”எல்லாரும் சாப்பிட்டாச்சா?”
இல்லை இல்லை எனக் கோரஸ் குரல்கள்
”சாப்பிட்டு வந்தவர்கள் கையைத் தூக்குங்க”
எந்தக் கையும் உயரவில்லை
“பலே!இப்படித்தான் இருக்க வேண்டும்.ஆன்மீகச்
சொற்பொழிவைக்கேட்க வரும்போது வயிறு புடைக்க
சாப்பிட்டுவிட்டு வந்தால் தூக்கம்தான் வரும்.வள்ளுவர் சொன்னாரல்லவா. செவிக்குணவில்லாதபோது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று.அதுபோல நீங்கள்
எல்லாரும் செவிக்குணவு வேண்டும் என்பதால் சாப்பாட்டைத் தள்ளிப் போட்டு விட்டீர்கள்!”
அப்படி நினைக்க எனக்கு ஆசைதான்;ஆனால் நீங்கள் சாப்பிடாமல் வந்த காரணம் சொற் பொழிவுக்குப்
பின் மண்டபத்தில் இனிப்புடன் சாப்பாடு உண்டு
என்பது உங்களுக்குத் தெரியும்(சிரிப்பு).எனவே அதற்காக இவனோட பேச்சைக் கொஞ்ச
நேரம் சகித்துக் கொள்ளலாம் என்பாது உங்கள் எண்ணம்!(கூட்டத்தில் சிரிப்பு)
சாப்பிடாதவர்கள் இரண்டு விதம்.சாப்பிடுவதற்கு
இருந்தும் சாப்பாடு இறங்காதவர்கள். அதனால் சாப்பிடாதவர்கள்.பசியிருந்தும் சாப்பிட ஏதும்
இல்லாதவர்கள்.அதனால் சாப்பிடாதவர்கள்
எனவேதான் சாத்திரங்கள் சொல்லுகின்றன”தர்மம்
செய்”என்று.தானங்களிலே சிறந்தது அன்னதானம்
உங்களுக்கெல்லாம் ஒருவேண்டுகோள்.வேண்டிய
அளவு கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். உணவை
இலையில் மிச்சம் வைத்து வீணாக்காதீர்கள்.
தைத்திரிய உபநிடதம் சொல்கி
றது”அன்னம் ந பரிசக்ஷீத”ஏனேனில் எல்லா உயிர்களுக்கும் உணவு முக்கியம்.எல்லோரும் உணவால் ஆனவர்கள்.
றது”அன்னம் ந பரிசக்ஷீத”ஏனேனில் எல்லா உயிர்களுக்கும் உணவு முக்கியம்.எல்லோரும் உணவால் ஆனவர்கள்.
தர்மம் எப்படிச் செய்வது.அந்த அளவு எனக்கு
வசதி இல்லையே என்று சொல்லலாம்.
திருமூலர் சொல்கிறார்
“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே”
ஆம்!நமது சாப்பாட்டைப் பகிர்ந்துண்டால்
போதும்.அதுவே அறம்.
இந்த அடிப்படையில் தான் காஞ்சி மகாப் பெரியவர்கள் பிடி
அரிசித்திட்டம் கொண்டு வந்தார்கள்.
உணவு என்பது முக்கியமானது
இன்று தண்ணீரையும் காசு கொடுத்து
வாங்குகிறோம்.பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைத்தால் அம்மா தயவென்று
மகிழ்கிறோம்!(சிரிப்பு)
நாளை அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி
எடுத்துரைப்பேன்.சமையல்கூடத்திலிருந்து வரும் வாசனையை அனைவரும் நுகரத்தொடங்கி
விட்டீர்கள்.எனவே சாப்பிடச் செல்ல,உங்களைச் சாப்பிடச்சொல்ல வேண்டிய நேரம் வந்து
விட்டது.நாளை பார்ப்போம்.
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)
திருமூலர் சொல்கிறார்
பதிலளிநீக்கு“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே”
ஆம்!நமது சாப்பாட்டைப் பகிர்ந்துண்டால் போதும்.அதுவே அறம்.
இந்த அடிப்படையில் தான் காஞ்சி மகாப் பெரியவர்கள் பிடி அரிசித்திட்டம் கொண்டு வந்தார்கள்.//
அருமையான தகவல்களை அற்புதமான நடையில் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பித்தானந்தா = சென்னை + பித்தன் + ஆனந்தா ................. தானே ! :) மிக்க மகிழ்ச்சி.
தாத்தா நேரம் போதாமையால் ஒரு தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டுவிட்டுச் செல்கின்றேன் மீண்டும் வந்து சாவகாசமாக என் அன்புத் தாத்தாவின் ஆக்கங்களை வாசித்து மகிழ்வேன் ஒக்கே தாத்தா !
பதிலளிநீக்குநாலு நல்ல வார்த்தை காதில் விழணும்னா ரெண்டு வாய் சோறு சாப்பிடாதது....... தப்பே இல்லை!
பதிலளிநீக்குஹா...ஹா..ஹா..
திருமூலர் பாடலுடன் பதிவு அருமை.
அருமை ஐயா....
பதிலளிநீக்குஎதையும் பகிர்ந்து கொண்டால் அதுவே சிறப்பு...
ஸ்வாமி பித்தானந்தா நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறார் போல. இருப்பினும் அவரது அறிவுரையை எல்லோரும் ஏற்கலாம்.
பதிலளிநீக்கு