தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 07, 2014

வாலிப,வயோதிக அன்பர்களே!



வாலிப வயதில் சிலவற்றில் நாட்டம்.

வயோதிகத்தில் சிலவற்றில் நாட்டம்.

வயதுக்கேற்ற செயல்கள் அவசியம் தேவைதான்.

எதுவுமே அதிகமானால்தான் பிரச்சினையெல்லாம்.

சிறுவன் வயதுக்கு மீறிய செயலிலோ,பேச்சிலோ ஈடுபட்டால் இந்த வயசிலேயே இப்படின்னா பெரியவனானப்புறம் அவ்வளவுதான் என்பர்.

வயதானவர் இளைஞன் போல் நடந்தால் இந்த வயசில பெருசு போடற ஆட்டத்தைப் பாரு என்பர்.

எனவே அந்தந்த வயதில் அந்தந்த வயதுக்கேற்ற செயல்களில் ஈடுபட வேண்டும்

சில செயல்கள்.சிறுவர்களுக்கு,சில இளைஞர்களுக்கு,சில முதியோருக்கு மறுக்கப்பட்டவை.

ஆனால் எல்லா வயதினரும் அச்சமின்றி ஈடுபடக்கூடிய சில விஷயங்கள் உண்டு.

ஈடுபடுவதில் தயக்கம் இருக்கலாம்;கூச்சம் இருக்கலாம்;ஆனால் அதை எவரும் பழித்துப்பேச முடியாது.

அப்படிப்பட்ட ஒன்றுதான் ஆன்மீகம்!

ஆன்மீகச் சிந்தனைகள் ,நாட்டம் ஆன்மீகம் சார்ந்த செயல்க்ள்  எந்த வயதிலும் உகந்தவையே.

எனக்கு இளமையிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்ட்து.

சென்னைக் கல்லூரிக்காலத்தில் தேர்வு நேரமாக இருப்பினும்,வீனஸ் காலனியில் நடக்கும் வாரியார் தீட்சிதர் ஆகியோரின் பேருரைகளுக்கு அவசியம் செல்வேன்.

இன்னொன்றும் இங்கு சொல்லியாக வேண்டும்.

பக்தி.

கபாலி கோவில் என்னைப் பெரிதும் கவர்ந்த்து.

ஒவ்வொரு வெள்ளியும்கோவிலுக்குச் சென்று அம்மன் தரினமும்,அனுக்கிரகமும் தவிர்க்க முடியாதவை ஆயின!!—(இந்த வரியைக் குறிப்பிட்டு எழுதப்படும் பின்னூட்டங்கள் நீக்கப்படும்!)

ஆனால் சிறு வயதிலேயே அளவில்லா ஆன்மிக நாட்டம் ஆபத்தானது.

ஒன்று ஆதி சங்கரர் ஆகலாம்.

இல்லையேல் நித்தியானந்தா ஆகலாம்!

இவைதாம் எல்லைகள்.

ஆன்மீகம் என்பதே ஏதோ அருவருக்கத் தக்க பொருள் போல் சிலர் பார்க்கிறார்கள்

சில பயப்படுகிறார்கள்.

சில வெட்கப்படுகிறார்கள்.

ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை நிலை.

வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நீங்கள் தேடிப் போகாவிடினும் ஒரு கால கட்டத்தில் தானே தேடி வரும்

அதனால்தான்……நாத்திகனும் ஒரு நாள் ஆத்திகனாகிறான்.

தேடுங்கள்;பற்றுங்கள்;பற்று விடுங்கள்;பரமன் அருள் பெறுங்கள்.

இல்லையேல் ”சும்மா” இருங்கள்.

அதுவே அனுபூதி நிலை!

20 கருத்துகள்:

  1. //ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை நிலை.//
    //நாத்திகனும் ஒரு நாள் ஆத்திகனாகிறான்.//

    சத்தியமான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  2. நான் “சும்மா“ வே இருந்துவிடுகிறேன் ஐயா.

    அதுவே எனக்கு அனுபூதி நிலை!

    (அனுபூதி என்பது தான் கண்டு அறிந்ததைப் பிறருக்குச் சொல்ல இயலாத அனுபவம், அறிவு தானே.....)
    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. மிகவும் சிரமமான விசயம் : ”சும்மா” இருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. மற்றவர் மனதை துன்புறுத்தாதவரை மனம் விரும்பியதை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை,

    பதிலளிநீக்கு
  6. சும்மா இருப்பதா? உடலாலா? மனதாலா? முடியுமா ஸார்?

    :)))

    பதிலளிநீக்கு
  7. மிகச் சிறப்பான விஷயத்தை வெகு சுலபமான பதிவாக ஆக்கியிருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமயான கருத்து !ஆன்மீகத்தில் உண்மையான நாட்டம் பிறக்குமானால்
    நாம் எடுத்த இப் பிறவியானது புனிதமடைந்து விடும் இதற்கு மேல் எதுவும் இல்லை
    என்று உணரும் தன்மை தானாகவே வந்து விடும் .இதுவே சிறந்த பாதை !இதில்
    தாங்களும் வெற்றி காண இறைவனருள் கிட்டட்டும் ஐயா .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  9. எதுவுமே அதிகமானால்தான் பிரச்சினையெல்லாம் இது ஒன்றே போதும்! வாழ்கை தடையின்றி ஓடும்! நன்று! நன்றி பித்தரே!

    பதிலளிநீக்கு