தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 06, 2014

சம்பவாமி யுகே யுகே!




தர்மத்தைச் சொல்ல வந்தோர்

தடியோடு காட்சி தாரார்!

 உண்மைதான் ஒப்புக் கொள்வேன்.

காலங்கள் மாறும்போது

தர்மத்தின் விதிகள் மாறும்!

அதர்மமே தர்மாய் மாறும்

அலங்கோலக் காலம் எல்லாம்

தர்ம்மே அதர்மாகி

அயுதம் எடுக்கத்தான் வேண்டும்.

போரினை வெறுக்கச் சொல்லி

போர்க்களத்தில் உபதேசம்

ஒருபோதும் பயன் தராது.

அனைவரும் அசோகனல்ல!

அதர்மத்தை அழிப்பதற்கும்

தர்மத்தைக் காப்பதற்கும்

அவதாரம் எடுத்து வந்தால்

அவனுக்கும் ஆயுதம் தேவை

சக்கரமாய்,வில்லாய்,நகமாய்…..

ஆயுதமின்றி வந்தால்

அதர்மத்தை அழிப்பதெங்கே?








18 கருத்துகள்:

  1. //காலங்கள் மாறும்போது

    தர்மத்தின் விதிகள் மாறும்!//

    அதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எந்த விதிகளும் தற்போதைய நிலையில் நிரந்தரம் அல்ல. தங்களின் கருத்துமிக்க கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் பித்தன் ஐயா.

    காந்திஜியும் அகிம்சையை ஆயுதமாக எடுத்துக்கொண்டார்.

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    அருமையான கருத்தைஇரசிக்கும் படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அன்பாலான ஆயுதங்களும் அஹிம்சையும் அடிபட்டு அர்த்தமிழந்து போயின போலும்!

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் அசோகனல்ல!

    அதர்மத்தை அழிப்பதற்கும்

    தர்மத்தைக் காப்பதற்கும்

    மிகச் சிறப்பான கவிதை ஐயா...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சரியான கருத்தைச் சொன்ன எங்கள் செல்லத் தாத்தாவிற்கு
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !தொடர்ந்தும் எழுதுங்கள்
    தங்களின் இனிய நற் பகிர்வு காணும் போது உள்ளம் மகிழ்வு பெறும் .

    பதிலளிநீக்கு
  7. அருமை ஐயா! ஆனால் ஒன்று. அஹிம்சை கொள்கையிலே என்றும் மனம் தளர்ந்து விடக் கூடாது.

    பதிலளிநீக்கு