தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 28, 2010

பரல்கள்

பண்டித நேரு ஒரு முறை சொன்னார்.”இந்திய தொழில் நுட்பக் கழகங்கள் கல்வியின் கோவில்கள்; நாட்டை முன்னேறச் செய்வதற்கான சிறந்த திறமைகளை உருவாக்குகின்றன” என்று.ஆனால் அவர் சொல்லவில்ல எந்த நாட்டை என்று.ஏனென்றால்,அமெரிக்காவில் படிக்கும்,பணிபுரியும் இ.தொ.க. பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது,நேரு, நாடு என்று சொன்னது இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்றே எண்ணத்தோன்றுகிறது! இவ்வாறு சொன்னவர்,சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குனர் திரு.MS அனந்த் அவர்கள் ! சுடும் உண்மை!
நன்றி:இந்தியாவின் நேரங்கள்(டைம்ஸ் ஆஃப் இந்தியா!)
------------------------

நேற்று மாலை நாரதகானசபா செல்வதற்காகப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.மந்தைவெளியில் ஒரு கோவிலைப் பேருந்து கடக்கும்போது, ஒரு கோவில் வாசலில் ஒருகாட்சி!ஒரு புது வண்டி-ஸ்கார்ப்பியோ என்று நினைக்கிறேன்.அதற்குப் பூசை போடப்பட்டுக் கொண்டிருந்தது.சந்தனம் ,குங்குமம் இடப்பட்டு, பூச்சூட்டப்பட்டு, மங்களகரமாய் நின்று கொண்டிருந்தது வண்டி.சுற்றிலும் சிலர் நிற்கக் கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது-அதன் பானெட்டில்
ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு கொடி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடி.கட்சிக்காரர் யாரோ ஒருவர் தன் காருக்குப் பய பக்தியுடன் பூசை போட்டிருக்கிறார்!

இதை அவர்கள் தலைவர் பார்த்திருந்தால்,முரசொலியில் உடன் பிறப்பே என்று விளித்து ஒரு கடிதம் எழுதி,பக்தியுள்ள இந்துக்களின் மனதை வழக்கம் போல் புண்படுத்தியிருப்பார்.

எழுதட்டும்!எழுதட்டும்!
ஆனால் எதுவும் மாறாது! இந்த நாட்டில் மட்டுமல்ல!
அவர் வீட்டிலும்தான்.!

--------------------
குசேலர்.எம்.பி.ஏ.!
---------------
குசேலர்!
பெற்றது இருபத்தேழு
கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
பெற்றதோ பெருஞ்செல்வம்!

14 கருத்துகள்:

  1. கலைஞரின் பகுத்தறிவும்,கொள்கையும் மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டுவிட்டனர். துணைமுதல்வரின் சமீபத்திய ஒரு கருத்து அரசின் வருவாய் இழப்பை(ஸ்பெக்ட்ரம்)ஊழலாக கருதமுடியாதாம். அப்படியென்றால் அமைச்சரால் அரசுக்கு என்ன நன்மை,நட்டப்படுத்தவே ஒரு அமைச்சரா? வாழ்க ஜனநாயகம் !

    பதிலளிநீக்கு
  2. \\\இந்துக்களின் மனதை வழக்கம் போல் புண்படுத்தியிருப்பார்///
    ....மொதல்ல அவரை மஞ்சத் துண்டைக் கழட்டச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  3. இனியவன்,
    இதுதான் இவர்களின் ஜனநாயகம்!இது அவர்களின் ’மக்களா’ட்சி.
    நன்றி.
    சிவகுமாரன்,
    அது ’பகுத்தறிவுத்’துண்டுங்க;கழற்ற மாட்டார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வே.நடனசபாபதி அவர்களே,
    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வே.நடனசபாபதி அவர்களே,
    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜோதிஜி கூறியது...

    //தொடர்ந்து வருவேன்.//
    நன்றி ஜோதிஜி.

    பதிலளிநீக்கு
  7. அருமைங்க.... நாட்டு நடப்பை நல்லாவே சொல்லிப்போட்டிங்க
    வாழ்த்துக்கள் புத்தாண்டுக்கும் சேர்த்து .. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. காளிதாஸ் அவர்களே,
    வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. THOPPITHOPPI கூறியது...

    //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
    நன்றி.புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. 'இனிய'வனுக்கும்,'இனிய' புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு