தொடரும் தோழர்கள்

சனி, மே 30, 2015

வயசுக்கு வந்தா....?!



”குமுதா!.இன்னைக்குத்தேதி ஒண்ணு.16ஆம்தேதி திங்கட்கிழமை சுமன் பிறந்தநாள் .அந்த விழாவை  அன்னைக்கு வச்சுக்கலாம்.”

”ஏங்க? நீங்க ரொம்பப் பிடிவாதமா நடத்தியே தீருவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறீங்க. யோசிச்சுச் செய்யுங்க.”

”இதோ பாரு.நான் முன்னாலயே சொல்லிட்டேன்.நல்லா யோசிச்சுத்தான் முடிவு பண்ணி யிருக்கேன்.நம்ம வீட்டில ரொம்ப நாளா எதுவும் விழாவே நடக்கலே.இது ஒரு வாய்ப்பு. ரொம்பச் சிறப்பா நடத்தப் போறேன்.சும்மா எதையாவது சொல்லிட்டிருக்காம,சந்தோசமா ஏற்பாடுகளைக் கவனி”

“அதோ சுமன் வந்துட்டாங்க”

”டேய் சுமன் உன் பிறந்த நாள் அன்னிக்கு விழாவை வச்சிருக்கேன்.இன்னைக்கே அழைப்பிதழ் அச்சடிக்கணும்.நீ ஒன்னோட நண்பர்களையெல்லாம் கண்டிப்பா கூப்பிடு. ரொம்பச் சிறப்பா நடத்திடலாம். வா,சையத் பாக்கருக்குப் போய் உனக்கு நல்ல சூட் தைக்கக் குடுத்துடலாம். அப்படியே ராஜசேகரைப் பார்த்துச் சாப்பாட்டுக்கும் சொல்லிடலாம்.இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டதே இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நம்ம அய்யாசாமி கிட்ட மத்த ஏற்பாடுகளையெல்லாம் செய்யச் சொல்லிடலாம்”” 

சூடு பிடிக்கிறது 

சூட் தைக்கக் கொடுத்தாகி விட்டது.

அழைப்பிதழ் வந்ததும் சுமார் 250 பேருக்கு-,நண்பர்கள்,உறவினர்கள் –அழைப்பிதழ் வைக்கப்பட்டது.

டின்னர் மெனு தீர்மானிக்கப் பட்டது.

அனைத்தும்  வேகமாக நடந்தேறியது.

அந்த நாளும் வந்தது.

மாலை மணி 5.

அந்த அரங்கில் அனைவரும் குழுமியிருந்தனர்.

சுமனின்  அப்பா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு “என்ன இன்னும் மாணிக்கத்தைக் காணோமே” என்று சொல்லி முடிக்கவும் யாரோ மாணிக்கம் வந்தாச்சு என்றனர்.

மாணிக்கம் என்ற அந்த நபர் உள்ளே வந்தார். 

“ வா மாணிக்கம்,டேய் சுமன் அந்த பலகையில உட்கார்.மாணிக்கம் புதுசா பிளேடு எடுத்து அவனோட அந்த இளம் தாடி மீசையை வழிச்சிடு!”

நடந்தது. 

”சுமன்.போய் குளிச்சிட்டு புது சூட்டைப் போட்டுக்கிட்டு வா”

மாணிக்கத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

சுமன் வந்ததும் மாலை அணிவிக்கப்பட்டது.

 சுமன் கேக் வெட்டினான்

பாட்டு நடனம் என்று ஒரே கொண்டாட்டம்.

“டின்னர் தயார்.போய்ச் சாப்பிடுங்க.”

கொத்துக் கொத்தாகக் கூட்டம் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி நகர்கிறது.

விழா இனிதே நிறைவேறுகிறது

ஆம் இது சுமன் என்ற பையன் வயதுக்கு வந்த விழா.!
*******************************************************************
செய்தி:-:தாணே-இது போன்ற முன்பு நடந்திராத விழா ஒன்று,ஒரு பையன் வயதுக்கு  வந்ததற்காகஅவனது 17 ஆவது பிறந்ததினத்தில் அவனுக்கு முதல் முகச் சவரம் செய்து  விருந்துடன் கொண்டாடப்பட்டது-
--இந்தியாவின் நேரங்கள்-30-05-2015



21 கருத்துகள்:

  1. அடடே புதுமையான விழாதான் எமது வாழ்த்துகளும்....
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அருமையான புதுமையான விழா.

    இதுபோல தனக்கு ஏதும் விழா எடுக்கவில்லையே என ஏக்கப்பட்டான் என் கதையில் வரும் ’சீமாச்சு’ என்ற ஓர் கதா பாத்திரம். http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

    பதிலளிநீக்கு
  3. புதுமையாக இருக்கிறதே...
    தம +1

    பதிலளிநீக்கு
  4. வித்யாசமான அப்பாவா இருப்பார் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
  5. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா!!! பாவம் பசங்க, பின்ன எப்படிதான் அவங்கள ப்ரமோட் பண்றதாம்:)

    பதிலளிநீக்கு
  7. பையனுக்குப் புனித நீராட்டு!
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. இது போன்றல்லாம் நடக்கிறதா? இந்த மாதிரி சடங்குகளுக்கெல்லாம் வீணே செலவு செய்யாமல் ஆதரவற்றோர் தங்கும் விடுதியில் உள்ளோருக்கு ஒரு வேளை உணவளித்து மகிழ்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு