தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 09, 2016

பத்ரா



“ரவி!வாழ்க்கையே ரொம்பப் போரடிக்கிறதுடா.ஒரு திரில்லே இல்லை.தினம் காலேஜ்,ரூம்,டீன் இப்படி எதுவுமே சுவாரஸ்யமில்லை.” என்றான் ரகு.

“ நாம் மருத்துவ மாணவர்கள்.படிக்கும்போது அப்படித்தான் இருக்கும்.படிப்பு முடிந்து டாக்டர் ஆகிச் சம்பாதிக்கும்போது திரில் தானா வரும்.” இது ரவி 

“இருந்தாலும் ஏதாவது பண்ணணும்டா” என்று ரகு சொல்லும்போதே அந்த நாய் அவன் அருகில் வந்து வாலை ஆட்டியபடி நின்றது.

அது ஒரு தெரு நாய்.தெருமுனை டீக்கடையில் டீ குடிக்கும்போது அதற்கு பிஸ்கட் வாங்கிப்போடுவான் ரகு.

ரகுவின் முகம் பிரகாசமானது.”ஐடியா!” என்று உரக்கச் சொன்னான்.நாயைக் கையில் தூக்கினான்.ரவியையும் உடன் வரச் சொல்லி மாடியேறினான். போகும்போதே தன் திட்டத்தையும் கூறினான்அவன் மொட்டை மாடியிலிருந்து நாயைக் கீழே போடும்போது ரவி அதை வீடியோ எடுக்க வேண்டும்.

மொட்டை மாடியை அடைந்தனர்.சுற்றுப்புறச்சுவரின் அருகில் சென்று நாயைத் தூக்கியவாறு நின்றான் ரகு”டேய்,சரியான கோணத்தைப் பார்த்துக்கோ.நான் நாயைக் கீழே போடுவதை அழகாகப் படம் பிடிக்க வேண்டும்”

ரவி காமிராவை சரியான கோணத்தில் வைக்க முயற்சி செய்தான்”முழுவதும்  வரவில்லையே” என்றான்.

ரகு இரு என்று சொல்லி யோசித்தான்.பின் சொன்னான்”நான் சுவற்றின் மீது ஏறி நின்று நாயை வீசுகிறேன் .பிரமாதமாக இருக்கும்.பார்ப்பவர்களும் ரசிப்பாங்க.நான் சுவர் மீது ஏறிய பின் நாயைக் கொடு”

நாய் கை மாறியது

ரகு சுவற்றின் மீதேறி நின்று  கொண்டான்

“கொடு”

ரவி நாயைக் கொடுத்தான்.அந்தநேரத்தில் ஆபத்தை உணர்ந்த நாய், ரகு பிடிக்கும்போது துள்ளியது.அதில் நில குலைந்த ரகு தலை குப்புறக் கீழே விழுந்தான்.

தப்பி ஓடிக் கீழே இறங்கிய நாய்  ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ரகுவைச் சுற்றிச் சுற்றி வந்துச் சோகமாக ஊளையிட்டது














ர்

21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உண்மையில் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் ஐயா
      த.ம.+ 1

      நீக்கு
  2. ஒரு நிகழ்வை சிறுகதையாக வடிக்க எல்லோராலும் முடியாது. தாங்கள் அதை வெகு நேர்த்தியாக வாசகர்கள் விரும்பும் வண்ணம் தந்திருக்கிறீர்கள். முடிவு அபாரம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. பத்ரா.... நிகழ்வினை கதையாக்கி விட்டீர்களா?

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. கற்பனையே என்றாலும் இப்படி நடந்திருந்தால் நல்ல முடிவாகவே இருந்து இருக்கும். பாவம் பத்ரா. இப்போதும் அந்த பத்ரா இந்த கயவர்களைக் கண்டால் நன்றியுணர்வுடன் வாலை ஆட்டும் என்பதை முத்தாய்ப்பாக சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. இப்படி நானும் நிறைய பேருக்கு மனசுக்குள் தண்டனை கொடுத்த்து திருப்தி கொள்வேன்!

    கீழே விழுந்து கிடந்த அவனைச் சுற்றி வந்து வாலை ஆட்டியது அந்த நாய் என்றும் முடிக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருங்கியவரின் இறப்பு நாய்க்குப் புரியும்.அதனல்ல் அடைந்த சோகத்தில் அது சுற்றி வந்து ஊளை இடுகிறது.வாலை ஆட்டுவதற்கும் மேலே இது!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  8. நல்ல தண்டணை கிடைத்து விட்டது அவனுக்கு!

    பதிலளிநீக்கு
  9. ஐயோ அந்த நிகழ்வினைக் குறித்து நாங்கள் அடைந்த சோகம்...திட்டித் தீர்த்தேன் சார். என்னால் காணொளி எல்லாம் பார்க்கத் தெம்பு இல்லை....அவன் கீழே விருந்திருக்க வேண்டும் என்று மனதில் நினைத்ததை நீங்கள் இங்கு சொல்லிவிட்டீர்கள். அருமை சார்...நல்ல தண்டனை இப்படியேனும் கொடுத்து மகிழ்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்...வேறு என்ன செய்ய

    கீதா

    பதிலளிநீக்கு