தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

பரல்கள்



திருமணமான ஆண்களுக்கு இரு அறிவுரைகள்------
1)உங்கள் மனைவி விரும்பித் தேர்வு செய்யம் விஷயங்களைப் பற்றிக் கேலி செய்யாதீர்கள். நீங்களும் அவைகளில் ஒன்றுதான்!

2)நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விஷயங்கள் பற்றிப் பெருமைப் படாதீர்கள். உங்கள் மனைவியும் அவற்றில் ஒன்று.
..........................................................................

போட்டியின்றி வாழ்க்கையில்லை!
போட்டியென்பது நாம் சிறுவர்களாய் இருக்கும்போதே ஆரம்பமாகி விடுகிறது.

மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூத்தவர்களுடன் போட்டி.
இதற்குத்தான் என்றில்லை. ஒரு ஆசனத்தில் அமர்வது,டிவி. பார்ப்பது,ஒரு பொருளை முதலில் உபயோகிப்பது என்று எதிலும் போட்டி.

பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!

ஒரே ஒரு முறை,எட்டோ ,ஒன்பதோ படிக்கும்போது சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு எல்லைக் கோட்டை முதலாவதாகக் கடந்தேன்.ஆனால் பரிசு தரவில்லை!
...................ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!

......................................................................

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார்.பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர்,சில்லறை இல்லை,அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,நெல்லைக் காரர்,”பையக் கொடுங்க”.என்று சொல்லியிருக்கிறார்.,”ஏய்யா,நாந்தான் தரேன் என்று சொன்னேனே,உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட,பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.

பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.

”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய,பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”
என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது..

(கதம்ப மீ.ப)

9 கருத்துகள்:

  1. அருமை அருமை

    ஒரு சொல்..
    நடைமுறை வாழ்விலும்
    கவிதைத் தேரிலும்

    மிகவும் இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... சுவை... நகைச்சுவை ஐயா...

    தென் தமிழகத்தில் 'பைய' என்பது மெல்ல என்ற வார்த்தைக்கானதுதான்... எங்க மாவட்டத்திலும் எல்லாம் பைய வா... பையத் தரலாம்... என்றுதான் பேசுவோம்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  3. பதிவின் தொடக்கத்திலிருந்த பஞ்ச் மிக அருமை, சோலோ ரேஸ் நகைச்சுவை! பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல் என்பதை இன்று தான் அறிந்தேன், வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு புதிய செய்தி. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் இதுதான் முதல் முறையாக வாசிக்கின்றோம் ரசித்தோம் சார்...அதுவும் பைய வந்து .....

    பதிலளிநீக்கு