தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 10, 2014

அங்கொன்றும் இங்கொன்றும்!



ஒரு மனிதன் முகம் போல் மற்றர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வேறுபடுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்;கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு;முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப் படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.


மனிதர்களின் நடை பற்றிப் பேசும் போது,நடிகர்திலகத்தின் நடை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.பொதுவாக நடிகர்கள் ஏற்ற பாத்திரத்துக்கேற்ப ஒப்பனை,உடை,முக பாவங்களை மாற்றுவார்கள்.ஆனால் பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி.காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்- சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.


அவரது நடிப்பு மட்டுமல்ல;வசனம் பேசும்திறமையும் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.கருணாநிதியின் அடுக்கு மொழி வசனங்களை அழகு குறையாமல் பாவத்துடன் அவர் பேசியது போல் எவராலும் பேச் முடியாது.தமிழைத் தமிழாக உச்சரித்தவர் அவர்.

இன்று வானொலி,தொலைக்காட்சி ஆகியவற்ரில் பலர் பேசும் தமிழைக் கேட்கும்போது, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றே சொல்லத் தோன்றுகிறது.தமிழின் சிறப்பான ழகரம் வருவதில்லை .பழம் என்பது பலம் என்றோ பளம் என்றோ சொல்லப்படுகிறது.லகர ளகரம்,னகர ணகரம் இவற்றில் ஒரே குழப்பம்.மனம் என்பது ,மணமாகிறது.கலை என்பது களையாகிறது. நாராசமான இந்தக்களைகளை(களைதான் கலையல்ல!) நீக்கினால்தான் தமிழ் தேனாகப் பாயும் காதில்;இல்லையேல் உருக்கிய ஈயம்தான்.

தமிழ் என்றதும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய என் சித்தி நினைவு வருகிறது .தமிழில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த  அவர்கள்ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு"தமிழர் வாழ்வில் தாலாட்டும்,ஒப்பாரியும்"! இதற்காகக் கிராமம்,கிராமமாய்ச் சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து,'டேப் ரிகார்டரில் 'அவர்கள் பாடும் தாலாட்டு/ஒப்பாரியைப் பதிவு செய்து தமிழர் வாழ்வோடு இணைந்த அந்தக் கலையை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சித்தி என்றால் என் தாயாரின் தங்கை.அப்பாவின் தம்பியின் மனைவியும் சித்திதான். இன்னொரு விதமான சித்தியும் உண்டு.பொதுவாகவே இந்த சித்தி கதைகளிலும், நாடகங்களிலும் கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப் படுகிறார்.ஒரு குழந்தையின் தாய் இறந்தபின் அத்தந்தை மறுமணம் செய்துகொண்டால் வரும் புதிய உறவே இந்த சித்தி.ஆனால் ஒரு தமிழ்ப் படத்தில் சித்தி மிக நல்லவராகக் காட்டப்பட்டார்.அதுதான் கே.எஸ்.ஜி.அவர்களின் 'சித்தி' திரைப் படம்.நிறைய பாராட்டு பெற்ற திரைப் படம்.தமிழ்ப் படங்கள் பற்றிய தன் கட்டுரையில், ஜெயகாந்தன் அவர்கள் முன்பு ஒரு முறை குறிப்பிட்டார் "என்னதான் முடிவு பார்த்தபோது ஏது இவர் கூட(கே.எஸ்.ஜி) உருப்பட்டு விடுவார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.ஆனால் அந்த நம்பிக்கை சித்தி வந்தபின் தகர்ந்து விட்டது"என்று.

கே.எஸ். ஜியின் படங்களில் பாத்திரங்கள் பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஒரே மாதிரியான ஏற்ற இறக்கத்துடன் அழுத்தமாகப் பேசுவார்கள்.திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதே கருத்தில் கொள்ளப்படவில்லை.மணிரத்தினத்தின் தளபதி திரைப்பத்தில் குற்றத்தை வேறு ஒருவர் ஒத்துக் கொள்ள,சூர்யா விடுதலையானதும், அவரைப் பார்த்துக் கேட்பார்”ஏன்/”அவர் பதில் சொல்வார்”தேவா”.இதே காட்சியை கேஎஸ்ஜி பாணியில் எடுத்தால் எப்படியிருக்கும்? !அதற்காக ஒரு தனிப் பதிவே எழுதலாம்!

அவரவக்கென்று ஒரு  தனி பாணி,அவரவர் எழுத்திலும் ஒரு தனி நடை.இந்த நடையிலும் எத்தனை வேறுபாடு?

13 கருத்துகள்:

  1. வணக்கம்,ஐயா!நலமா?பகிர்வு நன்று.உங்கள் நடை(எழுத்து)கூட வேறு தான்!

    பதிலளிநீக்கு
  2. மாறு பட்ட முகங்கள், மாறு பட்ட நடைகள், மாறு பட்ட குணங்கள் இப்படி பல உண்டே!

    அவரவக்கென்று ஒரு தனி பாணி,அவரவர் எழுத்திலும் ஒரு தனி நடை.! இருத்தல் தானே
    உண்மை! பித்தனைப்போல் என்னால் எழுத முடியுமா!

    பதிலளிநீக்கு
  3. வழமையாக எல்லோரும் சொல்வதுதான். ஒரே உடம்பில் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு விதம்தானே
    உண்மையிலே சிவாஜி சிறந்த நடிகர் என்பதற்கு நானும் உரமிடுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ......என் மனதைக் கவர்ந்த சிறந்த நடிகரைத் தேர்வு செய்து தாங்கள் இன்று
    படைத்த படைப்பும் ஒரு தனி நடை தான்!.. தாத்துக் குட்டி தங்களுக்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர் திலகத்தை ரசிக்காதவர் யார்?

      நன்றி அம்பாளடியாள்

      நீக்கு
  5. எந்த தலைப்பிலும் எந்த பொருளிலும் சிறப்பாக எழுதுவது உங்கள் பாணி, திரு யோகா அவர்களும், புலவர் ஐயா அவர்களும் சொன்னது போல தங்களுடைய நடையும் தனித்துவம் உள்ளதுதான். இனி தொடர்ந்து பதிவிடுவீர்கள் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    ஒரு கருப்பொருள்பற்றி சொல்லும் போது.. தாங்கள்சொல்லும்விதமும் எழுத்தும் ஒரு வித்தியாசம் ஐயா.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் எடுத்துக்காட்டு மூலம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நடை பற்றிய உங்களின் கருத்துக்களை உங்கள் நடையில் நன்கு ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி... ஒரு நடை...
    உங்கள் நடை வெகுவாக ரசிக்க வைத்தது ஐயா...

    பதிலளிநீக்கு