தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 10, 2016

மரணமும் மகிழ்ச்சி தருமோ!

ஒரு மனிதன் வக்கீலின் அலுவலகத்துக்குப் போன் செய்தான்

அவன் சொத்து வழக்கு ஆண்டுக்கணக்காக இழுத்துக் கொண்டிருந்தது

வக்கீலுக்குப் பணம் கொடுத்து நொந்து போயிருந்தான்

அலுவலக வரவேற்புப் பெண் பேசினாள்.

”நான்  குமார்.வக்கீல் ராமனிடம் பேச வேண்டும் ”என்றான் அவன்

அவர் போன வாரம் இறந்து விட்டார் என்றாள்

தொடர்பைத் துண்டித்தான்

மீண்டும் மறுநாளும் போன் செய்து நான் குமார்.வக்கீல் ராமனிடம் பேச வேண்டும் என்றான்

நேற்றே சொன்னேனே அவர் போன வாரம் இறந்து விட்டார் என்று என்றாள்

மறுநாளும் போன் செய்தான்”வக்கீல் ராமனிடம் பேச வேண்டும்”


கோபமான பதில்”எத்தனை முறை சொல்வது;அவர் இறந்து விட்டார் என்று”

அவன் சொன்னான்”எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது!”

(இது ஒரு மெருகூட்டப்பட்ட ஆங்கில நகைச்சுவை)

27 கருத்துகள்:

  1. சாவிலும் நல்ல சாவு என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
  2. தான் செத்த செய்தியைக் கேட்கக் கேட்க க்ளையண்ட் ஒருத்தரை மீண்டும் மீண்டும் மகிழ்விக்க முடிகிறது என்றால், மறைந்ததாகச் சொல்லப்படும் வக்கீல் ராமன் ஒரு பிரபல வக்கீலாக இருந்திருப்பார் போலத்தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. இறந்து போனவர் வாய்தா வக்கீல் போலிருக்கிறது. நகைச்சுவையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு நொந்துபோய் இருக்க வேண்டும் கட்சிக்காரர்!
      நன்றி ஐயா

      நீக்கு
  4. சொத்து வாங்க சம்பாதிக்க வேண்டிய பணத்தை வக்கீலுக்கு செலவு செய்தால், சொத்தும் வேண்டாம் கேசும் வேணாம் என்கிற மன நிலைக்கு சென்ற ஒருவனுக்கு இறப்பு செய்தி வக்கீலிடம் இருந்து தப்பித்தோம் என்கிற சந்தோஷம்....

    சிந்திக்க வைக்க ஒரு பதிவு!

    நேர்மறையாயும் எதிர் மறையாயும் சிந்திக்க வைத்த பதிவு!

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹஹ் பாவம் அவன்....கோவிந்தா கோவிந்தா ...இல்ல வக்கீல் போய் சேர்ந்த இடத்தைச் சொன்னோம்..ஹிஹி

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    அவ்வளவு சிறந்த வக்கீலா
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  7. சொத்தை இழந்தவர்
    செத்த வக்கீலின்
    செய்தி அறிந்து
    செம மகிழ்ச்சி அடைந்தது
    செம்மையாக பதிவாக்கியமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. ஹ ஹ ஹா

    இப்பொழுதெல்லாம் மிகக் கவனமாகவே உங்கள் பதிவினைப் படிக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    படித்து மகிழ்ந்தேன் ஐயா.த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு