அந்த வீட்டுப் பெரியவர் வாழ்வின் கடைசிக்கட்டத்தில் இருந்தார்.மருத்துவர்கள் கூறி விட்டனர்,இன்றிரவோ, நாளையோ,என்று.பெரியவரின் மகன்கள்,மகள்கள்,மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்து விட்டனர்.வீடு முழுவதும் சோகம் நிறைந்திருந்தது.தவிர்க்க முடியாத ஒரு முடிவை எதிர் நோக்கிஅனைவரும் காத்திருந்தனர்.
மறு நாள் விடிந்தது.பெரியவர் வாழ்வும் முடிந்தது.வீட்டிலிருந்து உரத்த அழு குரல்கள் எழுந்தன.ஓலமும் ஒப்பாரியும் வெளிப்பட்டது.இறுதி யாத்திரைக்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.சில காரணங்களால்எற்பாடுகள் தாமதமாகின.அந்த வீதியில் வசிக்கும் ஒரு முக்கிய நபர் பொறுமை இழந்தவராக விசாரித்துக் கொண்டிருந்தார்."நேரமாகுதில்லே. பொணத்த எப்ப எடுக்கப்போறாங்க?"இதே நபர் முன் தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்"முருகேசன்(பெரியவரின் பெயர்) எப்படிப்பா இருக்கான்.ரொம்ப நல்லவன்."
சிறிது நேரம் சென்று இறுதி யாத்திரை தொடங்கியது.ஆண்கள் சுடுகாட்டுக்குச் சென்றனர்.உடல் தகனம் செய்யப்பட்டது.அனைவரும் குளித்து வீடு திரும்பினர்.வீட்டில் இருந்த பெண்கள் குளித்து முடித்தனர்.வீடு கழுவி விடப்பட்டது.
மாலை வந்தது.மெள்ள மெள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.சூழ்நிலையை இயல்பாக்க யாரோ தொலைக்காட்சிப்பெட்டியை உயிர்ப்பித்தனர்.ஆரம்பமாயிற்று அவரவர் இயல்பு வாழ்க்கை.
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே."--(திருமூலர்)
(உடல் விழுந்தபின் ஊரார் எல்லோரும் ஒன்று கூடி,ஓலமிட்டு அழுது,அதுவரையிருந்த பேரை மாற்றி,பிணம் என்று பேர் சூட்டி,சூரைமுள் நிறைந்த சுடுகாட்டிலே கொண்டு
போய்க் கொளுத்தி விட்டு,நீராடி,இவ்வண்ணம் ஒருவரிருந்தார் என்ற நினைப்பும் நீங்கினார்கள்.)
( என் மற்ற பதிவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது-சிறு சேர்க்கையுடன்)
நன்றாக இருக்கிறது. அப்படியே பட்டினத்தார் போன்ற சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி தாமோதர் சந்துரு
பதிலளிநீக்குமுக்கியமான திருமந்திரப்பாடல்களைப் பற்றி எழுதுவதற்கே ஒரு வாழ் நாள் போதாதே.இருந்தாலும் முடிந்தால் முயல்கிறேன்.
hard-hitting truth..perini neeki pinamenry peyarittu....well said..
பதிலளிநீக்குwww.whereicerebrate.com
@ mani
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மிக அருமை . ஒரு சிறு சம்பவம் மூலம் கூறிஇருக்கும் யுக்தி பாராட்டுக்குரியது . தொடரட்டும் உங்கள் பணி உங்கள் பாணியில். வாசுதேவன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வாசு அவர்களே.உங்களைப் போன்றோரின் ஆதரவுடன் என் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇறக்கும் வரை பெரியவர், இறந்த பின் பிணம்..
இளமை நில்லாது... யாக்கை நில்லாது,
பதிலளிநீக்குதொடர்ச்சியாக
யொசிக்க வைக்கும் பதிவு.
தங்களுக்கு எங்கள் வந்தனங்கள்..
ஏன் திரட்டிகளோடு இணைக்க வில்லை?
பதிலளிநீக்கு@பாரத்... பாரதி,
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.தமிழ்மணம்,திரட்டி இரண்டுக்கும் இணைப்புக் கொடுத்துள்ளேன்.பதிவு அதிக வாசகர்களைச் சென்றடைய வேண்டுமானால்,எல்லாத் திரட்டிகளிலும் இணைக்க வேண்டும் எனத் தெரிகிறது.முயல்கிறேன்.
நன்றி.
நிதர்சனத்தை அழகான பாடலோடு விளக்கியுள்ளீர்கள்..
பதிலளிநீக்கு@பயணமும் எண்ணங்களும்
பதிலளிநீக்குவ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
யாக்கை நிலையாமையை நன்றாக திருமந்திரம் பாடலுடன் விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!
பதிலளிநீக்கு//இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!//
பதிலளிநீக்குமிகச் சரியாகச் சொன்னீர்கள்.நன்றி நடனசபாபதி அவர்களே!
ஒரு மனிதனின் இறப்பு அவனது குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ எவ்வளவு தாக்கத்தை உண்டுபண்ணுகிறது என்பது அவன் வாழுகின்ற காலத்தில் குடும்பத்துக்கு அல்லது சமுதாயத்துக்கு அவனுடைய பங்களிப்பை பொறுத்தது. தன் பெண்டு,தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவை உண்டு தானுண்டென்போன் சின்னஞ்சிறு கடுகு போன்ற உள்ளம் கொண்டோன் என்ற பாடல் தான் நினைவிற்க்கு வருகிறது. ஒருவனை காண வாழ்வில் மூன்றுமுறை கூட்டம் வரும் பிறப்பு,கல்யாணம்,இறப்பு. பிறப்பில் வரும் கூட்டம் பெற்றோரை சார்ந்தது,மற்ற இரண்டும் அவனை சார்ந்தது.
பதிலளிநீக்குகூட்டம் கூடுவது குணத்தினால் அல்ல;பணத்தினால்;பதவியினால்;சமூகஅந்தஸ்தினால்.
பதிலளிநீக்குஆனால் யாராயினும்,அழுவதும், எரிப்பதும்(புதைப்பதும்),மறப்பதும் மாற்ற முடியாத வாழ்க்கை நியதி.
இதுவே வாழ்க்கை!
வருகைக்கும்,அழுத்தமான கருத்துக்கும் நன்றி.