தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 10, 2016

விடுமுறை,சிரிமுறை!
ஒரு குருவிடம் சில சீடர்கள் பயின்று வந்தனர்.

குரு மிகவும் கண்டிப்பானவர்.

கொடுத்த பணியைச் சரியாகச் செய்யாவிட்டால்,பல தண்டனைகள் கொடுப்பார்.

சீடர்கள் நொந்து போயிருந்தனர்

ஒரு நாள் சொர்க்கம்,நரகம் பற்றிக் குரு பேசிக் கொண்டிருந்தார்.

நரகத்தில் பாவிகளை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பார்கள் என்று சொன்னார்.

முடிவில் சீடர்கள் கேட்டனர்,குரு எங்கு போவார் என்று.

குரு சொன்னார்”நானும் பாவங்கள் செய்திருக்கிறேன்;எனவே நரகத்துக்குத்தான் போவேன்” என்று.

சீடர்கள் சொன்னார்கள் நாங்களும் உங்களுடன் நரகம் வருவோம் என்று

குரு அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போய் அவர்களிடம் அதைச் சொன்னார்.

அவர்கள் சொன்னார்கள்”அப்படி இல்லை குருவே!நாங்கள் உங்களை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பதைக் காண ஆசைப் படுகிறோம்”

டிஸ்கி:நான் எழுதும் ஜோக்குகள் எல்லாம் பகிர்வுகளே அன்றி படைப்புகள் அல்ல!!?

20 கருத்துகள்:

 1. சீடர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹா இதுதான் உண்மையான குருபக்தி

  பதிலளிநீக்கு
 3. ஹாஹாஹா! அருமையான நகைச்சுவை! கேள்விப்பட்டது என்றாலும் உங்கள் பாணியில் படிக்கையில் ரசிக்க முடிகிறது!

  பதிலளிநீக்கு
 4. ஹா.. ஹா... நல்ல சீடர்கள்...
  எண்ணெய் சட்டியில் அமுக்கவில்லை என்றால் இவர்களே அமுக்கி விடுவார்கள் போல...

  பதிலளிநீக்கு
 5. அந்த குருவின் பெயர் பரமார்த்த குருவா?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 6. ஹ்ஹஹஹ்ஹ.... பரமார்த்த குருவும் சீடர்களும் கதையோ....

  பதிலளிநீக்கு