தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 27, 2014

பால் எத்தனை பால்!



நேற்று தேசிய பால் தினம்.

இந்தியாவில் வெண்மைப் புரட்சி நடந்து பால்வளம் பெருகி விட்டது.

அதனால் ’பாலும் தேனும் பெருகி ஓடுதா நாம பொறந்த சீமையிலே’ என்று கேட்காதீர்கள்

ஒரு காலத்தில் ஆவினை மட்டுமே நம்பி இருந்தோம் மெட்ராசில்.

இப்போது ஆவின் மட்டுமல்ல,பல பெயர்களில் பால் எப்போதும் கிடைக்கிறது.சென்னையில்.

இப்போது பால் குடிக்கக் கூடாது என ஒரு இயக்கமே ஏற்பட்டிருக்கிறது.

பால் கன்றுகளுக்குத்தான்,மனிதர்களுக்கல்ல என்றும் முழக்கங்கள்.

சோயா பால்,பாதாம் பால் என மாற்று சொல்கிறார்கள்.

லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் அவற்றை நாட வேண்டியதுதான்

ஆனால் பால் கூடாது எனில் யாரும் வாங்காத நிலையில் மாடுகளே இல்லாமல் போய்விடாவா?

மாடு என்ற சொல்லுக்குப் பொருள்-செல்வம்.

வள்ளுவர் சொல்வார்-

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடல்ல மற்றை யவை”

அந்நாளிலும் கூட மாடுகளே ஒரு நாட்டின் செல்வமாகக் கருதப்பட்டன.

அண்டை நாட்டின் மீது போர் தொடுக்குமுன்,அந்நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவார்களாம்

அதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர்.

சாதாரணமாக எருமைப்பால்,பசும்பால் என்றே சொல்வார்கள்.

ஆனால் கோவை மாவட்டத்தில் பசும்பாலை மாட்டுப்பால் என்றெ சொல்வார்கள்!

ருசியான இந்தப்பாலை விட இன்னும் சுவையான மூன்று பால்கள் உண்டு

அவை வள்ளுவத்தின் அறத்துப்பால் ,பொருட்பால், காமத்துப்பால் என்பன.

பாலும் தேனும் கலந்தால் எப்படி இருக்கும்?

காதலியின் இதழ்த்தேன் போல் எனச் சொல்கிறார் வள்ளுவர்

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

 வாலெயிறு ஊறிய நீர்”

இங்கு ஆண்பால்,பெண்பால் பற்றிப் பேசப்படுகிறது!

சில பேர் பால் என்றே பெயர் வைத்துக்கொள்வார்கள்-paul-

அது ஒரு புனிதரின் பெயர்.

நம் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு பால் நன்கு தெரியும்-அமலா பால்-(விஜய்!)

ஆனால் குமரி மாவட்டத்தில் இப்பெயரை பவுல் என்றே உச்சரிக்கிறார்கள்.

இன்று பால்காரர் பால் போட மறந்து விட்டார்.

வெளியே சென்று வாங்கி வர வேண்டும்!

காபிக்கு வேண்டுமே!

7 கருத்துகள்:

  1. பால்காரன் பால் மறந்து விட்டார். அதைக் காரணமா வைத்து நீங்க பதிவு போட்டுட்டீங்க. "டீக்கு பாலில்லாத பொது சிறிது பதிவுக்கும் ஈயப்படும்" என்று சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  2. தேசிய பால் தினம் பற்றி எழுதினீர்களே. அந்த தினம் யாருடைய பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது என்பதையும் எழுதியிருக்கலாம். இந்தியாவில் பால் உற்பத்தியை பெருக்க உதவிய ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படும் திரு வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதியன்று தேசிய பால் தினமாக அமுல் நிறுவனம் கொண்டாடியது.

    பதிலளிநீக்கு
  3. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    கூடுதல் தகவல் தந்த நடன சபாபதி அவர்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பால் தமிழப்பால்
    எனும் நினைப்பால்
    இதழ் துடிப்பால்
    அதன் சிரிப்பால்
    சுவை அறிந்தேன்

    பால் மனம்பால்
    என்ற மதிப்பால்
    தந்த அழைப்பால்
    உடல் அணைப்பால்
    சுகம் தெரிந்தேன்

    பாடல் நினைவுக்கு வருகிறது!

    :))))))))))

    பதிலளிநீக்கு
  5. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !இப்போ என்னுடைய செல்லத்
    தாத்தா லொள்ளுத் தாத்தா எந்தப் பாலைப் பற்றி அறியத் தரும் நோக்குடன்
    இன்றைய பகிர்வைத் தந்தார் ?........:))))))))))))எல்லாப் பாலும் அடங்கிய இன்றைய
    பகிர்வு சூப்பர் !வாழ்த்துக்கள் தாத்தா .

    பதிலளிநீக்கு
  6. பாலை வைத்து ஓர் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு