் கடந்தாயிற்று.
இங்குதானே
அந்த ரெட்டைப் புளிய மரம் இருக்கும்.
நிஜமாகவே
பேய் இருக்குமோ?
அடி
நெஞ்சில் லேசான பயம்;விசில் பலமான பாட்டாக மாறிற்று.என்ன கத்தினாலும் யாரும் ஒன்றும்
சொல்லப் போவதில்லையே!
அப்போதுதான்
என் பாட்டையும் மீறி என் காதில் அந்தப் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது....சினிமாவில் வந்த
அதே பாட்டு!
அதோ
அந்த ரெட்டைப் புளியமாரம்.
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
மரத்தின் கீழ் ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தோன்றியது.
பயத்தில்
உடல் சில்லிடத் தொடங்கியது.
அந்த
மரத்தைத் தாண்டிப் போக வேண்டுமே,எப்படி?
என்
வாய் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது
கண்களை
மூடிக் கொண்டு வண்டியை முழு வேகத்தில் மிதித்தேன்.
மரத்தைத்
தாண்டியிருப்பேன் என்ற உணர்வு ஏற்பட்டது கண்களைத் திறந்தேன்.
தாண்டி
விட்டிருந்தேன்
திரும்பிப்
பார்க்கலாமா?
வேண்டாம்;பேயைத்
திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்களே
வேகமாக மிதித்தேன்.
வீட்டை
அடையும் வரை அதே வேகம்!
வந்து படுக்கையில் விழுந்தேன்.
இரண்டு
நாட்கள் கல்லூரி செல்லவில்லை.
காய்ச்சல்!
என்
கேள்வி ...நிஜமாகவே பேய் இருந்து அதைப் பார்த்தேனா,அல்லது பயத்தினால் ஏற்பட்ட பிரமையா?
தெரியவில்லை
அந்தப்படம்.....”பீஸ்
ஸால் பாத்”
காதில்
ஒலித்த பாடல்..”கஹிம் தீப் ஜலே கஹிம் தில்”
இதோ
காணொளி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
பேய் என்றால் பயம் இருக்கத்தான் செய்கிறது.மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ஐயா
நீக்குஹாஹா! உங்களைப் போல அங்கேயும் யாரும் பயத்துடன் இருந்து சைக்கிள் வருவதை பார்த்து துணை வருகிறது என்றுகூட குதித்திருக்கலாம் அல்லது புளிய மரத்து பேயாகவும் இருக்கலாம்!
பதிலளிநீக்குகலாம்!
நீக்குநன்றி சுரேஷ்
எனக்கும் சிறிய வயதில் கீழக்கரை அஸ்கர் திரையரங்கில் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் கண்டு பயந்த அனுபவம் உண்டு ஐயா.
பதிலளிநீக்குஅச்சம் வாழ்வி ஓர் அங்கம்!
நீக்குநன்றி கில்லர்ஜி
தங்களின் பதிவைப் படிக்கும்போது ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’ என்று தொடங்கும் பாடலில் வரும்
பதிலளிநீக்குவேப்பமர உச்சியில் நின்னு
பேயோன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பள்ளியில் 9 ஆவது படிக்கும்போது இரண்டாம் காட்சிக்கு போய்விட்டு எங்கள் ஊருக்கு நண்பர்களோடு வரும்போது குறிப்பிட்ட இடம் வந்ததும் நாங்களும் பயந்துகொண்டு வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடு திரும்பியது இப்போது நினைவுக்கு வருகிறத
பதிவை இரசித்த்னே. வாழ்த்துகள்!
இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!
நீக்குநன்றி சார்
இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!
நீக்குநன்றி சார்
அந்தப் 'பேய்'க்கும் சத்தமாகப் பாடியபடி வரும் ஒருவரைப் பார்த்த பயத்தில் ஜுரம் வந்திருக்கும்!
பதிலளிநீக்குபாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கும்!
நீக்குநன்றி ஸ்ரீராம்
பாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கும்!
நீக்குநன்றி ஸ்ரீராம்
அற்புதமான பாடல்
பதிலளிநீக்குகேட்டு இரசித்தோம்
முன்னுரைப் பதிவுடன்
பாடல் கேட்க கூடுதல் சிறப்பு
வாழ்த்துக்களுடன்...
அருமையான பாடல்.....
பதிலளிநீக்குசெம அனுபவம் கிடைச்சுருக்கு உங்களுக்கு! எங்களுக்கும் அதுனால ஒரு வாசிப்பனுபவம்....
மறக்கஇயலாத அனுபவம்தான்
பதிலளிநீக்குபேயும் பாடுமோ இவ்வளவு இனிமையாய் :)
பதிலளிநீக்குஹா... ஹா... ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குஇருட்டில் பயந்து கொண்டே சைக்கிளில் சென்ற அனுபவம் எனக்கும் இருக்கு...
என் தந்தையார் பீஸ் சால் பாத் படத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். இப்பதிவைப் பார்த்ததும் அந்நாளைய நினைவுகள் மனதிற்கு வந்தன.
பதிலளிநீக்குஹஹஹஹஹ் நல்ல அனுபவம்...சார் அந்தப் பேயும் அந்தப் படம் பார்த்துட்டு வந்து புளியமரத்துல வெயிட் பண்ணிருக்கும்னு நினைக்கிறோம் சார்.....பாவம் சார் பேய் அது உங்களைக் கண்டு பயந்து போயிருக்கும்...ஏன்னா உங்களிடம் கவசம் இருந்ததே...
பதிலளிநீக்குசீரியஸ்லி..உங்கள் கேள்விக்குப் பதில் பயத்தினால் எழும் மனப்பிரமைதான் எல்லோருக்கும் ஏற்படுவது