தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 31, 2014

காதலுக்கு எல்லையில்லை!



சாவித்ரி!ரொம்பப் பசிக்கறதுடி.இன்னிக்கு எங்கேயாவது வெளில போய்ச் சாப்பிட்டுட்டு வரலாம்.ஏன்ன” பத்மனாபன் மனைவியிடம் கேட்டார்.

அவரே தொடர்ந்தார்” நேரு பஜார்ல புதுசாத் தெறந்திருக்கானே ஒரு சைனீஸ் ஓட்டல்.ரொம்ப நன்னாருக்காம்.நீயும் சைனீஸ் சாப்பிட்டதே இல்லையே?இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு அங்க போய்ச் சாப்பிடலாம் என்ன சொல்ற?”

அவள் என்ன சொல்லப் போகிறாள்?என்றுமே கணவன் சொல்வதுதானே அவளுக்கு வேத வாக்கு.என்று அவர் சொன்னதை மறுத்துப் பேசியிருக்கிறாள்.இன்று மறுப்பதற்கு.அவரும் என்றும் அவளிடம் அபிப்பிராயம் கேட்காமல் எதையும் செய்ததில்லை .ஆனால் மாற்றுக் கருத்து எதுவும் அவளிடமிருந்து வெளிவராத நிலையில்,அவரது முடிவே,என்றும் கருத்தொருமித்த முடிவாக இருந்திருக்கிறது.

பத்மனாபன் வேட்டியை மாற்றிக்கொண்டார்.தனது ஸில்க் ஜிப்பாவை அணிந்து கொண்டார்; சாவித்திரிக்கு மிகவும் பிடித்த உடை.பர்சை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டார்.வாக்கிங் ஸ்டிக்கையும் எடுத்துக் கொண்டார்.சாவித்திரியுடன் புறப்பட்டார்.

நடந்து போகும் தூரம்தான் ஓட்டல்.கொஞ்சம் அதிக தூரம் ஆனாலும் ரிக்சா வைத்துக் கொண்டு போக எப்போதுமே சாவித்திரிக்குப் பிடிக்காது’எதற்கு அனாவசியச் செலவு என்பாள்,இந்த ஒரு விஷயத்தில்தான் அவள் தனது எண்ணத்தை வெளியிடுவாள்.அவரும் ஏற்றுக்கொள்வார். இப்போதும் நடைதான்.

ஓட்டல் வந்தது.(ஓட்டல் எப்படி ஐயா வரும்?அவர் ஓட்டலை அடைந்தார் என்று சொல்லும்).

ஒரு மேசையின் முன் சென்று அமர்ந்தார்.தன் கையில் கொண்டு வந்திருந்த அதைக் கைக் குட்டையால் துடைத்துவிட்டு எதிரே வைத்தார்.பணியாள் வந்தான்.கொஞ்சம் வினோதமாக அவரைப் பார்த்தான்.மெனு அட்டையைக் கொடுத்தான்,அவர் அதைப்பார்க்கவே இல்லை.

”வெஜ் நூடுல்ஸ்”

அவன் போனபின் சொன்னார் “சாவித்திரி உனக்கு இது பிடிக்கும் என்றே நினைக்கிறேன்”

நூடுல்ஸ் வந்தது;சாஸ் ஊற்றிக் கொண்டார் .சாப்பிடத் துவங்கினார்,ஒரு வாய் சாப்பிட்டதும் அன்புடன் கேட்டார்”சாவித்திரி நன்னாருக்கா?”

பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த இணையில் கணவன்”ஊர்மி!அங்கே பார் அவரை.தனக்கு எதிரில் ஒரு படத்தை வைத்துக்கொண்டு ஏதோ பேசியபடியே சாப்பிடுகிறார்.அவர் மனைவியின் படமாக இருக்குமோ?”


ஊர்மி என்றழைக்கப்பட்ட அந்தப் பெண் பார்த்தாள்—பதம்னாபனின் முகத்தில்,பார்வையில் தெரிந்த அன்பை,இழையோடும் துயரை.


பெண்ணல்லவா? கண்களில் கண்ணீர் பெருகியது.


(-- A photo of a California widower eating dinner at a restaurant with a picture of his late wife has gone viral.
A fellow diner at an In-N-Out Burger in the Bay Area tweeted a picture of an elderly man after spotting the framed photograph on the table in front of him.-----from google +)
(எண்பது வயதைக்கடந்தபின்னும்,மறைந்த தன் மனைவியின் நினைவைப் போற்றிப் பாராட்டி வாழும் புலவர் ஐயா அவர்களின் நினைவு வருவது இயற்கைதானே?)

24 கருத்துகள்:

  1. பதம்னாபனின் முகத்தில்,பார்வையில் தெரிந்த அன்பை,இழையோடும் துயரை.
    பெண்ணல்லவா? கண்களில் கண்ணீர் பெருகியது.//

    நேயம் மலரும் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னல் வேக வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!

      நீக்கு
  2. நெகிழ்ந்து போனேன் ... அய்யா நலமா தாங்கள் , நெடுங்காலம் ஆகிவிட்டது வலையுலகம் வந்து ...

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா. கற்பனைக் கதை என்றுதான் நினைத்தேன் கடைசியில் படத்தை பார்க்கும்வரை

    பதிலளிநீக்கு
  4. அசாதாரண நிகழ்வுகளை கதைகளாக மாற்றுவது தானே தங்களின் பாணி. அந்த வகையில் மனதை தொடும் ஒரு நிகழ்வை கண்ணீர் வரவழைக்கும் வகையில் கதையாக படைத்துவிட்டீர்கள். தாங்கள் கூறுவதுபோல் புலவர் ஐயா அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான ஒரு நிகழ்வு;எனவே கதையாக்க விழைந்தது மனசு.
      நன்றி ஐயா

      நீக்கு
  5. அய்யாவின் பார்வையில் தெரிந்த அன்பை,இழையோடும் துயரை நீங்கள் பார்த்து வடித்த கதையை ரசித்தேன் !
    த ம

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் பித்தனையா! உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களைக் கொண்டு, வலைவழி வரும் உறவுகளும், பெற்ற தாயினும் மேலாக என்னை நாளும் பாது காக்கும் என் இளைய மகளும் தான் நான் வாழ காரணமாகும் கவிதையின் வழியாக என்னைக் கைபிடித்தவள் இன்றும் என்னோடு கவிதையாக வாழ்கிறாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்ச்சி!தங்கள் நலனுக்காக இறைவனை வேண்டுகிறேன்.
      நன்றி

      நீக்கு
  7. செய்திகளை உயிரோட்டமுள்ள கதையாக ஆக்குவது உங்களுக்கு கைவந்த கலை.
    உருக்கமான கதை ஐயா! நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  8. கற்பனைனு நினைச்சேன். நெகிழச்சியான நிகழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. கதையென்று படித்து வந்தால் கடைசியில் மிகவும் நெகிழ்ச்சி....

    அவ்வப்போது, வலைப்பக்கத்தில் எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு