தொடரும் தோழர்கள்

செவ்வாய், மார்ச் 01, 2016

கற்பூரம் நாறுமோ? இன்னும் ஒரு முன்னோட்டம்!



செல்வி!

என்னம்மா?

பக்கத்து வீட்டுல அந்தம்மா,அய்யா எல்லாம் வெளியூர் போயிருக்காங்க.அந்தத் தம்பி சீனு தனியா இருக்கு;அவனுக்குக் காலையில டிபன்,காபி நான் குடுக்கறேன்னு அந்தம்மா கிட்ட சொல்லியிருக்கேன்.போய் அவன்கிட்ட சொல்லிட்டு வா.

கதவு திறந்துதான் இருந்தது.மணி அடிக்கலாமா என யோசித்தாள்.அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்றாள்.கூடத்தில் யாருமில்லை.

”சீனு” கூப்பிட்டாள்

உள்ளிருந்து வெளியே வந்தான் சீனு

அப்போதுதான் உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு வந்தான்.

அவனுக்கு முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது

ஹப்பா!அவளுக்கு மிகவும் பிடித்த மணம்.

அவள் அப்பாவிடமும் இதே மணம்தான் வீசும்.

அவளுக்கு மிகவும் பிடிக்கும்

ஆனால் அவள் அம்மாவுக்குப் பிடிக்காது

எந்த சோப்புப் போட்டுக் குளிச்சாலும் இந்தக் கத்தாழை நாத்தம் உங்களை விட்டுப் போகாது என்று சலித்துக் கொள்வாள்

இப்போது சீனுவிடம் அதே மணம்

இத்தனை நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்

அவளுக்கு அவள் அப்பாவின் சாயல்.அப்பாவின் மேனரிசம்,அப்பாவின்நடை உடை உள்ள எல்லாரையும் பிடிக்கும் 

இப்போது சீனு.

அவள் தோழி சுமதி கூட ஒரு  சொல்லியிருக்கிறாள்,அவளுக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இருப்பதாக!

இருந்து விட்டுப் போகட்டும்

அது அவளுக்குப் பிடித்திருக்கிறது

டிஸ்கி:இந்நாவலை எழுதி முடிக்க ஆண்டொன்று கூட ஆகலாம் எனத் தோன்றுகிறது.
ஹேவலாக் எல்லிஸின்  ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும். அநேகமாக “பப்பாளி மர உச்சியிலாடும் பச்சைத் தேவாங்கு “ வெளி வரும்போதுதான் இதுவும் வெளிி வருமோ!

19 கருத்துகள்:

  1. புரிய வில்லை!பித்தரே! இது, நீங்கள் எழுதப் போகும் நாவலா!?

    பதிலளிநீக்கு
  2. ட்ரெய்லர் ஸூப்பராக மணக்கின்றது ஐயா

    பதிலளிநீக்கு
  3. //இத்தனை நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்// //அது அவளுக்குப் பிடித்திருக்கிறது//

    வெரிகுட். முன்னோட்டம் மேல் முன்னோட்டம். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள்தான் நாவல் எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். .வாழ்த்துகள் ஸார். உடல் நலம் (கால்) தேவலாமா?

    பதிலளிநீக்கு
  5. முன்னோட்டமே நிறைய வருகிறதே.... நாவல் எத்தனை பதிவுகள் என இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜியின் அனுமானம்தான் சரியா

    பதிலளிநீக்கு
  7. நாவலின் முன்னோட்டமே.....அவளுக்குப் பிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு

  8. முன்னோட்டங்கள் நாவல் படிக்கும் ஆவலை தூண்டுகின்றன. காத்திருக்கிறேன் நாவலைப் படிக்க.

    பதிலளிநீக்கு
  9. வியர்வையை [[கத்தாழை நாற்றம்]] ரசிக்கும் பெண்ணா ? தல, ஏதும் உள்குத்து இருக்கோ ?

    பதிலளிநீக்கு
  10. முன்னோட்டம் பல சொல்லுகின்றது! //ஹேவலாக் எல்லிஸின் ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும்.// இதுவே உங்கள் நாவல் எலெக்ட்ரோ காம்ப்ளெக்ஸ் செக்ஸ் (எடிபஸ் காம்ப்ளெக்ஸ்) உளவியல் சார்ந்த கதை என்று சொல்லுகின்றது...ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  11. சார் உடல் நலம் சரியில்லாமல் இருந்தீர்களா அதான் வலைப்பக்கம் காணவில்லையா...நாங்களும் இடையில் கொஞ்சம் வேலைப்பளுவில் இருந்தோம்...இப்போது எப்படி இருக்கின்றீர்கள் சார்? தேவலாமா?

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்..இழையோடும் மன உணர்வுகளை உளவியலோடு பிணைத்து படைத்த கதை.எலக்ட்ராவும் ஓடிபஸ் காம்ப்லெக்சும்...ஆவலுடன் வாசிக்க காத்து இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா நலமா ? பதிவுகள் எழுதவில்லையே ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல்,மனம் இரண்டுமே சோர்ந்திருக்கின்றன கில்லர்ஜி! பார்க்கலாம். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  14. சார் உங்களிடம் அதே கேள்வியைக் கேட்க நினைத்து வந்தால்..நீங்கள் கில்லர்ஜிக்கு கொடுத்த பதிலைக் காண முடிந்தது. உங்களுக்க மனம் சோர்ந்திருக்கின்றது?!! இளமையுடன் எழுதிக் கொண்டிருந்தீர்களே! சீக்கிரம் தங்கள் மனம் சோர்விலிருந்து வெளிவர பிரார்த்திக்கின்றோம் சார்...வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  15. முன்னோட்டம் நாவலை படிக்க தூண்டுகிறது...

    அய்யா,

    கீதையில் சாரத்தை அறிந்தவர் நீங்கள்... இதுவும் மாறும் ! உங்களின் மனச்சோர்வு நீங்கி, மகிழ்ச்சி பெற வேண்டுகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு