அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான்.உணவுக்காக ஊருக்குள் செல்வது கூட குறைந்து போனது.அவனைத்தேடி அவன் இருப்பிடத்துக்கே உணவு வர ஆரம்பித்தது.மக்கள் அவன் தியானம் முடியும் வரை காத்திருந்து தங்கள் குறைகளை அவ்னிடம் சொல்ல ஆரம்பித்தனர்.அவனிடம் சொல்வதனாலேயே தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதாக நம்பினர்.அவனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவன் அருட்பார்வைக்காகக் காத்திருந்தது.அனைவரும் அவனுக்காகத் தின் பண்டங்களும்,பழங்களும் மற்ற உணவுப்பொருட்களும் கொண்டு வந்தனர்.அவன் அனைத்தையும் அங்கு வரும் அவர்களுக்கே பிரசாதமாகக் கொடுத்தான்.
ஒரு நாய் உணவுக்காக அங்கு வந்து அவன் தரும் உணவைச்சாப்பிட்டு விட்டு அங்கேயே கிடக்க ஆரம்பித்தது.என்றாவது அந்த நாய் எங்காவது சென்று விட்டு திரும்புவதற்கு நேரமானால் அவன் கவலைப்பட ஆரம்பித்தான்.அவனையும் அறியாமலே அந்த நாயின் மீது அன்பு அதிகமாயிற்று.ஒரு நாள் காலை அவன் கண் விழித்தபோது அந்த நாய் இறந்து கிடக்கக் கண்டான்.துக்கம் மேலிடக்கண்ணீர் பெருக்கினான்.சிறிது நேரம் கழித்து துக்கம் குறைய அவன் யோசித்தான்"ஏனிந்தத் துக்கம் ?எதற்காக அழுதேன்? யாருக்காக அழுதேன்?இதற்குக்காரணம் தேவையற்று நான் வைத்த ஆசை;பற்று.இதுவன்றோ மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்?இனி இறைவனை வேண்டும்போது கூட ஆசைகளை அவன் முன் வைத்து வேண்டக்கூடாது.”
அவன் ஞானியானான்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."---(திருமூலர்)
(பொருள்:எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள்.ஒருவன் எவ்வளவு ஆசையுடையவனோ அவ்வளவு துன்பங்கள் உறுவன்.அவன் ஆசையை எவ்வளவு விடுகின்றானோ அவ்வளவு இன்புறுவன்.ஆதலால்,ஈசனோடு வேண்டுவது எனினும் ஆசையின்றி,அவனை வழிபடுவதே அறிவுடமை ஆகும்.)
(எனது மற்ற பதிவிலிருந்து சில மாற்றங்களுடன் இறக்குமதி செய்யப் பட்டது)
@பிரியமுடன் பிரபு
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பதிவு. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக்கூடாது என நான் நினைக்கிறேன். நீங்கள்?
பதிலளிநீக்கு@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குஒன்றின் மீது ஆசை ஏற்படும்போது மனிதன் அதைப் பெறுவதற்கு எதுவும் செய்யத் தயாராகிறான்.அது தவறு செய்யத்தூண்டுகிறது.முடிவு துன்பம்.எதன் மீதும் விருப்பு ,வெறுப்பு இல்லாத ஒரு நிலை ஏற்படுமானால் சிக்கலே இல்லை !
கருத்துக்கு நன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குஒன்றின் மீது ஆசை ஏற்படும்போது மனிதன் அதைப் பெறுவதற்கு எதுவும் செய்யத் தயாராகிறான்.அது தவறு செய்யத்தூண்டுகிறது.முடிவு துன்பம்.எதன் மீதும் விருப்பு ,வெறுப்பு இல்லாத ஒரு நிலை ஏற்படுமானால் சிக்கலே இல்லை !
கருத்துக்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்கு@ THOPPITHOPPI
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான கரு. மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். திருமந்திரம் போன்ற நூல்களைப் படிக்கும் பொழுது 'எல்லாவற்றையும் அன்பவித்து விட்டு பிறகு சட்டி சுட்டதடா என்று சொல்கிறார்களே?' என்று தோன்றும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்குமகான் புத்தர் கூறியது . . ஆசையை அறவே ஒழி .. எவ்வித துன்பமும் அணுகாது என்பதை மிக எளிமையாக விளக்கியதிற்கு நன்றி வாசுதேவன்
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்களே,
பதிலளிநீக்குஅனுபவித்து முடித்த பின்னாவது,தெளிவு வந்தால் சரி-- அதிலேயே உழலாமல்.
கருத்துக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசு அவர்களே.
பதிலளிநீக்குஆசைப்படாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதே ஆசைதானே ஐயா.
பதிலளிநீக்குஆசைப்படாமல் இருப்பது என்பது ஒரு இயல்பாக மாற வேண்டும்.அதுவே ஒரு ஆசையாக இருக்கக் கூடாது!
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கு நன்றி,இனியவன் அவர்களே!